சன்குரோ கூவைனான் சூரியப் பண்ணை
உலகின் மிகப் பெரிய சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் பண்ணை ஒன்றை (Sungrow Huainan Solar Farm) சீனாவின் அன்ஹுயி மாகாணத்தில் கூவைனான் நகரத்தில் உருவாக்கி உள்ளது. 40 மெகா வாட் உற்பத்தி திறன் கொண்ட அந்நிலையம் சுமார் 15,000 வீடுகளுக்கு தேவையான மின்சாரத் தேவையை பூர்த்தி செய்யக்கூடியது. உலகில் முதன் முதலில் செயல்பாட்டிற்கு வந்த மிகப்பெரிய மிதக்கும் சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் பண்ணை இதுவே ஆகும்.[1][2][3]
அமைந்துள்ள இடம்
தொகுகூவைனான் நகரம், அன்ஹுயி மாகாணம், சீனா
அன்ஹுயி மாகாணம் சீனாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு மாகாணமாகும். இம்மாகாணம் ஹுவாங்ஷான் மலைகளை தன்னகத்தே கொண்டது. மேலும் அம்மாகாணத்தில் கிடைக்கும் தனித்துவமான கிரானைட் பாறைகளுக்குப் பெயர் போனது. ஆகையால் இப்பகுதியில் சுரங்கத் தொழில் மிகச் சிறப்பு மிக்கதாக திகழ்கிறது.
மிதக்கும் சூரிய மின் உறபத்திப் பண்ணைகள்
தொகுமனிதனால் சுரங்கத் தொழில் / கிராணைட் தொழில் மூலமாக உருவான மிகப்பெரிய பள்ளங்களில் நீர் நிறைந்ததால் உருவான அதாவது மனிதனால் உருவாக்கப்பட்ட இந்த மிகப்பெரிய ஏரிகளில் தான் இந்த மிதக்கும் சூரிய மின் உற்பத்திப் பண்ணைகள் கட்டமைக்கப்பட்டுள்ளன எனபது இதன் தனிச் சிறப்பு.
உற்பத்தி திறன்
தொகு2017ல் 40 மெகா வாட் உற்பத்தி திறனுடன் செயல்படத்துவங்கிய [ஹீனன்]] நகரத்தில் அமைக்கப்பட்ட இந்த மிதக்கும் சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் பண்ணை உலகின் மிகப்பெரிய மிதக்கும் சூரியப்பண்ணையாக அறிவிக்கப்பட்டது.
முதல் கட்டமாக 40 மெகா வாட் எனத் துவங்கப்பட்ட இந்த நீரில் மிதக்கும் மிகப் பிரமாண்ட, உலகின் மிகப் பெரிய சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திறன் கொண்ட சாதனையை அதே நிறுவனம் அடுத்தடுத்த மிகப்பிரமாண்ட மிதக்கும் சூரிய மின் உற்பத்தி மையங்களை உருவாக்கி முறியடித்துக் கொண்டே இருக்கிறது.
பின்வரும் அட்டவணை அப்பகுதியில் விரிவாக்கப்பட்டுவரும் மிதக்கமும் சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் பண்ணைகளையும் அவற்றின் உற்பத்தி திறன் பற்றிய தகவல்களையும் அளிக்கும்.
பிற மிதக்கும் சூரிய மின் உற்பத்திப் பண்ணைகள்
தொகுவ.எண் | உற்பத்தி திறன் | கிராமம் / நகரம் | மாகாணம் | திட்டம் துவங்கிய ஆண்டு |
---|---|---|---|---|
01 | 31 மெகாவாட் | வேஷான்/ஜெனிங் | ஷான்டோங் | 2017 |
02 | 40 மெகாவாட் | ஹுய்யான் | அன்ஹுய் | 2016 |
03 | 50 மெகாவாட் | வேஷான்/ஜெனிங் | ஷான்டோங் | 2017 |
04 | 100 மெகாவாட் | வேஷான்/ஜெனிங் | ஷான்டோங் | 2017 |
05 | 102 மெகாவாட் | ஃபெங்டாய்/ஹுயானன் | அன்ஹுய் | 2017 |
05 | 150 மெகாவாட் | ஃபெங்டாய்/ஹுயானன் | அன்ஹுய் | 2017 |
கட்டியமைத்த நிறுவனம்
தொகுசீனாவைத் தலைமையிடமாகக் கொண்ட சன்குரோவ் பவர் சப்ளை கோ லிட்.,
வெளி இணைப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "the world's largest floating solar plant starts producing power in huainan, china" (in en-US). designboom | architecture & design magazine. 2017-05-25. https://www.designboom.com/technology/sungrow-floating-solar-plant-huainan-china-05-25-2017/.
- ↑ "China Builds the World's Largest Floating Solar Farm". TIME.com. 2017-07-18. பார்க்கப்பட்ட நாள் 2017-08-22.
- ↑ Daley, Jason. "China Turns On the World's Largest Floating Solar Farm" (in en). Smithsonian. http://www.smithsonianmag.com/smart-news/china-launches-largest-floating-solar-farm-180963587/.