சந்த் மினார்

சந்த் மினார் (Chand Minar) அல்லது சந்திர கோபுரம் என்பது இந்தியாவின் தௌலதாபாத்தில் உள்ள ஒரு இடைக்காலத்தில் உருவாக்கப்பட்ட ஒரு கோபுரம் ஆகும். இந்தக் கோபுரம் மகாராட்டிரா மாநிலத்தில் தௌலதாபாத் கோட்டை வளாகத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இது 1445 ஆம் ஆண்டில் ஒரு பாமினி அடிமையால் கட்டப்பட்டது. 1443 ஆம் ஆண்டில் விஜயநகரப் பேரரசுக்கு எதிரான வெற்றியை நினைவுகூரும் வகையில் பாமினி சுல்தானகத்தின் சுல்தான் அலாவுதீன் அகமது ஷாவை நினைவுகூர்ந்தது. சந்த் மினாரானது டெல்லியின் குதுப் மினாரை ஒத்திருக்கிறது, அதிலிருந்து ஈர்க்கப்பட்டது.[1]

சந்த் மினார்
தௌதலாபாத் தியோகிரி கோட்டையிலிருந்து பார்க்கும் போது சந்த் மினார் கோட்டையின் தோற்றம்
வகைமினார்
அமைவிடம்தௌலதாபாத் கோட்டை, இந்தியா
ஆள்கூற்றுகள்19°56′40″N 75°13′03″E / 19.944416°N 75.217429°E / 19.944416; 75.217429
கட்டப்பட்டது1445
க்காக கட்டப்பட்டதுஅலாவுதீன் அகமது ஷா
கட்டிட முறைnபர்சியக் கட்டடக்கலை

சந்த் மினார் தென்னிந்தியாவில் இந்தோ-இசுலாமிய கட்டிடக்கலைக்கான மிகச்சிறந்த மாதிரிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இது 63 மீட்டர் உயரம் கொண்டதும் 4 மாடிகள் மற்றும் 24 அறைகளாக பிரிக்கப்பட்டுள்ளதுமான ஒரு கட்டுமானமாகும். கோபுரத்தின் அடிப்பகுதியில் ஒரு சிறிய மசூதி அல்லது பிரார்த்தனை மண்டபம் அமைந்துள்ளது, இது பாரசீக நீல ஓடுகளால் மூடப்பட்டுள்ளது. கோபுரம் அதன் பலகணிகளை காக்கும் அடைப்புக்குறிகள் போன்ற சில உள்நாட்டு இந்தியக் கட்டிடக்கலை அம்சங்களையும் கொண்டுள்ளது.[2] கோபுரத்தின் உயரம் தௌலதாபாத் கோட்டையின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் அதைக் காண்பிக்கும் வகையில அமைந்துள்ளது.

படக்காட்சியகம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Manohar, Mohit (2021). "A Victory Tower Built by a Slave: The Chand Minar at Daulatabad in Deccan India". Muqarnas Online 38 (1): 57–65. doi:10.1163/22118993-00381P03. 
  2. DESAI, ZIYAUD-DIN A. (2016). Indo-Islamic architecture. Publications Division Ministry of Information & Broadcasting. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788123024066. பார்க்கப்பட்ட நாள் 31 March 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்த்_மினார்&oldid=4116902" இலிருந்து மீள்விக்கப்பட்டது