சந்திரஹாசம் (நூல்)
சந்திரஹாசம் என்பது சு. வெங்கடேசனின் கதையில் க. பாலசுப்ரமணியத்தின் வரைகலையில் வெளிவந்த வரைகலை புதின நூல் ஆகும். இதனை விகடன் பிரசுரம் 2016 மார்ச் 10 அன்று வெளியிட்டது. இது தமிழில் வெளிவந்த முதல் சித்திரக்கலை புதினம் ஆகும்.[1] இதற்கு முன்பு தமிழ் திரைப்பட இயக்குநர் ஜே.எஸ்.நந்தினியின் மாத்தி யோசி சித்திரக்கலை புதினம் மின்நூலாக வெளிவந்தது. அச்சு வடிவம் பெறவில்லை.[2]
சொல்லிலக்கணம்
தொகுசந்திரஹாசம் என்பது சிவபெருமானால் இராவணனுக்குத் தரப்பட்ட வாளாகும். [3] இந்த வாளினைக் கொண்டு சடாயுவை வெட்டியதால், இராவணனிடமிருந்து இந்த வாள் மறைந்தது.
வெளியீடு
தொகுசந்திரஹாசம் நூலினைச் சாகித்ய அகாதமி விருது பெற்ற சு. வெங்கடேசன் எழுதியுள்ளார், க.பாலசுப்ரமணியம் இதற்கு ஓவியங்களை வரைந்துள்ளார்.
முதல் பாகத்தினை 30 நவம்பர் 2015-இல் வெளியிட்டனர். இப்புத்தகம் ஐம்பது ஆயிரம் பிரதிகளுக்கும் மேல் முன்பதிவு செய்யப்பட்டது. இந்நூல் வரைகலை புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.
கதைச் சுருக்கம்
தொகுஇப்புதினம் பாண்டியர்களையும் அவர்களின் குல வாளான சந்திரஹாசத்தினயும் பற்றிய புதினமாகும்.
பாகங்கள்
தொகுஇந்நூல் தொகுப்பு மூன்று பாகங்கள் கொண்டதாகும். முதல் பாகம் சகோதர யுத்தம், இரண்டாம் பாகம் மதுரா வியூகம்.
சகோதர யுத்தம்
தொகுசந்திரஹாசம் நூல் தொகுதியின் முதல் பாகம் சகோதர யுத்தம் ஆகும். இத்தொகுப்பு குலசேகர பாண்டியன் மற்றும் அவனது இரு மகன்களான சுந்தர பாண்டியன், வீரபாண்டியன் மூவரையும் சுற்றி நடைபெறும் கதையாகும். இலங்கைப்போரில் தொடங்கி, மாலிக்கபூரின் வருகையுடன் இந்தப் பாகம் முடிவு பெறுகின்றது. மார்க்கோபோலோவின் வருகை பற்றிய குறிப்புகளும் இத்தொகுப்பில் உள்ளது.
முதல் தொகுதி கீழ்காணும் நான்கு பகுதிகளைக் கொண்டது.
- இலங்கைப் போர்
- அங்குசம்
- நாகரீகத்தின் முகம்
- மணிமுடி
ஆதாரங்கள்
தொகு- ↑ பாண்டியர் வம்சத்து வாள், ஜி. சரவணன் கீற்று தளம் - சனவரி 30 2016
- ↑ மாத்தி யோசி-கிராபிக்ஸ் நாவல்[தொடர்பிழந்த இணைப்பு], தினகரன் 2016-01-11 An epic venture, warts and all
- ↑ http://m.thehindu.com/books/literary-review/satwik-gade-reviews-graphic-novel-chandrahasam/article8171771.ece[தொடர்பிழந்த இணைப்பு]