சந்தோஷ் கோப்பை

சந்தோஷ் கோப்பை (Santosh Trophy) என்பது ஆண்டுக்கொருமுறை நடத்தப்படும் இந்திய காற்பந்தாட்டப் போட்டியாகும். இதில் இந்திய மாநில அணிகளும் மத்திய அரசு நிறுவன அணிகளும் பங்கேற்கின்றன. முதல் முறை நடத்தப்பட்ட போட்டியில் வங்காள அணி வென்றது; வங்காள அணியே இக்கோப்பையைப் பலமுறை, அதாவது 31 முறை, வென்றுள்ளது.

சந்தோஷ் கோப்பை
தோற்றம்1941
மண்டலம்இந்தியா
அணிகளின் எண்ணிக்கை31
தற்போதைய வாகையாளர்சர்வீசஸ் (3 பட்டங்கள்)
அதிக முறை வென்ற அணிமேற்குவங்கம் (முன்னதாக வங்காளம்)(31 பட்டங்கள்)
2013 சந்தோஷ் கோப்பை

இப்போட்டி 1941-இல் தொடங்கப்பட்டது. 1996-இல் தேசிய கால்பந்து கூட்டிணைவு தொடங்கப்படும் வரை சந்தோஷ் கோப்பையே இந்தியாவில் கால்பந்துக்கென நடத்தப்படும் மிகப்பெரும் போட்டியாக இருந்தது. தற்போதைய வங்களாதேசத்தில் இருக்கும் சந்தோஷின் மகாராஜா சர் மன்மத நாத் ராய் சௌத்ரி-யின் பெயரில் நடத்தப்படுகிறது. அவர் இந்திய கால்பந்து சங்கம் வங்காளக் கால்பந்து அமைப்பு (இவர்களே கோப்பையை வழங்குபவர்கள்) ஆகியவற்றின் தலைவராக இருந்தார்.

இரண்டாம் இடத்திற்கான கமலா-குப்தா கோப்பை இந்திய கால்பந்து சங்கத்தால் வழங்கப்படுகிறது. மூன்றாம் இடத்திற்கான சம்பங்கி கோப்பை 1952 இலிருந்து மைசூர் கால்பந்து சங்கத்தால் வழங்கப்படுகிறது. மைசூரைச் சேர்ந்த சம்பங்கி எனும் சிறப்பான கால்பந்து வீரரின் நினைவாகவே இக்கோப்பை வழங்கப்படுகிறது.

போட்டிவடிவம்

தொகு

சந்தோஷ் கோப்பைக்கான போட்டிவடிவம் காலப்போக்கில் பலவித மாற்றங்களைச் சந்தித்துள்ளது. தற்போதைய போட்டிவடிவில், முதல் நிலையாக தகுதிச்சுற்றுப் போட்டிகள் உள்ளன. இச்சுற்றில் பங்குபெறும் அணிகள், மூன்று அல்லது நான்கு அணிகள் கொண்ட எட்டு குழுக்களாகப் பிரிக்கப்பெறும். இக்குழுக்களில் வெற்றிபெறும், அதாவது முதலிடம் பெறும், அணிகள் அடுத்த சுற்றுக்குத் தகுதிபெறும். இச்சுற்றில், தகுதிச்சுற்றுப் போட்டிகளில் ஆடத் தேவைப்படாத, முன்னுரிமை பெற்ற நான்கு அணிகளும் இணையும். தற்போது போட்டி காலிறுதிச்சுற்று நிலையை எட்டுகிறது. போட்டியில் உள்ள 12 அணிகளும் மூன்று அணிகள் கொண்ட நான்கு குழுக்களாக பிரிக்கப்பெறும். இந்நான்கு குழுக்களிலும் வெற்றிபெறும் அணிகள் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெறும். அரையிறுதிப் போட்டிகளும் இறுதிப் போட்டியும் ஒருமுறை மட்டும் விளையாடப்பெறும் வடிவில் போட்டி உள்ளது. இப்போட்டிகளில், தேவைப்படின், அதிகப்படியான நேரம், பொன்-இலக்கு (கோல்டன் கோல்), பெனால்டி போன்ற முறைகளில் முடிவு எட்டப்படும்.

வாகையர்கள்

தொகு
ஆண்டு வெற்றியாளர் இரண்டாம் இடம் கெலிப்பெண்
1941–42 வங்காளம் தில்லி 5–1
1942–43 போட்டி நடைபெறவில்லை
1943–44 போட்டி நடைபெறவில்லை
1944–45 தில்லி வங்காளம் 2–0
1945–46 வங்காளம் பாம்பே 2–0
1946–47 மைசூர் வங்காளம் 0–0; 2–0
1947–48 வங்காளம் பாம்பே 0–0; 1–0
1948–49 போட்டி நடைபெறவில்லை போட்டி நடைபெறவில்லை
1949–50 வங்காளம் ஐதராபாத் 5–0
1950–51 வங்காளம் ஐதராபாத் 1–0
1951–52 வங்காளம் பாம்பே 1–0
1952–53 மைசூர் வங்காளம் 1–0
1953–54 வங்காளம் மைசூர் 0–0; 3–1
1954–55 பாம்பே சர்வீசசு 2–1
1955–56 வங்காளம் மைசூர் 1–0
1956–57 ஐதராபாத் பாம்பே 1–1; 4–1
1957–58 ஐதராபாத் பாம்பே 3–1
1958–59 வங்காளம் சர்வீசசு 1–0
1959–60 வங்காளம் பாம்பே 3–1
1960–61 சர்வீசசு வங்காளம் 0–0; 1–0
1961–62 ரெயில்வேசு பாம்பே 3–0
1962–63 வங்காளம் மைசூர் 2–0
1963–64 மகாராஷ்டிரா ஆந்திரப் பிரதேசம் 1–0
1964–65 ரெயில்வேசு வங்காளம் 2–1
1965–66 ஆந்திரப் பிரதேசம் வங்காளம் 1–1; 1–0
1966–67 ரெயில்வேசு சர்வீசசு 0–0; 2–0
1967–68 மைசூர் வங்காளம் 1–0
1968–69 மைசூர் வங்காளம் 0–0; 1–0
1969–70 வங்காளம் சர்வீசசு 6–1
1970–71 பஞ்சாப் மைசூர் 1–1; 3–1
1971–72 வங்காளம் ரெயில்வேசு 4–1
1972–73 வங்காளம் தமிழ்நாடு 4–1
1973–74 கேரளா ரெயில்வேசு 3–2
1974–75 பஞ்சாப் வங்காளம் 6–0
1975–76 வங்காளம் கருநாடகம் 0–0; 3–1
1976–77 வங்காளம் மகாராஷ்டிரா 1–0
1977–78 வங்காளம் பஞ்சாப் 1–1; 3–1
1978–79 வங்காளம் கோவா 1–0
1979–80 வங்காளம் பஞ்சாப் 1–0
1980–81 பஞ்சாப் ரெயில்வேசு 0–0; 2–0
1981–82 வங்காளம் ரெயில்வேசு 2–0
1982–83 வங்காளம் மற்றும் கோவா (ஒருமித்த வெற்றியாளர்கள்) 0–0; 0–0
1983–84 காவா பஞ்சாப் 1–0
1984–85 பஞ்சாப் மகாராஷ்டிரா 3–0
1985–86 பஞ்சாப் வங்காளம் 0–0; 4–1 (pen)
1986–87 வங்காளம் ரெயில்வேசு 2–0
1987–88 பஞ்சாப் கேரளா 0–0; 5–4 (pen)
1988–89 வங்காளம் கேரளா 4–3 (pen)
1989–90 கோவா கேரளா 2–0
1990–01 மகாராஷ்டிரா கேரளா 1–0
1991–92 கேரளா கோவா 3–0
1992–93 கேரளா மகாராஷ்டிரா 2–0
1993–94 வங்காளம் கேரளா 2–2; 7–5 (pen)
1994–95 வங்காளம் பஞ்சாப் 2–1 (golden goal)
1995–96 வங்காளம் கோவா 2–0
1996–97 வங்காளம் கோவா 1–0 (கூ.நே.பி.)
1997–98 வங்காளம் கோவா 1–0
1998–99 வங்காளம் கோவா 5–0
1999–00 மகாராஷ்டிரா கேரளா 1–0
2000–01 போட்டி நடைபெறவில்லை
2001–02 கேரளா கோவா 3–2 (பொன் இலக்கு-golden goal)
2002–03 மணிப்பூர் கேரளா 2–1 (பொன் இலக்கு)
2003–04 போட்டி நடைபெறவில்லை
2004–05 கேரளா பஞ்சாப் 3–2 (பொன் இலக்கு)
2005–06 கோவா மகாராஷ்டிரா 1–1; 2–0 (கூ.நே.பி.)
2006–07 பஞ்சாப் வங்காளம் 0–0; 5–3 (Pen)
2007–08 பஞ்சாப் சர்வீசசு 1–0
2008–09 கோவா வங்காளம் 0–0; 4–2 (Pen)
2010 வங்காளம் பஞ்சாப் 2–1
2011 வங்காளம் மணிப்பூர் 2–1
2012 சர்வீசசு தமிழ்நாடு 3–2
2013 சர்வீசசு கேரளா 0–0; 4–3 (Pen)

வெற்றியாளர்கள்/இரண்டாம் இடம் பெற்றோர்

தொகு

ஒட்டுமொத்த பட்டியல்

தொகு
அணி பட்டங்கள் இரண்டாம் இடம் இறுதிப் போட்டியில் பங்குபெற்ற தடவைகள்
மேற்கு வங்கம் (முன்னதாக வங்காளம்) 31 12 43
பஞ்சாப் 8 6 14
கேரளா 5 8 13
கோவா 5 7 12
மகாராஷ்டிரா (முன்னதாக பாம்பே) 4 11 15
கருநாடகம் (முன்னதாக மைசூர்) 4 5 9
ரெயில்வேசு 3 5 8
சர்வீசசு 3 5 8
ஆந்திரப் பிரதேசம் (முன்னதாக ஐதராபாத்) 3 3 6
டெல்லி 1 1 2
மணிப்பூர் 1 1 2
தமிழ்நாடு (முன்னதாக மதராசு) 0 2 2

1972-லிருந்து: மாநில அணிகளும் போட்டியில் பங்குபெற ஆரம்பித்த பிறகு

தொகு
அணி பட்டங்கள் இரண்டாம் இடம் இறுதிப் போட்டியில் பங்குபெற்ற தடவைகள்
மேற்கு வங்கம் 16 4 20
பஞ்சாப் 7 5 12
கேரளா 5 8 13
கோவா 5 7 12
மகாராஷ்டிரா 3 4 7
மணிப்பூர் 1 1 2
ரெயில்வேசு 0 4 4
கருநாடகம் 0 1 1
சர்வீசசு 2 1 3
தமிழ்நாடு 0 2 2

இலக்கடைந்தோர்/கோல் அடித்தோர்

தொகு

சந்தோஷ் கோப்பைப் போட்டிகளில் அதிக கோல் அடித்த முதல் 6 வீரர்கள்:

  • 1) இந்தர் சிங் (பஞ்சாப்): 45 இலக்குகள்
  • 2) முகமது அபீப் (ஆந்திரா மற்றும் வங்காளம்): 34 இலக்குகள்
  • 3) சியாம் தாபா (சர்வீசசு மற்றும் வங்காளம்): 31 இலக்குகள்
  • 4) பி.கே. பானர்ஜி (வங்காளம் மற்றும் ரெயில்வேசு): 28 இலக்குகள்
  • 5) சுரஜித் சென்குப்தா (வங்காளம்): 26 இலக்குகள்
  • 5) பிசுவாஜித் பட்டாச்சார்யா (வங்காளம்): 26 இலக்குகள்[1]

உசாத்துணைகள் மற்றும் வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தோஷ்_கோப்பை&oldid=3265984" இலிருந்து மீள்விக்கப்பட்டது