சத்யசோதாக் சமாஜம்

சத்யசோதாக் சமாஜம் என்பது 1873 செப்டம்பர் 24 இல் புனேயில் உள்ள ஜோதிராவ் பூலே அவர்களால் நிறுவப்பட்ட ஒரு சமூக சீர்திருத்த இயக்கம் ஆகும். இந்திய சமூக சூழலில் சூத்திரர்கள் மற்றும் தீண்டாமைக்கு உட்பட்ட சாதிகளை சுரண்டல் மற்றும் அடக்குமுறைகளிலிருந்து விடுவிப்பதே இதன் நோக்கம் ஆகும்.  [1][2]

மகாத்மா பூலேவின் எழுத்துக்கள் மற்றும் இயக்கங்கள் மூலம் ஜாதி படிநிலையையும் பிராமண மேலாதிக்கத்தையும் கண்டித்தார். மேலும் இந்து மதம் சார்ந்த நூல்கள் , ஏற்றத்தாழ்வைவும் , மக்களிடையே சுரண்டல் போக்கையும் , குருட்டு மற்றும் தவறான வழிபாட்டு சடங்குகள் மற்றும் பரவலாக இருக்கும் போலித்தனத்தையும் அவர் கண்டனம் செய்தார். சத்தியசோதக் சமாஜம் மனிதகுலம் மகிழ்ச்சி , ஒற்றுமை, சமத்துவம், எளிமையான மதக் கொள்கைகள் மற்றும் எளிமையான சடங்குகள் ஆகியவற்றுடன் வாழ மகாத்மா பூலே தொண்டாற்றினார்.  [சான்று தேவை]

 ஜோதிராவ் கோவிந்தபூலேவிற்கு பிறகு 20- ஆம் நூற்றாண்டில் மராத்திய ஆட்சியாளரும் கோல்ஹாபூர் மன்னருமான ஷாகு மகாராஜ், மற்றும் மராத்தியத் தலைவர்களான நானா பாட்டீல், கந்தரோவோ பாகல் மற்றும் மாதவ்ராவ் பாகல் ஆகியோரால் இந்த இயக்கமானது உயிருடன் இருந்தது.[சான்று தேவை].

குறிப்புகள்தொகு

  1. "Life & Work of Mahatma Jotirao Pule". University of Pune. மூல முகவரியிலிருந்து 2009-03-11 அன்று பரணிடப்பட்டது.
  2. "GKToday".

மேலும் படிக்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்யசோதாக்_சமாஜம்&oldid=2722583" இருந்து மீள்விக்கப்பட்டது