சனம் தேரி கசம் (2016)
சனம் தேரி கசம் (தமிழாக்கம்: அன்பே உன்மீது ஆணை) ஒரு காதற்கதை திரைப்படம். இதில், அர்ஷவர்தன் ராணே மற்றும் மாரா உசைன் நடித்துள்ளனர். இதனை ராதிகா ராவ் மற்றும் வினய் சப்ரு இணைந்து இயக்க, தீபக் முக்கட் உருவாக்கியுள்ளார். இத்திரைப்படம் எரிக் சேகலின் "லவ் ஸ்டோரி" எனும் நாவலின் புதுமாதிரி விளக்கமாகும். ஈரோஸ் நௌ பெயரின்கீழ், உலகம் முழுவதும் 5 பிப்ரவரி 2016 அன்று வெளியிடப்பட்டது.
சனம் தேரி கசம் | |
---|---|
இயக்கம் | ராதிகா ராவ், வினய் சப்ரு |
தயாரிப்பு | தீபக் முக்கட் |
கதை | ராதிகா ராவ், வினய் சப்ரு |
இசை | ஹிமேஷ் ரேஷம்மிய |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | சிரண்டன் தாஸ் |
விநியோகம் | ஈரோஸ் நவ்[1] |
வெளியீடு | பெப்ரவரி 5, 2016 |
ஓட்டம் | 154 நிமிடங்கள்[2] |
நாடு | இந்தியா |
மொழி | இந்தி |
மொத்த வருவாய் | மதிப்பீடு.₹9 கோடி (US$1.2 மில்லியன்)[3] |
"ஸரு/சரு" எனும் சரஸ்வதி பார்த்தசாரதி மிகவும் மரபுபின்பற்றும், இளம் நூலகர். இவரது "தொன் பழக்கங்கள்" மற்றும் "ஈர்க்கத்தக்கதா" காரணியங்களால் பல வரன்கள் தட்டிப்போகின்றன. இவளது தங்கை "காவேரி"யின் வருங்கால கணவர், தங்கையுடனான தனது திருமணம், ஒரு திங்களுள் நடைபெறவேண்டும் இல்லையேல் அவரவர் வழி சென்றுவிடலாம் என இறுதியாக கூறிவிடுகிறார், ஆனால், இவர்களுது தந்தை ஜெயராம் பார்த்தசாரதி, மூத்தவளுக்கு முன் இளையவளுக்கு திருமணம் நடைபெறக்கூடாது என்பதில் உறுதியுடன் இருக்கிறார். கோபமுற்ற காவேரி, தமக்கையை அவமதித்து பேசி, காதலருடன் உடன்வெளியேறிவிடுவதாக அசச்சுறுத்துகிறாள். துவண்ட சரு விட்டுக்கொடுத்து பேசி, விரைவில் தனக்கென ஒரு கணவனை அமைத்து கொள்வதாக விருது அளித்தாள்.
அன்றிரவு, சரு, அவள் இறந்தபின், அவள் உடலை ஒரு பெரிய அழகிய பூத்துக்குலுங்கும் மரத்தினடியில் அடக்குமாறு கேட்டுக்கொள்கிறாள். இந்தர், ஜெயராமை சந்தித்து, சருவுடனான அவனது திருமணத்தை தெரிவிக்கிறான். திருமண நாள் அன்று, சருவின் பெற்றோர் வருகின்றனர். திருமண பதிப்பில் கையொப்பமிடும் போது, சரு மயங்கிவிழ, அவளை மருத்துவமனையில் சேர்க்கின்றனர். சருவின் பெற்றோர் அவளுக்கிருக்கும், நோய் பற்றி அறிய வரும்போது, மனமுடைந்துபோகின்றனர். இதன்பின், இந்தரின் கையில் சாய்ந்தபடியே, சரு உயிர் துறக்கிறாள். இந்தரின் தந்தை ராஜிந்தர் லால் பரிகார், அங்கு வர, அவரிடம் இந்தர் தன காதலியையும் அவளது இறுதி விருப்பம் குறித்து தெறித்து, தந்தையுடன் ஒன்றுசேர்கிறான்.
காலம் கழிந்த பின், இந்தர் மிகச்சிறந்த வழக்கறிஞராக உருவெடுக்கிறார். இந்தர், சருவின் கல்லறையின் மேல் இருக்கும் மரத்தின் முன் நின்று, அவளை பிரிந்து வாடுவதாக கூறி, தன் மெய்க்காதலை வெளிக்கொள்கிறான்.
நடிகர்கள் தொகு
- அர்ஷவர்தன் ராணே - இந்தர் பரிஹார்
- மாரா உசைன் - சரஸ்வதி பார்த்தசாரதி
- மனிஷ் சௌத்ரி - ஜெயராம் பார்த்தசாரதி,
- சுதீஷ் பெர்ரி - ராஜிந்தர்லால் பரிஹார்
ஒலிப்பதிவு தொகு
அனைத்துப் பாடல்களையும் இசையமைத்தவர் Himesh Reshammiya[4].
# | பாடல் | Singer(s) | நீளம் | |
---|---|---|---|---|
1. | "ஸனம் தேரி காஸம்" | அன்கிட் திவாரி, பாலக் முச்சல் | 05:14 | |
2. | "கீச் மேரி போட்டோ" | தர்ஷன் ராவல், நீட்டி மோகன், ஆகாச சிங்க் | 04:44 | |
3. | "பேவாஜஹ்" | ஹிமேஷ் ரேஷம்மிய | 05:08 | |
4. | "தேர செஹ்ரா" | அர்ஜித் சிங்க | 04:34 | |
5. | "ஹால்-ஏ-தில்" (ஆண்) | ஸ்ரீராம சந்திர மைநாம்பாடி | 05:34 | |
6. | "ஹால்-ஏ-தில்" (பெண்) | நீட்டி மோகன் | 05:24 | |
7. | "ஏக் நம்பர்" | ஹிமேஷ் ரேஷம்மிய, நீட்டி மோகன் | 04:20 | |
8. | "மெயின் தேரி யாதோன் மெய்ன்" | அர்ஜித் சிங்க | 04:16 | |
9. | "ஸனம் தேரி காஸம்" (மறுஉருவாக்கம்) | முஹம்மத் இர்பான் அலி, பாலக் முச்சல் | 04:56 | |
மொத்த நீளம்: |
44:16 |
வருவாய் தொகு
இத்திரைப்படம் முதன்நாள் வெளியீட்டில் 1.25 கோடி ரூபாயை ஈட்டியது. மேலும் முதல் வார வருவாயாக 9 கோடி ரூபாயை ஈட்டியது.
குறிப்புகள் தொகு
- ↑ "Sanam Teri Kasam". http://erosnow.com/#!/movie/watch/1045781/sanam-teri-kasam/6638085/exclusive---official-trailer?ap=1. பார்த்த நாள்: 15 December 2015.
- ↑ "SANAM TERI KASAM (12A)". British Board of Film Classification. 2 February 2016. http://www.bbfc.co.uk/releases/sanam-teri-kasam-film. பார்த்த நாள்: 3 February 2016.
- ↑ Joginder Tuteja (12 February 2016). "Box Office Report Of Ghayal Once Again, Airlift, Sanam Teri Kasam". http://www.koimoi.com/box-office/box-office-report-of-ghayal-once-again-airlift-sanam-teri-kasam/.
- ↑ "First glimpse of Mawra Hocane's debut film 'Sanam Teri Kasam' out". 7 December 2015. http://www.thenewsteller.com/showbiz/first-glimpse-of-mawra-hocanes-debut-film-sanam-teri-kasam-out/29287/. பார்த்த நாள்: 8 December 2015.