சந்திரசூடேஸ்வரர் கோயில், ஓசூர்

செவிடை நாயனார் (சந்திரசூடேஸ்வரர்) கோயில், கிருஷ்ணகிரி மாவட்டம், தமிழ்நாட்டில் ஓசூர் பாறை மலை மீது அமைந்துள்ள ஒரு பழங்கால சிவன் கோயில் ஆகும்.

செவிடை நாயனார் கோயில், ஓசூர்
செவிடை நாயனார் கோயில், ஓசூர் - புகைப்படம் 1860
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கிருஷ்ணகிரி
அமைவு:ஓசூர்
ஆள்கூறுகள்:12°43′33″N 77°50′11″E / 12.7257938°N 77.8363817°E / 12.7257938; 77.8363817
கோயில் தகவல்கள்
உற்சவர்:செவிடை நாயனார் (சிவன்)

செவிடை நாயனார் என்ற தமிழ் பெயர் சந்திரசூடேஸ்வரர் என்று மருவியது.

ஓசூர், சந்திரசூடேஸ்வரர் கோயில் திருப்பணியின் போது, 13ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, ஓய்சாள அரசன் வீரநரசிம்மனின், புதிய கல்வெட்டு கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

சந்திரசூடேஸ்வரர், செவிடை நாயனார் என்ற பெயரில், இருந்ததற்கான கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன

கோயில் வரலாறு தொகு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மிகவும் பழமையான வரலாற்று சிறப்புமிக்க செவிடை நாயனார் (மரகதாம்பிகை சமேத சந்திரசூடேஸ்வர சாமி) மலைக்கோவில் உள்ளது. ஓசூரின், தேர்ப்பேட்டையில் சந்திர சூடேஸ்வரர் கோவில் உள்ளது.

இந்த கோவிலை சுற்றி பல்வேறு இடங்களில் 12–ம் நூற்றாண்டு சோழர் கால பாறை கல்வெட்டுகள் உள்ளன.

ஓசூர் சந்திரசூடேஸ்வர சாமி கோவிலில் மொத்தம் 26 தமிழ் கல்வெட்டுகளை, தொல்லியல் துறை, 1974–ம் ஆண்டு பதிவு செய்துள்ளது. இந்த கோவில், சோழர் காலத்தில் இருந்துதான் முழுமையான வழிபாட்டுக்கு வந்துள்ளது.

சந்திரசூடேஸ்வரர், செவிடை நாயனார் என்ற பெயரில், இருந்ததற்கான கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன.

ராஜேந்திர சோழன் மற்றும் முதலாம் குலோத்துங்க சோழன் கல்வெட்டும், ஒய்சாள அரசர்களான வீரவிஸ்வநாதன், வீரநரசிம்மன், வீரராமநாதன் போன்ற அரசர்கள் கோவிலுக்கு வழங்கிய நிலதானங்கள் பற்றியும், கொடைகள், பூஜைக்கு வேண்டிய பொருட்கள் குறித்தும் இந்த கல்வெட்டுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கங்கர்கள், நுளபர்கள், சோழர்கள், ஓய்சாளர்கள், விஜயநகர பேரரசர்களின் காலத்தில், இக்கோவில் வளர்ச்சி பெற்றுள்ளது.

கி.பி., 10ம் நுாற்றாண்டில் செவிடபாடி என்றும், 13ம் நுாற்றாண்டில், முரசு நாடு என்றும் அழைக்கப்பட்ட ஊரே, 16ம் நுாற்றாண்டில், ஓசூர் என, மாறியுள்ளது.

இக்கோவிலுக்கு, கொடுக்கப்பட்ட கொடைகள் பற்றிய செய்திகள், ஓசூர் மலையில் உள்ள பெருமாள் கோவில், பாகலுார், மேல்சூடாபுரம் சிவன் கோவில் கல்வெட்டுகளில் உள்ளன.

பழமையான இக்கோவிலில், ராஜேந்திர சோழனின் கல்வெட்டுகளும், கங்கர் கலை சான்றுகளாக, சப்த மாதர்கள், சூரியன், அர்த்த மண்டப துாண்களும் உள்ளன.

இங்கு, பல மன்னர்களின் கல்வெட்டுகள் இருந்தாலும், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, ஓய்சாள மன்னனின் முதல் கல்வெட்டு என்பதால், முக்கியத்துவம் பெறுகிறது. கல்வெட்டில் உள்ள, 17 வரிகளில், முதல் வரி, படிக்க முடியாதபடி சிதைந்துள்ளது.

'செல்லா நின்ற என துவங்கி, துபிரிதிவிராஜம் பன்னி' என, முடிகிறது. அதன்படி, வீர நரசிம்மன் கோவிலின் வளர்ச்சிக்காகவோ, திருவிழாவுக்கோ தானம் கொடுத்த செய்தி உள்ளது. அதில், 'ஆடி மாதம் 10ம் தேதி' என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.

References தொகு