சந்திராணி முர்மு
சந்திரணி முர்மு (Chandrani Murmu, பிறப்பு 16 ஜூன் 1993) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியாவார். இவர் பிஜு ஜனதா தளத்தின் சார்பாக 2019 இந்திய பொதுத் தேர்தலில் ஒடிசாவின் கியோன்ஜார் தொகுதியில் இருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழவையான மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] சந்திரணி முர்மு தற்போது இந்திய இளைய நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.[2]
சந்திராணி முர்மு | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 23 மே 2019 | |
முன்னையவர் | சகுந்தலா லாகுரி |
தொகுதி | கியோன்ஜார் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 16 சூன் 1993 இந்தியா, பஞ்சாப், லூதியானா |
தேசியம் | Indian |
அரசியல் கட்சி | பிஜு ஜனதா தளம் |
அதற்கு முன் இரண்டு முறை வென்ற பாரதிய ஜனதா கட்சியின் அனந்தா நாயக்கிற்கு எதிராக போட்டியிட்ட இவர் 66,203 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். சகுந்தலா லாகுரிக்குப் பின் கியோஞ்சர் தொகுதியில் இருந்து பிஜு ஜனதாதளத்தின் சார்பில் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றவர் இவராவார். இவர்தான் 16 வது மக்களவையில் இளைய உறுப்பினரும் ஆவார்.[3]
ஆரம்ப மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை
தொகுசந்திரணி முர்மு 16 சூன் 1993 அன்று [4] அரசு ஊழியரான சஞ்சீவ் முர்மு மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிஹரன் சோரனின் (1980 மற்றும் 1984 இல் காங்கிரஸ் சார்பாக கியோன்ஹார் தொகுதியில் இருந்து வென்றவர்) மகளான உர்பாஷி சோரன் [5] ஆகியோருக்கு மகளாக பிறந்தார். முர்மு புவனேசுவரத்தில் உள்ள சிக்ஷா 'ஓ' அனுசந்தன் பல்கலைக்கழகத்தில் இயந்திரப் பொறியியலில் பட்டம் பெற்றார். கியோன்ஜார் தொகுதி பழங்குடிகளுக்கான தனித்தொகுதியாக இருந்ததால், இங்கிருந்து போட்டியிட ஒரு படித்த பெண்ணை பிஜு ஜனதா தளம் தேடிக்கொண்டிருந்தத நிலையில், முர்மு தன் தாய்மாமன் ஹர்மோகன் சோரன் மூலம் பிஜு ஜனதா தளத்தை அணுகி, போட்டியிட வாய்ப்பு பெற்றார்.
இவரது தந்தையின் பெயர் குறித்து சில முரண்பாடுகள் இருப்பதாக பாஜக தலைமை தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டது. தேர்தலுக்கு முன்பு சந்திராணியின் உருவப்படம் இடம்பெற்ற ஒரு ஆபாச கானொளி ஊடகங்களில் பரப்பபட்டது.[4]
குறிப்புகள்
தொகு- ↑ "Keonjhar Lok Sabha Election Results 2019". The Indian Express. 24 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
- ↑ "Meet 25-year-old Chandrani Murmu, the youngest Member of Parliament". India Today (in ஆங்கிலம்). May 26, 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-05-28.
- ↑ "Youngest MP, Odisha's Chandrani Murmu of BJD, set to make her debut in Parliament". Times Now (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-05-28.
- ↑ 4.0 4.1 Sahani, Alaka (2019-04-22). "Chandrani Murmu, BJD's 25-year-old candidate: 'No woman should be subjected to such humiliation'". The Indian Express (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2019-05-28.
- ↑ "Meet the youngest member of parliament - Chandrani Murmu from Odisha". Business Today. பார்க்கப்பட்ட நாள் 2019-05-28.