சந்தோஷத்தில் கலவரம்

சந்தோஷத்தில் கலவரம் (Santhoshathil Kalavaram) கிராந்தி பிரசாத் இயக்கத்தில் நவம்பர் 2, 2018இல் வெளிவந்த தமிழ்த்திரைப்படம். கிராந்தி பிரசாத்துடன் இணைந்து வி. சி. குமார் இதை தயாரித்திருந்தார். இப்படத்தில் பிரதீப் சின்ஹா, மற்றும் மோனோடாஷ் சின்ஹா ஆகியோர் நிர்வாகத் தயாரிப்பாளர்களாக இருந்தனர். இப்படத்தில் நிரந்த், சி. கல்யாண், ஆர்யன், ருத்ரா ஆரா, ஜெய் ஜெகநாத், ரவிமரியா, கௌதமி, சௌஜன்யா, ஷிவானி, அபேஷ்கா, அலெக்ஸ், சுவாமி போன்றோர் நடித்திருந்தனர் இசை சிவனாக் இசையமைத்திருந்தார்.[1] 2 நவம்பர் 2018இல் வெளி வந்தது

சந்தோஷத்தில் கலவரம்
இயக்கம்கிராந்தி பிரசாத்
தயாரிப்புவி. சி. திம்ம ரெட்டி
கிராந்தி பிரசாத்
கதைகிராந்தி பிரசாத்
இசைசிவனாக்
நடிப்புநிரந்த்
சி. கல்யாண்
ஆர்யன்
ருத்ரா ஆரா
ஜெய் ஜெகநாத்
ரவி மரியா
கௌதமி
சௌஜன்யா
ஷிவானி
அபேஷ்கா
அலெக்ஸ்
சுவாமி
ஒளிப்பதிவுபாலியஸ் கொண்ட்வாஸ்(யு.எஸ்.ஏ)
ஹாரிசன்லோகன் ஹௌஸ்(யு.எஸ்.ஏ)
ஷ்ரவண் குமார்
படத்தொகுப்புகிராந்தி பிரசாத்
கலையகம்ஸ்ரீகுரு சினிமாஸ், மேங்கோ ட்ரீ பிலிம்ஸ்
வெளியீடு2 நவம்பர் 2018
ஓட்டம்130 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிப்பு

தொகு
  • நிராந்த் - வேணு
  • ருத்ரா ஆரா - ஜானி
  • ஆர்யன் - ஆகாஷ்
  • ரவி மரியா - ரகுபதி
  • கௌதமி ஜாதவ் - கலைவாணி
  • சி. கல்யாண் - விக்கி
  • அபேக்‌ஷா பன்ச்சால் - சோனம்
  • சௌஜன்யா - ஹரிணி
  • ஷிவானி - சுஜாதா சுப்ரமணியம்
  • ஜெய் ஜெகந்நாத் - முருகன்
  • அலெக்ஸ் - ரமணா
  • சுவாமி - ஷ்யாம்

கதைச் சுருக்கம்

தொகு

நல்லதற்கும், தீயவைக்கும் நடக்கும் மோதலே இப்படத்தின் கதையாகும். இதில் நட்பு, காதல், பாசம், நகைச்சுவை மற்றும் ஆன்மீகத்தையும் உள்ளடக்கியுள்ளது. எதிர்மறை மற்றும் நேர்மறைக்கிடையேயான போராட்டமே இதன் கதையாகும்.

தயாரிப்பு

தொகு

சந்தோஷத்தில் கலவரம் என்ற இப்படத்தை அறிமுக இயக்குநர் கிராந்தி குமார் இயக்கியுள்ளார், பாலியஸ் கொண்ட்வாஸ் என்பவர் இதன் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். இப்படத்தின் பணியாற்றிய பல தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடித்துள்ள நடிகர்கள் பலரும் வெவ்வேறு துறைகளில் பணி புரிந்து கொண்டே, இப்படத்திலும் பங்கு கொண்டுள்ளனர். மேலும், இப்படத்தின் பெரும்பாலான பகுதி காட்டில் நடப்பது போல இருப்பதால், இயற்கையின் ஒலியை அதன் துல்லியமான வடிவத்திலேயே பதிவு செய்ய விரும்பி இதன் இயக்குநர் கிராந்தி குமார் இங்கிலீஷ் விங்கிலீஷ் மற்றும் த்ருஷ்யம் படத்தில் ஒலிப்பதிவிற்காக புகழ் பெற்ற ஒலி வடிவமைப்பாளரான அருண் வர்மாவை இப்படத்தில் பயன்படுத்திக் கொண்டார்.[1][2][3][4][5][6][7][8]

ஒலித்தொகுப்பு

தொகு
பாடல் விவரம்
# பாடல்பங்கேற்றோர் நீளம்
1. "காற்று வாங்க நல்ல காற்று"  சூரஜ் சந்தோஷ், ரீட்டா தியாகராஜன்]] 4:38
2. "கால காலம் காதல் காலம்"  பி. உன்னிகிருஷ்ணன், சின்மயி 4:16
3. "காடும் மேடும்"  சத்ய பிரகாஷ் 3:13
4. "கண்ணே கண்ணே கண்ணீரு என்ன"  அபய் ஜோத்புர்கர், மதுமிதா 3:16
5. "கல்லோடும் புல்லோடும்"  நிவாஸ் 4:18
6. "சந்தோஷத்தில் கலவரம் தீம்"  ஷிவனாக் 0:58

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "New Indian express-Crew from seven different industries unite for Tamil film Santhoshathil Kalavaram -New Indian Express".
  2. "A film that cannot be defined by any genre – Times Of India".
  3. "Kranthi Prasad's debut film has a message-DECCAN CHRONICLE".
  4. "Kranthi Prasad's Debut Directorial Film Has A Message-Tamil News Desimartini".
  5. "Actor Vishal launches the first look of Santhoshathil Kalavaram First Look-kollytalk". Archived from the original on 2018-06-27. பார்க்கப்பட்ட நாள் 2019-02-06.
  6. "Actor Vishal launches the first look of Santhoshathil Kalavaram First Look-fridaycinemaa". Archived from the original on 2018-11-21. பார்க்கப்பட்ட நாள் 2019-02-06.
  7. "Actor Vishal launches the first look of Santhoshathil Kalavaram- tamilveedhi".
  8. "Actor Vishal launches the first look of Santhoshathil Kalavaram- newstm". Archived from the original on 2018-05-12. பார்க்கப்பட்ட நாள் 2019-02-06.

வெளிப்புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தோஷத்தில்_கலவரம்&oldid=4160917" இலிருந்து மீள்விக்கப்பட்டது