சந்தீப் தீக்சித்து

இந்திய அரசியல்வாதி

சந்தீப் தீக்சித்து (Sandeep Dikshit) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1964 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 15 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்திய அரசியல்வாதி, மேம்பாட்டு மேலாளர் மற்றும் கல்வியாளர் என பன்முகங்களால் அறியப்படுகிறார். தில்லியின் முன்னாள் முதல்வர் சீலா தீட்சித்தின் மகன் என்றும் அறியப்படுகிறார். இந்தியாவின் 15 ஆவது மக்களவையில் இவர் உறுப்பினராக இருந்தார். [1] தில்லியின் கிழக்கு தில்லி தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக அரசியலில் செயல்பட்டார். [2]

சந்தீப் தீக்சித்து
Sandeep Dikshit
நாடாளுமன்ற உறுப்பினர்
கிழக்கு தில்லி நாடாளுமன்ற தொகுதி
பதவியில்
மே 2004 – மே 2014
முன்னையவர்இலால் பிகாரி திவாரி
பின்னவர்மகேசு கிரி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு15 ஆகத்து 1964 (1964-08-15) (அகவை 59)
இலக்னோ, உத்திரப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்மோனா தீக்சித்து
பிள்ளைகள்1
வாழிடம்புதுதில்லி
As of 16 செப்டம்பர், 2006
மூலம்: [Loksabha profile, Parliament of India]

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

தில்லியின் முன்னாள் முதலமைச்சாரான சீலா தீக்சித்து மற்றும் உத்தரப்பிரதேச மாநிலத் தொகுதியின் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் வினோத் தீக்சிக்கு தம்பதியினருக்கு இவர் மகனாப் பிறந்தார்.[3]

தொழில் தொகு

அரியானா மாநிலத்தின் சோனிபத் நகரத்திலுள்ள ஓபி இயிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தில் ஆசிரிய உறுப்பினராக இருந்தார். [4]

2017 ஆம் ஆண்டு சூன் மாதத்தில் அவர் இந்திய இராணுவத் தளபதி பிபின் ராவத்தின் நடத்தையை "தெருவில் ஒரு குண்டர்" என்ற நடத்தைக்கு ஒப்பிட்டு ஒரு சர்ச்சையைத் தூண்டினார், பின்னர் சமூக ஊடகம் மூலம் மன்னிப்பு கேட்டார். [5]

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

சந்தீப் தீக்சித்து மோனா தீக்சித்து என்ற பெண்ணை மணந்தார். <ref name="india.gov.in"> இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். [3]

மேற்கோள்கள் தொகு

  1. Sahgal, Priya (2009-05-07). "The Rahul offensive". India Today. http://indiatoday.intoday.in/index.php?option=com_content&task=view&id=40749&Itemid=1&issueid=36&sectionid=30&limit=1&limitstart=1. 
  2. Datta, Saikat (2009-06-01). "Inner Courtyard". Outlookindia.com. http://www.outlookindia.com/article.aspx?240577. 
  3. 3.0 3.1 "Shri Sandeep Dikshit". india.gov.in. Archived from the original on 2012-03-14.
  4. "Professor Sandeep Dikshit |". Archived from the original on 2020-12-04.
  5. "Former Congress MP Sandeep Dikshit calls Army chief 'sadak ka goonda', apologises later". http://timesofindia.indiatimes.com/articleshow/59100393.cms. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தீப்_தீக்சித்து&oldid=3886459" இலிருந்து மீள்விக்கப்பட்டது