சத்ய சரண் லா
சத்ய சரண் லா (Satya Churn Law) நன்கறியப்பட்ட ஓர் இயற்கை ஆர்வலர் ஆவார். சத்ய சூர்ண் லா என்ற பெயராலும் இவர் அறியப்படுகிறார். கல்கத்தாவில் வாழ்ந்த அறிவார்ந்த தன்னார்வ இயற்பியல் அறிஞர் மற்றும் கல்விமான் என்று பல பெருமைகள் இவருக்கு உண்டு [1].1984 ஆம் ஆண்டு டிசம்பர் 11 அன்று சத்ய சரண் லா காலமானார். இந்தியப் புள்ளியல் கழகத்தின் பொருளாளராக சிறிது காலம் பணியாற்றினார். இலண்டன் விலங்கியல் கழகத்தின் கௌரவ உறுப்பினர் மற்றும் பிரித்தானிய பறவையியலாளர்கள் சங்கத்தின் ஓர் உறுப்பினர் என்ற பெருமைகளும் இவருக்கு உண்டு. 1937 ஆம் ஆண்டில் நீரத் சந்திர சவுத்ரி இவரிடம் இலக்கிய உதவியாளராக இருந்தார் [1]. தன்னுடைய பறவையியல் அனுபவங்களைக் கொண்டு 1923 ஆம் ஆண்டில் இவர் எழுதிய வங்காளத்தின் வீட்டு பறவைகள் என்ற நூல் உட்பட பல்வேறு தலைப்புகளில் சவுத்ரி புத்தகங்களை எழுதினார். சிறிது காலம் கொல்கத்தா விலங்கியல் பூங்காவின் துணைத் தலைவராக இருந்தார். விஞ்ஞானத்தை பிரபலப்படுத்துவதற்காக பெங்காலி மொழியில் பிரகிருதி என்ற பத்திரிகை ஒன்றை தொடங்கினார் [2].
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Edward Shils, Joseph Epstein (1997) Portraits: A Gallery of Intellectuals. University of Chicago Press, 1997 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-226-75336-0. p.78-79
- ↑ "INSA Deceased Fellow". Archived from the original on 2015-04-23. பார்க்கப்பட்ட நாள் 2019-03-06.