சந்திரலேகா மீதான அமில வீச்சு வழக்கு
சந்திரலேகா மீதான அமில வீச்சு வழக்கு என்பது இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக இருந்த வி. எஸ். சந்திரலேகா மீது அமிலம் வீசிய வழக்காகும். தமிழகத்தின் முதல் பெண் ஆட்சியர் சந்திரலேகா என்பதாலும், தமிழகத்தில் நிகழ்ந்த முதல் அமில தாக்குதல் என்பதாலும் இவ்வழக்கு முக்கியத்துவம் பெறுகிறது.
நிகழ்வு
தொகு1992 மே 19 இல் தன் வீட்டில் இருந்து அலுவலகம் கிளம்பிய குடிமை அதிகாரி சந்திரலேகா தனது மகிழுந்தின் பின் இருக்கையில் அமர்ந்திருந்தார். எழும்பூர் அருகே போக்குவரத்து நெரிசலால் சாலையில் மெதுவாக சென்று கொண்டிருந்த மகிழுந்து அருகே வந்த நபர் அதிகாரி சந்திரலேகா மீது அமிலத்தை வீசிவிட்டு ஓடினார்.
மகிழுந்தின் ஓட்டுனர் பிரேம்குமார் அமில தாக்குதல் நடத்திய இளைஞனைப் பிடித்தார்.[1]
ஓட்டுனரிடம் பிடிபட்ட இளைஞரது பெயர் சுடலை என்கிற சுர்லா என காவல்துறை பதிவு செய்தது. ஐந்து ஆண்டுகள் ஜாமீனில் வெளிவர முடியாத அளவுக்கு வழக்கு கடுமையாகப் போடப்பட்டு இருந்தது. ஆனால், சிறையில் அடைக்கப்பட்ட சுர்லா மீது குற்றம் நிருபிக்கப்படவில்லை.
அரசியல் காரணம்
தொகுதமிழ்நாட்டில் ஜெயலலிதா முதல்வராக 1991-1996 வரை இருந்தார். 1992 இல் ‘டிட்கோ’ என அழைக்கப்பட்ட தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சிக் கழகத்தின் தலைவராக சந்திரலேகா இருந்தார். அப்பொழுது ‘ஸ்பிக்’ நிறுவனத்தின் 25 சதவீதப் பங்குகளை வைத்திருந்தது தமிழக அரசு.
இந்நிலையில், அந்தப் பங்குகளைத் தனியாருக்கு விற்பது தொடர்பான பேச்சு எழுந்ததாகவும், அப்படி விற்பது அரசுக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்தும் என்பதால் விற்பனைக்கு சந்திரலேகா மறுத்ததாகவும் கூறப்படுகிறது.[2]
ஆதாரங்கள்
தொகு- ↑ “ஜெயலலிதா சந்திரலேகா மோதல்” சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் - 47 | ஜோ. ஸ்டாலின் | விகடன் 5th Jun, 2017
- ↑ எம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று! தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை.. நக்கீரன் May 19, 2020 | PRITHIVIRAJANA