சத்யானந்தா சித்தர்

இந்தியாவின் சித்தர்களில் ஒருவர்

சத்யானந்தா சித்தர் என்பவர் சென்னை நகரில் கிண்டியில் சமாதியடைந்த சித்தராவார்.[1] இவரை கோழிப்பீ சித்தர் எனவும் கோழிப்பீ சாமிகள் எனவும் அழைக்கின்றனர். இவர் சாய் பாபாவின் நண்பர் என்றும், வட இந்தியாவிலிருந்து இங்கு வந்தவர் என்றும் கூறப்படுகிறது.[1]

சத்யானந்தா சித்தர்
பிறப்புவட இந்தியா
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்கோழிப்பீ சித்தர்
முக்கிய ஆர்வங்கள்
நவகண்ட யோகம்,
ரசவாதக் கலை
செல்வாக்குச் செலுத்தியோர்
செல்வாக்குக்கு உட்பட்டோர்
  • லோகநாத முதலியார்

இவர் இமயமலை போன்ற பல்வேறு தலங்களுக்குச் சென்றுவிட்டு தமிழகத்தல் திருவண்ணாமலைக்கு வந்துள்ளார்.[1] அங்கே சில காலம் தங்கியிருந்தவர் வில்வவனமாக இருந்த கிண்டியில் வந்து தங்கியுள்ளார். அவரது உயரமான உருவமும், ஜடாமுடியும் கண்ட மக்கள் அவரை வழிபட்டு வந்தனர்.[1]

லோகநாத முதலியார் என்பவர் இவருக்கு பணிவிடைகள் செய்து வந்துள்ளார். அவரது குடும்பத்தினர் கோழிப்பீ சாமிகளும், சாய் பாபாவும் இரவில் உரையாடுவதை கேட்டுள்ளார்கள்.[1]

1904 ஆம் ஆண்டு சத்யானந்தா சித்தர் ஜீவ சமாதியடைந்தார். அவரது விருப்படி பத்துக்கு பத்து அடிகள் அளவில் குழி தோண்டி அதனுள் சென்று சமாதி நிலை அடைந்தார். அவருக்கு அருகில் நண்பர் சாய் பாபாவிற்கு கோயில் எழுப்ப கோரிக்கை வைத்துள்ளார். தற்போது கிண்டியில் கோழிப்பீ சித்தர் சமாதிக்கு அருகே சாய் பாபா கோயில் அமைக்கப்பட்டுள்ளது.[1]

சித்துகள்

தொகு
  • சிறுவர்கள் இவர் மீது கோழிப்பீயை தூக்கிப் போட, அதனை ரசவாதக் கலையின் மூலம் தங்கமாக மாற்றி திருப்பி தந்துள்ளார்.[1]
  • நவகண்ட யோகத்தில் தன்னுடைய உடலை கூறு கூறாக போட்டபடி இருப்பார். மக்கள் வரும்போது முழு உருவில் காட்சி தருவார்.

ஆதாரங்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 சித்தர்கள் அறிவோம்: ஞானிகள் உலவும் வனம்- சத்யானந்தா சுவாமிகள் - எஸ்.ஆர்.விவேகானந்தம் - தி இந்து நாளிதழ் May 28, 2015
"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்யானந்தா_சித்தர்&oldid=3789399" இலிருந்து மீள்விக்கப்பட்டது