சந்தோசு சுக்லா
சந்தோசு சுக்லா (Santosh Shukla) இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உள்ள கான்பூர் நகரத்தை சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். பாரதிய சனதா கட்சியை சேர்ந்த இவர்[2] 2000 ஆம் ஆண்டு முதல் முதல் 2001 ஆம் ஆண்டு வரை முதல்வர் ராச்நாத் சிங் அமைச்சரவையில் இணை அமைச்சராகப் பணியாற்றினார்.
சந்தோசு சுக்லா Santosh Shukla | |
---|---|
மாநில அமைச்சர் (உத்தரப் பிரதேசம்) | |
பதவியில் 2000–2001 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
இறப்பு | அக்டோபர் 2001 சிவ்லி காவல் நிலையம், இராமாபாய் நகர் மாவட்டம், உத்தரப் பிரதேசம், இந்தியா[1] |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
1996 ஆம் ஆண்டு, சௌபேபூர் சட்டமன்றத் தொகுதியில் பாரதிய சனதா கட்சி சார்பில் சந்தோசு சுக்லா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். 43,418 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார். தொழிலாளர் ஒப்பந்த வாரியத்தின் தலைவராகவும் இருந்தார்.[1]
2001 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பகுசன் சமாச்சு கட்சியைச் சேர்ந்த தலைவர் மற்றும் குண்டர்கள் எனக் கூறப்படும் விகாசு துபே மற்றும் அவரது 7 உதவியாளர்களுடன் சிவ்லி காவல் நிலையத்திற்குள் துப்பாக்கிகள் மற்றும் நாட்டுத் துப்பாக்கிகளுடன் உள்ளே நுழைந்தவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.[3][1] சந்தோசு சுக்லா கொலையில் விகாசு துபே முதன்மை குற்றவாளியாக இருந்தார்.[4] துபே கைது செய்யப்பட்டார் ஆனால் அரசியல் செல்வாக்கு காரணமாக பின்னர் விடுவிக்கப்பட்டார்.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "BJP leader killed inside police station". தி டைம்சு ஆப் இந்தியா. அக்டோபர் 14, 2001. https://timesofindia.indiatimes.com/city/lucknow/bjp-leader-killed-inside-police-station/articleshow/1000663100.cms.
- ↑ Kamath, Pritesh (சூலை 11, 2020). "'Justice Delivered': Family Of UP Minister Killed By Vikas Dubey Rejoices After Encounter". ரிபப்ளிக் பாரத். https://www.republicworld.com/india-news/law-and-order/vikas-dubey-encounter-up-police-uttar-pradesh-mahakal-ujjain.html.
- ↑ Dixit, Kapil (அக்டோபர் 16, 2001). "CM visits Shukla's family". தி டைம்சு ஆப் இந்தியா. https://timesofindia.indiatimes.com/city/lucknow/cm-visits-shuklas-family/articleshow/179130338.cms.
- ↑ "Vikas Dubey wanted 'dead or alive'". தி டைம்சு ஆப் இந்தியா. அக்டோபர் 16, 2001. https://timesofindia.indiatimes.com/city/lucknow/vikas-dubey-wanted-dead-or-alive/articleshow/1885117737.cms.
- ↑ "SO, 10 others arrested in Shukla murder case". தி டைம்சு ஆப் இந்தியா. அக்டோபர் 15, 2001. https://timesofindia.indiatimes.com/city/lucknow/so-10-others-arrested-in-shukla-murder-case/articleshow/152848841.cms.