சந்தனா சக்மா

இந்திய அரசியல்வாதி

சந்தனா சக்மா (Santana Chakma) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த இவர் தற்பொழுது மாணிக் சாகா அமைச்சரவையில் தொழில்கள் மற்றும் வர்த்தக சிறை(உள்துறை) இதர பிற்படுத்தப்பட்டோர் நலன் அமைச்சராகப் பணிபுரிகிறார்.[1][2][3][4] திப்ரா மோதா கட்சி வேட்பாளர் ஆலிவுட் சக்மாவை 8,137 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து இரண்டாவது முறையாக பென்சார்தல் தொகுதியில் இருந்து சந்தனா சக்மா சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5][6][7] சக்மா பழங்குடி இனத்திலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற சிறப்புக்கு உரியவராக சந்தனா சக்மா திகழ்கிறார். 32 வயதான் சந்தனா 2015 ஆம் ஆண்டில் பாரதிய சனதா கட்சியில் சேர்ந்தார்.

சந்தனா சக்மா
Santana Chakma
மாணிக் சாகா அமைச்சரவை, தொழில்கள் மற்றும் வர்த்தக சிறை(உள்துறை) இதர பிற்படுத்தப்பட்டோர் நலன்
பதவியில் உள்ளார்
பதவியில்
10 மார்ச்சு 2023
முன்னையவர்பிச்சிதா நாத்து
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
சந்தனா சக்மா

திரிபுரா, இந்தியா
அரசியல் கட்சிபாரதிய சனதா கட்சி
பெற்றோர்சந்திரதன் சக்மா
மந்திரி சபைதிரிபுரா அரசு

மேற்கோள்கள்

தொகு
  1. "Santana Chakma takes oath as Minister in first BJP-led govt in Tripura - The aPolitical". 9 March 2018. Archived from the original on 18 March 2018. பார்க்கப்பட்ட நாள் 11 March 2018.
  2. "Dr Manik Saha takes oath as Tripura CM, for the 2nd time; 8 ministers sworn in".
  3. "Manik Saha takes oath as Tripura CM for second term in PM Modi's presence". indianexpress.com/. March 10, 2023.
  4. "Manik Saha Takes Oath As Tripura Chief Minister, 8-Member Team With Him".
  5. "Constituencywise-All Candidates". eciresults.nic.in. Archived from the original on 3 March 2023. பார்க்கப்பட்ட நாள் 3 March 2023. Alt URL
  6. "BJP's Manik Saha sworn in as Tripura CM for second time, 8 ministers also take oath". India Today. 8 March 2023.
  7. "3 of 9 Tripura ministers have criminal cases against them, 6 are crorepatis".
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தனா_சக்மா&oldid=3904442" இலிருந்து மீள்விக்கப்பட்டது