திரிபுரா அரசு

திரிபுரா அரசு, இந்திய மாநிலமான திரிபுராவின் அரசாகும். இது செயலாக்கப் பிரிவு, நீதித்துறை, சட்டவாக்க அவை ஆகிய மூன்றையும் உள்ளடக்கியது.

திரிபுரா அரசு
தலைமையிடம்அகர்தலா
செயற்குழு
ஆளுநர்தாத்தாகட ராய்
முதலமைச்சர்மாணிக் சாகா
சட்டவாக்க அவை
சட்டப் பேரவை
சபாநாயகர்ராமேந்திர சந்திர தேவ்நாத்
உறுப்பினர்கள்60
நீதித்துறை
உயர் நீதிமன்றம்திரிபுரா உயர் நீதிமன்றம்

மாநிலத்தின் தலைவராக ஆளுநர் இருப்பார். இவர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுவார். அரசின் தலைமையகம், சட்டமன்றம் ஆகியவை அகர்தலாவில் உள்ளன. குவஹாத்தி உயர் நீதிமன்றத்தின் கிளை அகர்தலாவில் உள்ளது.[1] அரசின் தலைவராக முதலமைச்சர் செயல்படுவார்.

தற்போதைய சட்டமன்றம் ஓரவை முறைமை கொண்டது. இதில் 60 சட்டப் பேரவை உறுப்பினர்கள் இருப்பர். இவர்கள் அதிகபட்சமாக ஐந்தாண்டு காலம் பதவியில் இருப்பர்.[2]

சான்றுகள்

தொகு
  1. "Jurisdiction and Seats of Indian High Courts". Eastern Book Company. பார்க்கப்பட்ட நாள் 2008-05-12.
  2. "Tripura Legislative Assembly". Legislative Bodies in India. National Informatics Centre, Government of India. பார்க்கப்பட்ட நாள் 2008-05-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரிபுரா_அரசு&oldid=3613225" இலிருந்து மீள்விக்கப்பட்டது