இரசவாதம்

(ரசவாதம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அல்-கிமியா (الكيمياء), என்ற அராபிய வார்த்தையிலிருந்து பெறப்பட்ட alchemy (இரசவாதம்) என்பது அறிவியல் ஆய்வு, மறை பொருள் ஆய்வு போன்ற கலவையாக கிரீஸ், சைனா, எகிப்து மற்றும் அரேபியா போன்ற நாடுகளிலிருந்து பெற்றவை எனக் கருதலாம். அக்காலத்தில் உருவான இந்த இரசவாதக் கொள்கை, இறவாத் தன்மையை ரசவாதிகள் அருந்துவதற்குரிய நோய்களைத் தராத தன்மையையும், உலோகங்களை மாற்றும் நீர்மம் (Elixir of life) மற்றும் மதிப்புக் குறைந்த உலோகங்களைத் தங்கமாக மாற்றும் 'தத்துவ ஞானிகளின் கல்' (Philosopher's stone) ஆகியவற்றைக் கண்டறிவதிலும் செலுத்தப்பட்டன. இவையெல்லாம் நடைபெற முடியாத செயல்கள் என்பது இன்றைய நாளில் கருதினாலும், இரசவாதிகள் இந்த ஆய்வுகளை 2000 ஆண்டுகளாகத் தொடர்ந்தனர். இவற்றில் தத்துவக் கல் மற்றும் நோய் தீர்க்கும் உலோக மாற்றும் நீர்மம் ஆகியவற்றை முன்னோர்கள் கனவுகளில், ஒரு சில கருத்துக்கள் கண்டறியப்பட்டன.

ரசவாதம் 20 ஆம் நூற்றாண்டுவரை பள்ளிகளின் சிக்கலான வலையமைப்பு மற்றும் குறைந்தது 2,500 ஆண்டுகள் வரையிலாவது நீள்கின்ற காலத்தில் புராதான எகிப்து, மெசபடோமியா (நவீன ஈராக்), இந்தியா (நவீன இந்தியத் துணைக்கண்டம்), பெர்ஸியா (நவீன இரான்), சீனா, ஜப்பான், கொரியா, காவியகால கிரெக்கோ-ரோமானிய உலகம், மத்திய இஸ்லாமிய உலகம், மற்றும் மத்திய ஐரோப்பா ஆகியவற்றில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

பெயர் வரலாறு

தொகு

பாதரசம் இவ்வித்தையில் பயன்பட்டதாலேயே இக்கலையை தமிழில் 'ரசவாதம்' என்று அழைத்தார்கள். அல்கெமி (ரசவாதம்) (alchemy) என்ற வார்த்தை மத்தியகால லத்தீன் வார்த்தையான அல்கைமா (alchimia) என்பதைச் சேர்ந்த பழம் பிரெஞ்சு அல்குமி (alquimie) என்பதிலிருந்தும், அதற்கடுத்தபடியாக அராபிய அல்-கிமியா (al-kimia) (الكيمياء) என்பதிலிருந்தும் பெறப்பட்டிருக்கிறது. இந்த சொற்பதமேகூட al- (الـ‎) என்ற அராபிய வரையறு சுட்டின் கூடுதல் சேர்ப்போடு பண்டைக்கால கிரேக்க கெமியா (chemeia) (χημεία) என்பதிலிருந்து பெறப்பட்டிருக்கிறது.[1] புராதான கிரேக்க வார்த்தை எகிப்திற்கான எகிப்திய மொழி வடிவ "கீமியா (Chemia)" (Χημία)[2] என்பதிலிருந்து பெறப்பட்டிருக்கிறது என்று கருதப்பட்டது, இதுவும்கூட புராதான எகிப்திய வார்த்தையான கீமே (kēme) என்பதை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது (படக்குறியீடு க்மி (Khmi), கறுப்பு நிலம் , பாலைவன மணல் என்பதற்கு எதிராக).[1] இந்த வார்த்தை தற்போது "கலவை" என்பதைக் குறிக்கின்ற மற்றும் மருந்தாக்கியல் ரசாயனம் என்பதைக் குறிப்பிடுகின்ற குமியா (chumeia) (χυμεία) என்ற வார்த்தையிலிருந்து பெறப்பட்டதாக கருதப்படுகிறது.[3] பின்னாளில் அலெக்ஸாண்ட்ரியாவில் ரசவாதம் உருவானதால் இந்த வார்த்தை புராதான எழுத்தாளர்களால் Χημία என்பதிலிருந்து பெறப்பட்டதாக கருதப்பட்டது, இது பின்னாளில் χημεία என்று உச்சரிக்கப்பட்டது என்பதுடன் இதனுடைய அசல் பொருள் மறக்கப்பட்டுவிட்டது.[4]

ஒரு தத்துவ மற்றும் ஆன்மீகப் பயிற்சியாக ரசவாதம்

தொகு
 
"ரசவாதியான ரெனல்", ஓவியம் சர் வில்லியம் டக்ளஸ், 1853
 
ரேமன் லல்லின் ரசவாத கட்டுரையைச் சேர்ந்த பக்கம், 16 ஆம் நூற்றாண்டு

அல்கெமி என்பது கிரேக்க வார்த்தை. 16 ஆம் நூற்றாண்டில் பிரித்தெடுக்க மற்றும் மீண்டும் ஒன்றாக சேர்க்க என்ற பொருளைக் கொண்டிருந்தை அடுத்து ஸ்பிஜிரிக் கலை என்று அறியப்பட்டது, இந்த வார்த்தையை பாராசெல்ஸஸ் உருவாக்கியிருக்கலாம். இதனை லத்தீனில் உள்ள மூதுரை ஒன்றோடு பொருத்திப்பார்க்கலாம்: Solve et Coagula — பிரித்து, மீண்டும் ஒன்றாக சேர்த்தல் (அல்லது "கரையச்செய்து கெட்டியாக்குதல்" ).[5]

செம்பு பொன்னாகும் சிவாயநம வெனில்
செம்பு பொன்னாகத் திரண்டது சிற்பரம்
செம்பு பொன்னாகும் ஸ்ரீயும் கிரியும் எனச்
செம்பு பொன்னான திருவம்பலவே.

-திருமூலர்

ஒரு ரசவாதியின் மிகச்சிறந்த இலக்கு சாதாரண உலோகம் வெள்ளியை (தாவர ரசவாதம் அல்லது "ஸ்பிஜிரிக்" என்று குறைந்த அளவிற்கே தெரிய வருவது) தங்கமாக (இது கிரிஸ்ஸோபோயியா எனப்படுகிறது) இயல்புமாற்றம் செய்வதாக இருந்தது; "சஞ்சீவி" அல்லது "இறவாத் தன்மையை" உருவாக்குவது அனுமானிக்கப்பட்டபடி எல்லா நோய்களையும் தீர்க்கும் தீர்வாகவும் வாழ்வை நெடுநாட்களுக்கு நீட்டிக்கச் செய்வதாகவும் கருதப்பட்டது; அத்துடன் இது பிரபஞ்ச தீர்வின் கண்டுபிடிப்பாகவும் கருதப்பட்டது.[6] இருப்பினும் இவை இந்த பயிற்சியின் ஒருசில பயன்கள் மட்டுமல்லை, இவைதான் ஆவணப்படுத்தப்பட்டு நன்கறியப்பட்டவையாக இருக்கின்றன. சில ரசவாதப் பள்ளிகள் ஈயத்தைத் தங்கமாக்கும் இயல்புமாற்றம் பௌதீக உடலை (ஈயம்) தங்கமாக இறப்பின்மையை அடையும் நோக்கத்தோடு இயல்புமாற்றம் செய்வதுடன் பொருத்திப்பார்க்கத்தக்கது என்று வாதிடுகின்றன.[7] இது உள்வய ரசவாதம் எனப்படுகிறது. மத்திய காலங்களில் தொடங்கி, பெர்ஸிய மற்றும் ஐரோப்பிய ரசவாதிகள் "தத்துவாதியின் கல்" குறித்த தேடலில் தங்களுடைய முழு முயற்சியையும் செலவிட்டனர், இந்தக் கல் இந்த இலக்குகளில் ஒன்றையோ அல்லது இரண்டையுமோ அடைவதற்கான அத்தியாவசிய உட்பொருளாக இருக்கக்கூடிய புராணீக மூலப்பொருள் என்று கருதப்பட்டது. பனிரெண்டாம் போப் ஜான் ரசவாத போலித்தனத்திற்கு எதிராக கட்டளை ஒன்றைப் பிறப்பித்தார் என்பதோடு சிஸ்ட்ரேஷன்கள் தங்களுடைய உறுப்பினர்களுக்கிடையே இந்தப் பயிற்சியை தடை செய்தனர். 1403 ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் ஐந்தாம் ஹென்றி ரசவாதப் பயிற்சியை தடைசெய்தார். 14 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பியர்ஸ் புளோக்மன் மற்றும் சாஸர் ஆகிய இருவரும் ரசவாதிகளை திருடர்களாகவும் பொய்யர்களாகவும் சித்தரித்து ஓவியங்களை வரைந்தனர். முரண்பாடாக, புனித ரோமப் பேரரசரான இரண்டாம் ருடால்ஃப் 16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பெருவில் உள்ள தன்னுடைய அரண்மனையில் பல்வேறு ரசவாதிகளுக்கு அவர்களுடைய பணிக்காக பரிசளித்திருக்கிறார்.

இன்று இருக்கும் "ரசாயனத்" தொழில்களுக்கு ரசவாதிகள் பங்களித்திருக்கின்றனர் என்று ஒரு பரவலான நம்பிக்கை இருக்கிறது-தாதுக்கள் சோதனை மற்றும் பிரித்தெடுத்தல், உலோக வேலைப்பாடு, வெடிமருந்து, மை, சாயங்கள், வர்ணங்கள், அழகுசாதனப்பொருட்கள் தயாரிப்பு, தோல் பதனிடுதல், செராமி்க்குகள், கண்ணாடி தயாரிப்பு, சாறுகள், மதுபானங்கள் தயாரிப்பு மற்றும் இன்னபிற (அக்வா வைட்டேயின் ,"வாழ்வின் தண்ணீர்", தயாரிப்பு ஐரோப்பிய ரசவாதிகளிடையே மிகவும் பிரபலமான "பரிசோதனையாக" இருந்து வந்திருப்பதுபோல் தெரிகிறது). ரசவாதிகள் ஐரோப்பாவில் காய்ச்சி வடிகட்டுதலுக்கு பங்களித்திருக்கின்றனர். கிரேக்க தத்துவம் மற்றும் எகிப்திய மெஸபடோனிய தொழில்நுட்பத்தில் தொடக்கத்திலிருந்தே ரசவாதத்தின் இரட்டைத் தோற்றம் ஒரு இரட்டை அணுகுமுறையாக இருந்திருக்கிறது: இந்த தொழில்நுட்ப, செயல்பாட்டு அம்சமுள்ள ஒன்றை மேரி-லூயிஸ் வான் ஃபிரான்ஸ் வெளிப்பகுதியை நோக்கித் திரும்புவது என்று அழைக்கிறார், புதிரான, ஊகத்தினாலான, உளவியல் அம்சமுள்ள ஒன்றை வான் ஃபிரான்ஸ் உட்புறம் நோக்கித் திரும்புவது என்று அழைக்கிறார். இவை ஒன்றுக்கொன்று நேரடியானவை, ஆனால் பதிலாக ஈடுசெய்யக்கூடியவை, இதை நிஜ உலகத்தில் செய்ய தியானம் செய்ய வேண்டும்.[8]

பனாபோலிஸ் ஸோஸிமோஸ் போன்ற சில தொடக்ககால ரசவாதிகள் ரசவாதத்தை ஆன்மீகப் பயிற்சியாகப் பார்த்ததாக பதிவுசெய்யப்பட்டிருக்கிறது, அத்துடன் மத்திய காலகட்டங்களில் மீபொருண்மையியல் அம்சங்கள், மூலப்பொருட்கள், பௌதீக நிலைகள் மற்றும் மூலக்கூறு பொருள் நிகழ்முறைகள் ஆகியவை ஆன்மீக தனியுடைமைகளுக்கான மேலோட்ட உருவகங்களாகவும் முடிவில் வடிவ மாற்றங்களாகவும் இருந்திருக்கின்றன. இந்த அர்த்தத்தில், 'ரசவாத சூத்திரங்களின்' நேரடி அர்த்தங்கள் இருளார்ந்தவை, அவற்றின் நிஜமான ஆன்மீக தத்துவத்தை மறைப்பவை, இது மற்றவகையில் "அபாயகரமான தொந்தரவு தரக்கூடியது" என்றால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு மதத்துரோக குற்றம்சாட்டப்படும் என்ற அடிப்படையில் மத்தியகால கிறிஸ்தவ சபையில் விவாதத்திற்குரிய ஒன்றாக இருந்தது.[9] இவ்வாறு பொதுவான உலோகங்களை தங்கமாக மாற்றும் இயல்புமாற்றம் மற்றும் பிரபஞ்ச சஞ்சீவி ஆகிய இரண்டும் முழுமை, ஆரோக்கியம், சீர்குலையாதது மற்றும் நீடித்த நிலை ஆகியவற்றை நோக்கிய முழுமையற்ற, நோயுற்ற, சீர்குலையக்கூடிய மற்றும் குறுகிய காலம் நீடிக்கின்ற என்பதிலிருந்து தோன்றுவதை குறியீடாக்குகின்றன; தத்துவவாதியின் கல் இந்த தோற்றத்தை சாத்தியமாக்குகின்ற புதிரார்ந்த சாவியைக் குறிக்கிறது. இந்தக் கல் மறைக்கப்பட்ட ஆன்மீக உண்மை அல்லது இந்த இலக்கிற்கு இட்டுச்செல்லக்கூடிய சக்தியைக் குறிப்பதாக இருக்கிறது. இந்தக் கண்ணோட்டத்தின்படி எழுதப்பட்ட உரைகளில், ரகசிய ரசவாதக் குறியீடுகள், விளக்கப்படங்கள் மற்றும் உரைசார்ந்த பின்னாளைய ரசவாத வேலைகளின் கற்பனை ஆகியவை பல்வேறு அடுக்குகளிலான அர்த்தங்கள், மறைகுறியீடுகள் மற்றும் குறியீடுகள் மற்ற சமமான ரகசிய வேலைகளுக்கான குறிப்பாக அமைந்திருக்கின்றன; அத்துடன் இது அவற்றின் உண்மையான அர்த்தத்தைக் கண்டுபிடிக்கும் விதமாக கடுமையான உழைப்போடு "குறிநீக்கமும்" செய்யப்பட்டிருக்கிறது.

தன்னுடைய ரசவாத வினா-விடைப் புத்தகத்தில் , பாராசெல்ஸஸ் தான் உலோகங்களைப் பயன்படுத்துவது குறியீடே என்று தெளிவாகக் குறிப்பிடுகிறார்:

கேள்வி: தத்துவவாதிகள் தங்களுக்கு வேண்டிய பருப்பொருளை எடுத்துக்கொள்ளும் தங்கம் மற்றும் வெள்ளியைப் பற்றிப் பேசுகிறார்கள் எனும்போது அவர்கள் சாதாரணமாக தங்கம் மற்றும் வெள்ளியைக் குறிப்பிடுகிறார்கள் என்று நாம் ஊகித்துக்கொள்ளலாமா? பதில்: கூடாது; சாதாரண வெள்ளி மற்றும் தங்கள் ஆகியவை மரணமுற்றவை, அதேசமயத்தில் தத்துவவாதிகளுக்கு அவை வாழ்வின் ஆற்றல் நிரம்பியவை.[10]

உளவியல்

தொகு

ரசவாத குறியீ்ட்டுவாதம் அவ்வப்போது உளவியலாளர்களாலும் தத்துவவாதிகளாலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கார்ல் யுங் ரசவாத குறியீட்டியல் மற்றும் கோட்பாட்டை மறு விசாரணை செய்திருக்கிறார் என்பதோடு ரசவாத படைப்புகளை ஒரு ஆன்மீகப் பாதையின் உள்ளார்ந்த அர்த்தமாக காட்டத் தொடங்கினார்.[11][12] ரசவாதத் தத்துவம், குறியீடுகள் மற்றும் முறைகள் பின்-நவீன பின்புலங்களில் ஒருவகையான மறுமலர்ச்சி அம்சங்களைப் பெற்றவையாக இருக்கின்றன.[சான்று தேவை]

யுங் ரசவாதத்தை தனிமைப்படுவதை அடைவதற்கென்று அர்ப்பணிக்கப்பட்ட மேற்கத்திய தனி-உளவியலாக பார்க்கிறார்.[11] அவருடைய விளக்கத்தில், ரசவாதம் என்பது நாஸ்டிஸிஸம் மறுமலர்ச்சிக்குள்ளாக[13] தன்னுடைய தூய்மைப்படுத்தலின் மூலம் எஞ்சியிருக்கின்ற ஒரு பாத்திரம் என்கிறார், இந்தக் கருத்தாக்கத்தை ஸ்டீஃபன் ஏ. ஹோலர் போன்ற மற்றவர்களும் பின்பற்றுகின்றனர். இந்தப் பொருளில் யுங் ரசவாதத்தை கிழக்கத்திய யோகாவோடு ஒப்பிடுகிறார் என்பதோடு இது கிழக்கத்திய மதங்கள் மற்றும் தத்துவங்களைக் காட்டிலும் மேற்கத்திய மனநிலைக்கு மிகவும் போதுமானது என்றும் காண்கிறார். ரசவாதப் பயிற்சி ரசவாதியின் மனம் மற்றும் ஆன்மாவை மாற்றுவது போன்று தோன்றுகிறது. முரண்பாடாக, மேற்கத்திய மக்களின் மனநிலையில் ஏற்படும் இடைவிடாத மாற்றங்கள் தனிநபர்வாதத்திலான எந்த ஒரு முக்கியமான நிலைக்கும் உட்படுவது ரசவாதக் கற்பனையை உருவாக்குகிறது என்பதுடன் ஒரு நபரின் சூழ்நிலைக்கு தொடர்புடையதும் ஆகும்.[14]

தன்னுடைய பகுப்பாய்வு உளவியல் அடிப்படையில் சீன ரசவாத உரைகளுக்கான அவருடைய விளக்கத்தில் கிழக்கத்திய மற்றும் மேறகத்திய ரசவாத படிமம் மற்றும் மையக் கருத்தாக்கங்களின் செயல்பாட்டை ஒப்பிடுகிறது என்பதுடன் இவ்வகையில் இது உள்வய மூலாதாரங்களுக்கான சாத்தியத்தையும் தருகிறது (நவீனங்கள்).[15][16]

யுங்கின் மாணவரான மேரி-லூயிஸ் வான் ஃபிரான்ஸ் ரசவாதம் மற்றும் அதனுடைய உளவியல் பொருள் குறித்த யுங்கின் ஆய்வுகளைத் தொடர்கிறார்.

தலைசிறந்த படைப்பு

தொகு

பெரும் படைப்பு ; இதனுடைய நான்கு நிலைகளின் புதிரார்ந்த விளக்கம்:[17]

  • நைக்ரிடோ (-அழுகல்) , கருமையடையச் செய்தல் (-அழுகச்செய்தல்): சீர்கெடுதல், நீர்த்துப்போதல், பிரித்தெடுத்தல், மேலும் பார்க்க ரசவாதத்தில் சூரியன்கள் - கறுப்புச் சூரியன்
  • அல்பிடோ, வெண்மையாக்குதல்: தூய்மைப்படுத்துதல், தூய்மையில்லாதவற்றை எரித்தல்; நிலவு, பெண்
  • சிட்ரினிடஸ், மஞ்சளாக்குதல்: ஆன்மீகமயப்படுத்தல், அறிவு விளக்கம்; சூரியன், ஆண்;
  • ருபிடோ, சிவப்பாக்குதல்: மனிதனை கடவுளுடன் ஐக்கியமாக்குதல், வரம்பில்லாததைக் கொண்டு வரம்பை ஐக்கியமாக்குதல்.

15 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் பல எழுத்தாளர்கள் சிட்ரினிடஸை ருபிடோ வோடு ஒன்றுசேர்க்க முனைந்ததோடு மூன்று நிலைகளை மட்டுமே கவனத்தில் எடுத்துக்கொண்டனர்.[18]

இருப்பினும், ரசாயனக் கலவை நடக்கின்ற சிட்ரினிடேஸில், தத்துவாதியின் கல் இல்லாமலே தத்துவார்த்த பாதரசம் உருவாக்கப்படுகிறது, படைப்பின் வெற்றி அடையப்பெறவே இல்லை.[19]

பெரும்படைப்பிற்குள்ளாக புனித மூலக்கூறு உருவாக்கப்படுகிறது, அதாவது புனித மூலப்பொருளிலிருந்து பெறப்பட்ட 'புனித பருப்பொருள்கள்', அதாவது 'புனித மூலப்பொருள்கள்', பெரும்படைப்பை அடையும் நிகழ்முறைக்குத் தேவைப்படுகின்றன.[சான்று தேவை]

வரலாற்று ஆராய்ச்சிக்குரிய விஷயமாக ரசவாதம்

தொகு

ரசவாத வரலாறு தீவிரமான கல்வித்துறையாகியிருக்கிறது. ரசவாதிகளின் தெளிவற்ற ரசவாத மொழிக்கு படிப்படியாக விளக்கமளிக்கப்படுகிறது, வரலாற்றாசிரியர்கள் மேற்கத்திய கலாச்சார வரலாற்றின் முகங்கள் மற்றும் பயிற்சிகளுக்கு இடையில் உள்ள அறிவார்த்த தொடர்புகள் குறித்து மிகுந்த விழிப்புணர்வு உள்ளவர்களாக இருக்கின்றனர், அவை அறிவுஜீவி சமூகத்தின் சமூகவியல் மற்றும் உளவியலான கபாலிஸம், ஆன்மீகவாதம், ரோஸிகுரூசியனிஸம் மற்றும் பிற புதிரார்ந்த அமைப்புக்களான மறைகுறியீடாக்கம், சூனியவாதம் மற்றும் அறிவியல் மற்றும் தத்துவத்தின் எழுச்சி.

வரலாறு

தொகு

வரலாற்று அர்த்தத்தில் ரசவாதம் என்பது சாதாரண உலோகங்களை மதிப்புமிக்க தங்கமாக மாற்றச்செய்கின்ற தேடல். மேரி-லூயிஸ் வான் ஃபிரான்ஸின் கூற்றுப்படி, ரசவாதத்தின் தொடக்கநிலை அடித்தளங்கள் எகிப்திய உலோகத் தொழில்நுட்பம் மற்றும் பிணப் பதப்படுத்தல், மெஸபடோமிய தொழில்நுட்பம் மற்றும் வானசாஸ்திரம் மற்றும் சாக்ரடீஸிற்கு முந்தைய கிரேக்க தத்துவாதிகளான எம்படகிள்ஸ், மைல்டஸின் தேல்ஸ் மற்றும் ஹெராகிளிடஸ்.[8]

மேற்கத்திய ரசவாதத்தின் தோற்றம் பண்டைக்கால எகிப்தில் காணக்ககூடியவையாக இருக்கின்றன.[20] ஐந்தாம் லேடன் பாப்பிரஸ் மற்றும் ஸ்டாக்ஹோம் பாப்பிரஸ் ஆகியவை கிரேக்க மாயாவாத எழுத்துக்களுடன் இணைந்து இப்போதும் இருந்துவரும் ரசவாதத்தின் முதல் "புத்தகத்தைக்" கொண்டிருக்கின்றன. பாபிலோனிய,[21] கிரேக்க மற்றும் இந்தியத் தத்துவவாதிகள் நான்கு அடிப்படை தனிமங்கள் மட்டுமே இருக்கின்றன என்ற கோட்பாட்டை உருவாக்கியிருக்கின்றனர் (இன்று இருக்கும் 117 ரசாயன தனிமங்களுக்குப் பதிலாக, பயன்மிக்க ஒப்புமை என்னவெனில் அதிகபட்ச ஒற்றுமையுள்ள பருப்பொருளின் அடிப்படை நிலைகளே ஆகும்); நிலம், நெருப்பு, தண்ணீர் மற்றும் காற்று. தங்களுடைய வாதத்தை நிரூபிக்கும் விதமாக கிரேக்கத் தத்துவவாதிகள் ஒரு மரத்துண்டை எரித்தனர்: இந்த மரத்துண்டு நிலம், அதை எரிக்கும் தணல்கள் நெருப்பு, வெளியிடப்படும் புகையே காற்று, அடிப்பகுதியில் தணல் இல்லாமல் எரிந்துகொண்டிப்பதே நுரைத்துக்கொண்டிருக்கும் தண்ணீர். இதன் காரணமாக, விரைவில் பரவவிருக்கும் அனைத்தினுடைய இதயப்பகுதியில் இருக்கும் நான்கு "தனிமங்களும்" பின்னாளில்தான் ஜேபிர் இபின் ஹயானின் ஏழு தனிமங்கள் (சல்ஃபர் மற்றும் பாதரசம் கண்டுபிடிக்கப்பட்டதோடு) கோட்பாட்டால் மத்திய காலப்பகுதியில் மாற்றியமைக்கப்பட்டது, இந்தக் கோட்பாடும் ஆரம்பநிலை நவீன காலகட்டத்தின்போது ரசாயன தனிமங்களின் நவீனக் கோட்பாட்டால் மாற்றியமைக்கப்பட்டது.

நான்கு நூற்றாண்டுகளுக்கும் மூன்று கண்டங்களிலும் விரிவடைந்திருந்திருந்த சில தத்துவப் பாரம்பரியங்களையும் ரசவாதம் உடன் இணைத்துக்கொண்டிருந்தது. இந்தப் பாரம்பரியங்களின் ரகசிய மற்றும் குறியீட்டு மொழிக்கான பொதுவான நெருக்கம் அவற்றின் பரஸ்பர தாக்கங்கள் மற்றும் "இனவகை" உறவைக் கண்டுபிடிப்பதை மிகவும் கடுமையானதாக மாற்றிவிட்டது. ரசவாதமானது இஸ்லாமிய ரசவாதியான ஜேபிர் இபின் ஹயான் (ஐரோப்பாவில் "ஜேபர்" என்று அழைக்கப்படுபவர்) படைப்புக்களைக் கொண்டு எட்டாம் நூற்றாண்டில் மிகவும் தெளிவான முறையிலேயே தொடங்குகிறது, இவர் உருவகப்படுத்தலாகவே இருந்த பண்டைய கிரேக்க மற்றும் எகிப்திய ரசவாதிகளின் வேலைகளுக்கு மாற்றாக ஆய்வகத்தை அடிப்படையாகக் கொண்ட அறிவியல் ஆராய்ச்சிக்கான முறைப்படியான மாற்றும் பரிசோதனைப்பூர்வமான அணுகுமுறையை அறிமுகப்படுத்தினார்.[22]

புகழ்பெற்ற பிற ரசவாதிகள் பெர்ஸியாவைச் சேர்ந்த ராசேஸ், அவிசேனா மற்றும் இமாத் உல் தின்; சீன ரசவாதத்தில் வைய் பொயாங் ; மற்றும் இந்திய ரசவாதத்தில் நாகார்ஜுனர்; மற்றும் ஐரோப்பிய ரசவாதத்தில் ஆல்பெர்டஸ் மேக்னஸ் மற்றும் சுடோ-கிபெர்; அதனுடன் பெயர் தெரியாமல் பிதிப்பிக்கப்பட்ட முட்டஸ் லிபெரின் ஆசிரியர், 17 ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சில் பதிப்பிக்கப்பட்ட இந்தப் புத்தகம் 'வார்த்தைகளற்ற புத்தகம்' என்பதோடு 15 குறியீடுகள் மற்றும் விளக்கப்படங்களைப் பயன்படுத்தி தத்துவவாதியின் கல்லை உருவாக்குவதற்கான வழிகாட்டி என்று கூறிக்கொண்டது. தத்துவவாதியின் கல் என்பது ரசவாதத்தில் ஒருவருடைய சக்தியை அதிகரிக்கச்செய்யக்கூடிய திறனுள்ள ஒரு பொருள் என்று கருதப்பட்டது, இது சாத்தியமென்றால், இது பயன்படுத்துபவருக்கு அவர் எரிவது மற்றும் மூழ்கிப்போவதில் பலியானால் தவிர வயதற்ற மரணமின்மையை வழங்கும்; இந்தக் கல்லின் உருவாக்கத்தில் நெருப்பு மற்றும் தண்ணீர் ஆகிய இரண்டும் இரண்டு பெரிய தனிமங்களாக சேர்க்கப்பட்டிருக்கின்றன என்பதே பொதுவான நம்பிக்கை.

சீன மற்றும் ஐரோப்பிய ரசவாதிகள் வகையில் இவை இரண்டிற்கும் வேறுபாடுகள் இருக்கின்றன. ஐரோப்பிய ரசவாதிகள் ஈயத்தை தங்கமாக இயல்புமாற்றம் செய்ய முயற்சித்தனர் என்பதோடு அந்த தனிமம் எந்தளவிற்கு பயனற்றது அல்லது விஷத்தன்மை வாய்ந்தது என்பதைப் பொருட்படுத்தாமல் அந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் ராஜாங்க வகையில் சட்டத்திற்கு புறம்பானதாக்கப்படும்வரை தொடர்ந்து முயற்சித்தபடியே இருந்தனர். இருப்பினும். சீனர்கள் இந்த தத்துவவாதியின் கல் அல்லது ஈயத்தை தங்கமாக இயல்புமாற்றம் செய்வதில் கவனம் செலுத்தவில்லை; அவர்கள் இதுகுறித்து பெரும் நன்மையைத் தரக்கூடிய மருத்துவத்திலேயே அதிக கவனத்தை செலுத்தினர். அறிவொளிக்காலத்தின்போது, இந்த "அமுதங்கள்" இவை சோதனை மருந்துகளாக ஆகும்வரை நோயுற்ற நிலைக்கு வலுவான குணப்படுத்திகளாக இருந்தன. சாதாரணமாக, பெரும்பாலான சோதனைகளும் மரணத்தில் முடிவுறுபவையாகவே இருந்தன, ஆனால் நிலைப்படுத்தப்பட்ட அமுதங்கள் பெரும் பயனைத் தந்தன. மற்றொருபுறம், இஸ்லாமிய ரசவாதிகள் இது உலோகங்களின் இயல்புமாற்றத்திற்கானதா அல்லது வாழ்வின் செயற்கை உருவாக்கத்திற்கானதா அல்லது மருந்து போன்று நடைமுறை பயன்பாட்டிற்கானதா என்பது போன்று பல்வேறு காரணங்களுக்காக ரசவாதத்தில் ஆர்வம் காட்டினர், .

பதினேழாம் நூற்றாண்டின்போது தனி அறிவியலாக இருந்த ரசாயனம் ரசவாதத்திலிருந்தே பெறப்பட்டிருக்கிறது,[சான்று தேவை] "ரசாயனத்தின் தந்தை"[23] என்றறியப்படும் ராபர்ட் போயல் படைப்புக்களிலிருந்து இது தொடங்குகிறது, இவர் தன்னுடைய "தி ஸ்கெப்டிகல் கிமிஸ்ட்" என்ற புத்தகத்தில் தனிமங்களின் கருத்தாக்கங்கள் குறித்து பாராசெல்ஸஸ் மற்றும் பழம் அரிஸ்டோடெலியன் மீது தாக்குதல் தொடுக்கிறார். இருப்பினும் போயலின் வாழ்க்கை வரலாற்றாசிரியர்கள் தங்களுடைய வலியுறுத்தலில் நவீன ரசாயனத்திற்கான அடித்தளங்களை அமைக்கின்றனர், அவர் எவ்வளவு நிதானமாக கருத்து, நடைமுறை மற்றும் கோட்பாட்டில் ஆய்வு அறிவியல்கள் மற்றும் ரசவாதத்திற்கு நெருக்கமாக இருக்கிறார் என்பதை தவிர்த்துவிடுகின்றனர்.[24]

 
17 ஆம் நூற்றாண்டு ரசவாத புத்தகத்தைச் சேர்ந்த சாராம்சம் மற்றும் குறியீட்டு விடை. பயன்படுத்தப்பட்டிருக்கும் குறியீடுகள் அந்த நேரத்தில் வான சாஸ்திரத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் குறியீடுகளுடன் தொடர்பு கொண்டிருக்கின்றன.

பின்வருபவை பரிசோதனைக் குறிப்புகள்:

  1. எகிப்திய ரசவாதம் [கிமு 5000 – கிமு 400], ரசவாதத்தின் தொடக்கம்
  2. இந்திய ரசவாதம் [கிமு 1200 – தற்போது],[25] இந்திய உலோகப் பிரிப்பியலோடு தொடர்புகொண்டது; நாகார்ஜுனர் ஒரு முக்கியமான ரசவாதி
  3. கிரேக்க ரசவாதம் [கிமு 332 – கிபி 642], ஸ்டாக்ஹோம் பாப்பிரஸ் அலெக்ஸாண்ட்ரியா நூலகத்தில் ஆய்வு செய்யப்பட்டது
  4. சீன ரசவாதம் [கிபி 142], வைய் போயங் எழுதிய தி கின்ஷிப் ஆஃப் தி திரீ
  5. இஸ்லாமிய ரசவாதம் [700 – 1400], இஸ்லாமிய பொற்காலத்தின்போது ஜேபிர் இபின் ஹயான் ரசவாதத்திற்கான பரிசோதனைப்பூர்வ முறையை உருவாக்குகிறார்
  6. இஸ்லாமிய ரசவாதம் [800 – தற்போதுவரை], அல்கிண்டஸ் மற்றும் அவிசெனா இயல்புமாற்றத்தை மறுக்கின்றனர், ராசேஸ் நான்கு அடிப்படை தனிமங்களை, மற்றும் டூஸி நிறை தக்கவைப்பைக் கண்டுபிடிக்கிறார்.
  7. ஐரோப்பிய ரசவாதம் [1300 – தற்போதுவரை], துறவி அல்பர்டஸ் மேக்னஸ் இஸ்லாமிய ரசவாதத்தை உருவாக்குகிறார்
  8. ஐரோப்பிய ரசாயனம் [1661 – தற்போதுவரை], போயல் தி ஸ்கெப்டிகல் கிமிஸ்ட் எழுதுகிறார், லவாய்சியர் Traité Élémentaire de Chimie (ரசாயனத் தனிமங்கள்) எழுதுகிறார், மற்றும் டால்டன் தன்னுடைய அணுக் கோட்பாட்டை பதிப்பிக்கிறார்

சித்தர்களின் ரசவாதம்

தொகு

சைவச் சித்தரும், நாயன்மாறுமான திருமூலர் தனது பாடலொன்றில் பரிசனவேதி எனும் மூலிகை எப்பொருளையும் தங்கமாக மாற்றும் தன்மையுடையது என்று கூறுகிறார். கோராக்கர், குதம்பைச் சித்தர், போகர், கொங்கணர், கருவூரார், சிவவாக்கியர் போன்ற பல சித்தர்கள் இந்த கலையை அறிந்து வைத்திருந்தாக சித்தரியல் நூல்கள் தெரிவிக்கின்றன.

1, நாத வேதை மூலம் தங்கம் - கொங்கணவர்

தொகு

2.     காந்தரசம் மூலம் தங்கம் - போகர் வைத்தியம் 700

தொகு

3.     பித்தளையை தங்கமாக்கல் -அகத்தியர் பரிபூரணம்

தொகு

4.     செம்பில் இருந்து தங்கம்

தொகு

இன்றும் ரசவாதி தமிழ் நாட்டில் அரியலூர் என்ற இடத்தில வாழ்ந்து வருகின்றார்.இவரது பெயர் தங்கராசு.இவரது எண் +919944977375.இவர் இரசவாதம் செய்வதில் நிபுணர்.

5.      இரும்பை செம்பாக்கும் ரசவாதம்

தொகு

போன்ற முறைகளில் தமிழ்ச் சித்தர்கள் ரசவாதம் செய்ததற்கான குறிப்புகளை சித்தர் இலக்கியங்களில் காணமுடிகிறது

ரசாவாதத்துடனான நவீன தொடர்புகள்

தொகு

பெர்ஸிய ரசவாதம் நவீன ரசாயனத்திற்கான முன்னோடியாக இருந்தது. ரசவாதிகள் இன்று பயன்படுத்தப்படுகிற அதே ஆய்வகக் கருவிகளில் பலவற்றையும் பயன்படுத்தியிருக்கின்றனர். இந்தக் கருவிகள் சாதாரணமாக வலுவானவையாகவோ அல்லது நல்ல நிலையிலோ இருந்ததில்லை, குறிப்பாக ஐரோப்பாவின் மத்திய காலப்பகுதியில். இயல்புமாற்ற முயற்சிகள் பலவும் ரசவாதிகள் அறியாமல் செய்த நிலையற்ற ரசாயனங்களால் தோல்வியுற்றன. ரசவாதிகள் பணிபுரிந்த பாதுகாப்பற்ற சூழ்நிலைகள் இதை மோசமாக்கின.

16 ஆம் நூற்றாண்டுவரை, ரசவாதம் ஐரோப்பாவில் ஒரு தீவிரமான அறிவியலாக கருதப்பட்டு வந்தது; உதாரணத்திற்கு ஐஸக் நியூட்டன் தான் புகழ்பெற்ற ஒளியியல் அல்லது பௌதீக ஆய்வுகளைக் காட்டிலும் தன்னுடைய எழுத்துக்கள் பெரும்பாலானவற்றில் ரசவாத ஆய்விற்கு குறிப்பிடத்தக்க அளவு பங்களித்திருக்கிறார் (பார்க்க ஐஸக் நியூட்டனின் புதிர் ஆய்வுகள்). மேற்கத்திய உலகத்தைச் சேர்ந்த பிற புகழ்பெற்ற ரசவாதிகள் ரோஜர் பேகன், செயிண்ட் தாமஸ் அக்குவைனஸ், டைகோ பிராகே, தாமஸ் பிரவுன் மற்றும் பார்மிஜியானியோ ஆகியோராவர். ரசவாதத்தின் வீழ்ச்சி பகுத்தறிவுவாத பொருள்முதல்வாதத்தின் அடிப்படையில் பிரபஞ்சத்தின் புதிய மாபெரும் வடிவமைப்பிற்குள்ளாக பருப்பொருள் இயல்புமாற்றம் மற்றும் மருத்துவத்திற்கான மிகவும் துல்லியமான மற்றும் நம்பத்தகுந்த கட்டமைப்பை வழங்கிய 18 ஆம் நூற்றாண்டின் நவீன ரசாயனத்தின் பிறப்போடு தொடங்குகிறது.

பாரம்பரிய மருத்துவத்தில் ரசவாதம்

தொகு

பாரம்பரிய மருத்துவங்கள் ரசவாதத்தின் அடிப்படையிலான இயல்புமாற்றத்தோடு தொடர்புகொண்டிருந்தன, இவை மருந்தாக்கியல் அல்லது மருந்தாக்கியல் மற்றும் ஆன்மீகவாத உத்திகளின் கலவையைப் பயன்படுத்தின. சீன மருத்துவத்தில் பாவோ ஷியியின் ரசவாதப் பாரம்பரியங்கள் வெப்பநிலை, சுவை, அணுகப்படும் உடல் பாகம் அல்லது விஷத்தன்மையின் இயல்பை மாற்றக்கூடியவை. ஆயுர்வேதத்தில் உள்ள சமஸ்காரங்கள் கன உலோகங்கள் மற்றும் விஷ மூலிகைகளை அவற்றின் விஷத்தன்மையை நீக்கச்செய்கின்ற அதே முறையில் இயல்புமாற்றத்திற்கு பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த நிகழ்முறைகள் தற்போது செயல்பாட்டுரீதியில் பயன்படுத்தப்படுகின்றன.[26]

அணுக்கரு இயல்புமாற்றம்

தொகு

1919 ஆம் ஆண்டில் எர்னஸ்ட் ரூதர்போர்ட் நைட்ரஜனை ஆக்ஸிஜனாக மாற்ற செயற்கைப் பிரி்ததெடுப்பு முறையைப் பயன்படுத்தினார்.[27]

ஆதாரங்கள்

தொகு
  1. 1.0 1.1 "alchemy". (Online). ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம்.  (Subscription or participating institution membership required.) அல்லது பார்க்க Harper, Douglas. "alchemy". Online Etymology Dictionary. பார்க்கப்பட்ட நாள் 2010-04-07..
  2. பார்க்க, உதாரணத்திற்கு, Liddell, Henry George (1901). A Greek-English Lexicon (Eighth edition, revised throughout ed.). Oxford: Clarendon Press. {{cite book}}: Unknown parameter |coauthors= ignored (help) இல் χημείαக்கான சொல்லிலக்கணம்
  3. பார்க்க, உதாரணத்திற்கு, ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியில் தரப்பட்டுள்ள சொல்லிலக்கணம் மற்றும் Liddell, Henry George (1940). A Greek-English Lexicon (A new edition, revised and augmented throughout ed.). Oxford: Clarendon Press. {{cite book}}: Unknown parameter |coauthors= ignored (help)இல் χυμείαக்கு.
  4. இந்தப் பகுப்பிற்கான அசல் மூலாதாரம் Mahn, Carl August Friedrich (1855). Etymologische untersuchungen auf dem gebiete der romanischen sprachen. F. Duemmler. இன் 81-85 இல் உள்ள கட்டுரை
  5. Davis, Erik. "The Gods of the Funny Books: An Interview with Neil Gaiman and Rachel Pollack". Gnosis (magazine). Techgnosis (reprint from Summer 1994 issue). Archived from the original on 2012-05-29. பார்க்கப்பட்ட நாள் 2007-02-04.
  6. Dictionary.com இல் ரசவாதம்.
  7. ரகசிய ரசவாதத்தின் நிஜ இயல்பு.
  8. 8.0 8.1 வான் பிரான்ஸ், எம்-எல். அல்கெமிக்கல் ஆக்டிவ் இமேஜினேஷன். ஷம்பலா. பாஸ்டன். 1997. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-201-72634-3
  9. Blavatsky, H.P. (1888). The Secret Doctrine. Vol. ii. Theosophical Publishing Company. p. 238. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1557000026. Archived from the original on 2019-09-03. பார்க்கப்பட்ட நாள் 2010-06-03. {{cite book}}: Unknown parameter |nopp= ignored (help)
  10. Paracelsus. "Alchemical Catechism". பார்க்கப்பட்ட நாள் 2007-04-18.
  11. 11.0 11.1 யுங், சி. ஜி. (1944). சைக்காலஜி அண்ட் அல்கெமி (2ஆம் பதிப்பு. 1968 தேர்ந்தெடுத்த படைப்புகள் தொகுப்பு. 12 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-691-01831-6). லண்டன்: ரோட்லஜ்.
  12. யுங். சி.ஜி., & ஹின்கல். பி.எம். (1912). சைக்காலஜி ஆஃப் தி அன்கான்ஸியஸ் : எ ஸ்டடி ஆஃப் தி டிரான்ஸ்ஃபார்மேஷன் அண்ட் சிம்பலிஸம் ஆஃப் தி லிபிடோ, எ காண்ட்ரிபியூஷன் டு தி ஹிஸ்டரி ஆஃப் தி எவல்யூஷன் ஆஃப் தாட். லண்டன்: கேகன் பால் டிரென்ச் டிரூப்னர். (இயல்புமாற்றங்களின் குறியீடுகளாக 1952 ஆம் ஆண்டில் திருத்தப்பட்டது, தேர்ந்தெடுத்த படைப்புகள் தொகுப்பு .5 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-691-01815-4).
  13. யுங். சி.ஜி., & ஜாஃபே. ஏ. (1962). நினைவுகள், கனவுகள், பிரதிபலிப்புகள். லண்டன்: காலின்ஸ். திஸ் இஸ் யுங்ஸ் ஆட்டோபயாகிராபி, அனிலா ஜாஃபேவால் பதிவு செய்யப்பட்ட தொகுக்கப்பட்டது, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-679-72395-1.
  14. யுங். சி.ஜி. - சைக்காலஜி அண்ட் அல்கெமி; சிம்பல்ஸ் ஆஃப் டிரான்ஸ்ஃபார்மேஷன்.
  15. ஐ சிங்கின் ரிச்சர்ட் வில்லெமுடைய மொழிபெயர்ப்புக்கான சி.-சி. யுங்கின் முன்னுரை.
  16. தி சீக்ரெட் ஆஃப் கோல்டன் ஃப்ளவரின் மொழிபெயர்ப்புக்கான சி.ஜி. யுங்கின் முன்னுரை.
  17. ரசவாதப் படைப்பின் நான்கு நிலைகள்.
  18. Meyrink und das theomorphische Menschenbild பரணிடப்பட்டது 2007-09-12 at the வந்தவழி இயந்திரம்.
  19. இசைப்பாடல் பகுதிகளுக்கான உத்தரவு தொடர்ச்சியாக எப்போதாவதுதான் வழங்கப்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு, டோர்ன் தியேட்ரம் கெமிக்கமில், ருபிடோவிற்குப் பின்னர் தங்க வண்ணமான சிட்ரினிடாஸை நிறுவுகிறார்.
  20. நியூமன், எரிக். தி ஆர்ஜின் அண்ட் ஹிஸ்டரி ஆஃப் கான்சியஸ்னஸ் , சி.ஜி. யுங் முன்னுரையோடு. ஜெர்மனிலிருந்து மொழிபெயர்ப்பு ஆர்.எஃப்.சி.ஹல். நியூயார்க் : பாந்தியன் புக்ஸ், 1954. வழங்கும் தகவல் பக்.255, அடிக்குறிப்பு 76: "ரசவாதம் உண்மையில் எகிப்தில் தோன்றியது என்பதால் கலையின் அடித்தளங்களுக்கிடையே ஒஸிரிஸ் தொன்மத்தின் ரகசிய விளக்கங்கள் சாத்தியமில்லாதது அல்ல ... "
  21. Francesca Rochberg (December 2002), "A consideration of Babylonian astronomy within the historiography of science", Studies In History and Philosophy of Science, 33 (4): 661–684, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1016/S0039-3681(02)00022-5
  22. கிராஸ், பால், ஜேபிர் இபின் ஹயான், பங்களிப்பு à l'histoire des idées scientifiques dans l'Islam. I. Le corpus des écrits jâbiriens. II. Jâbir et la science grecque, . கெய்ரோ (1942–1943). மறுபதிப்பு. ஃபாட் செஸ்கின், (நேச்சுரல் சயின்சஸ் இன் இஸ்லாம். 67-68), ஃபிராங்க்ஃபர்ட். 2002

    “To form an idea of the historical place of Jabir’s alchemy and to tackle the problem of its sources, it is advisable to compare it with what remains to us of the alchemical literature in the Greek language. One knows in which miserable state this literature reached us. Collected by Byzantine scientists from the tenth century, the corpus of the Greek alchemists is a cluster of incoherent fragments, going back to all the times since the third century until the end of the Middle Ages.”

    “The efforts of Berthelot and Ruelle to put a little order in this mass of literature led only to poor results, and the later researchers, among them in particular Mrs. Hammer-Jensen, Tannery, Lagercrantz , von Lippmann, Reitzenstein, Ruska, Bidez, Festugiere and others, could make clear only few points of detail...

    The study of the Greek alchemists is not very encouraging. An even surface examination of the Greek texts shows that a very small part only was organized according to true experiments of laboratory: even the supposedly technical writings, in the state where we find them today, are unintelligible nonsense which refuses any interpretation.

    It is different with Jabir’s alchemy. The relatively clear description of the processes and the alchemical apparatuses, the methodical classification of the substances, mark an experimental spirit which is extremely far away from the weird and odd esotericism of the Greek texts. The theory on which Jabir supports his operations is one of clearness and of an impressive unity. In vain one would seek in the Greek texts a work as systematic as that which is presented for example in the Book of Seventy.”

    (ஒப்பிடக்கூடியது. Ahmad Y Hassan. "A Critical Reassessment of the Geber Problem: Part Three". பார்க்கப்பட்ட நாள் 2008-08-09.)

  23. Deem, Rich (2005). "The Religious Affiliation of Robert Boyle the father of modern chemistry. From: Famous Scientists Who Believed in God". adherents.com. Archived from the original on 2016-03-27. பார்க்கப்பட்ட நாள் 2009-04-17.
  24. More, Louis Trenchard (January 1941). "Boyle as Alchemist". Journal of the History of Ideas (University of Pennsylvania Press) 2 (1): 61–76. http://www.jstor.org/stable/2707281. பார்த்த நாள்: 30 March 2010. 
  25. "பழங்கால இந்திய எழுத்துக்களான வேதங்கள் (இந்து புனித நூல்கள்) ரசவாதம் பற்றிய இதே குறிப்புக்களைக் கொண்டிருக்கின்றன" - முல்தாஃப், ராபர்ட். பி. & கில்பர்ட், ராபர்ட் ஆண்ட்ரு (2008). ரசவாதம். என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா (2008).
  26. ஜுனில், மேன்ஃபிரட் எம்; தி பிராக்டிகல் ஹேண்ட்புக் ஆஃப் பிளாண்ட் அல்கெமி: அன் ஹெர்பலிஸ்ட் கைட் டு பிரிபேரிங் மெடிசினல் எஸ்ஸன்ஸ், டின்க்சர்ஸ், அண்ட் எலிக்ஸிர்ஸ் ; ஹீலிங் ஆர்ட்ஸ் பிரஸ் 1985.
  27. Amsco School Publications. "Reviewing Physics: The Physical Setting" (PDF). Amsco School Publications. Archived from the original (pdf) on 2012-11-01. பார்க்கப்பட்ட நாள் 2010-06-03. "The first artificial transmutation of one or more elements to another was performed by Rutherford in 1919. Rutherford bombarded nitrogen with energetic alpha particles that were moving fast enough to overcome the electric repulsion between themselves {{cite web}}: Check |authorlink= value (help); External link in |authorlink= (help)
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
இரசவாதம்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரசவாதம்&oldid=3931655" இலிருந்து மீள்விக்கப்பட்டது