சந்தபாய்
பிறப்பு1880
இறப்பு1977 (அகவை 96–97)

பண்டித பிரம்மச்சாரினி சந்தபாய் (Chandabai 1880-1977) ஒரு சமண அறிஞர் மற்றும் இந்தியாவில் பெண்கள் கல்வியின் முன்னோடியாக இருந்தார். [1] இந்தியாவின் மிகப் பழமையான மகளிர் வெளியீடான ஜெயின் மஹிலதர்ஷின் நிறுவனர் ஆவார் . [2]

குடும்பம்

தொகு

இவர் விருந்தாவன், உத்தரப் பிரதேசத்தில் ஒரு குறிப்பிடத் தகுந்த நபர் மற்றும் இந்திய சுதந்திரத்தின் ஆதரவாளரான நாராயணதாஸ் அகர்வாலின் மகள் ஆவார். இவருக்கு 11 வயதாக இருக்கும் போது 18 வயதான ஜமீந்தாரின் பேரனான தர்மகுமார் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர் திருமணம் முடிந்த அடுத்த ஆண்டே இறந்துவிட்டார். இவரது மூத்த சகோதரர் ,சமண அறிஞரான தேவகுமார் ஜெயின் ,சந்தபாயை படிக்க ஊக்குவிக்கிறார், இது அந்தக் காலத்தில் அசாதாரணமானது ஆகும். [3]


இதழ்கள்

தொகு

அவர் 1921 ஆம் ஆண்டில் ஜெயின் மஹிலதர்ஷ் என்ற பத்திரிகையைத் தொடங்கி பல ஆண்டுகளாக அதைத் பதிப்பாசிரியராகப் பணிபுரிந்தார். இவர் உப்தேஷ் ரத்னா மாலா, சௌபாக்யா ரத்னா மாலா, நிபந்த் ரத்னா மாலா, ஆதர்ஷ் கஹனியன், ஆதர்ஷ் நிபந்த் , மற்றும் நிபந்த் தர்ப்பன் உட்பட பல புத்தகங்கள் எழுதினார்.

மேலும் காண்க

தொகு

சான்றுகள்

தொகு
  1. "Pandita Chandabai, JainSamaj.org". Archived from the original on 13 June 2010. பார்க்கப்பட்ட நாள் 14 January 2015.
  2. New Page 1 பரணிடப்பட்டது 25 மார்ச்சு 2008 at the வந்தவழி இயந்திரம்
  3. Nemichandra Jyotishacharya, Ma Shri, in Jain Jagaran ke Agraduta, 1952, Bharatiya Jñanapitha

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தபாய்&oldid=3134544" இலிருந்து மீள்விக்கப்பட்டது