சத்ய பிரதா சாகு

சத்ய பிரதா சாகு (Sathya Pratha Sahoo) தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி ஆவார். இவர் 2018 பிப்ரவரி 22 முதல் தமிழகத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். 2018 மார்ச் 15 ஆம் நாள் இப்பணியை ஏற்றுக்கொண்டார்.[1] இவர் 1997 ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஆவார். இவர் ஒடிசா மாநிலத்தைச் சார்ந்தவர் ஆவார். முன்னதாக இவர் சென்னைப் பெருநகர குடிநீர் வடிகால் வாரியத்தின் நிர்வாக இயக்குநராக இருந்தார்.[2] நாடாளுமன்றத்திற்கும், தமிழ்நாட்டில் காலியாக உள்ள சட்டசபைத் தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டால் தயார் நிலையில் இருப்பதாகத் தெரிவித்தார். [3] இவருக்கு முன்னதாக தமிழக தேர்தல் அதிகாரியாக ராஜேஷ் லகானி பதவியில் இருந்தார்.

மேற்கோள்கள்தொகு

  1. "NAMES OF CHIEF ELECTORAL OFFICERS OF TAMIL NADU". Election Commission of India. பார்த்த நாள் 3 பெப்ரவரி 2019.
  2. "தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்". தினமலர் (22 பிப்ரவரி 2018). பார்த்த நாள் 31 சனவரி 2019.
  3. ""எப்போது தேர்தல் அறிவித்தாலும் நடத்த தயார்" - தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தகவல்". தந்தி தொலைக்காட்சி (25 சனவரி 2019). பார்த்த நாள் 31 சனவரி 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்ய_பிரதா_சாகு&oldid=2648241" இருந்து மீள்விக்கப்பட்டது