சன்னா-உபுலி நிகழ்த்துக் கலைகள் அறக்கட்டளை

இலங்கையின் நடனம்

சன்னா-உபுலி நிகழ்த்துக் கலைகள் அறக்கட்டளை (Channa-Upuli Performing Arts Foundation) இலங்கையின் துணை நகரமான தெகிவளையை தளமாகக் கொண்ட ஒரு நிகழ்த்துக் கலைகள் அமைப்பாகும்.[1][2][3][4][5][6][7][8][9][10]

சன்னா-உபுலி நிகழ்த்துக்கலைகள் அறக்கட்டளை
Channa-Upuli Performing Arts Foundation
உருவாக்கம்1998
நிறுவனர்கள்சன்னா விசெவர்தெனா & உபுலி பானிபாரதா
தலைமையகம்தெகிவளை, இலங்கை

பின்னணி

தொகு

சன்ன விசேவர்தன மற்றும் அவரது மனைவி உபுலி பானிபாரத ஆகியோர் சன்ன-உபுலி நிகழ்த்துக்கலைகள் அறக்கட்டளையை நிறுவினர்.[1]

சன்னா மற்றும் உபுலி இருவரும் இலங்கையின் பாரம்பரிய மற்றும் ஆக்கப்பூர்வமான நடனத்தின் அனைத்து வடிவங்களிலும் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருந்தார்கள். குறிப்பாக கண்டிய மற்றும் சபராகமுவா போன்றவற்றில் இவர்கள் நிபுணத்துவம் பெற்றிருந்தார்கள். சன்னா தனது சொந்த படைப்பான நவீன பாலேவில் நிபுணத்துவம் பெற்றிருந்தார்.[1]

நடன பாணி

தொகு

"உடல் மொழி" என்று அழைக்கப்பட்ட சன்னாவின் நவீன நடனம் "திரிபங்கா"வை அடிப்படையாகக் கொண்டதாகும். இது ஒரு பெண் உடலின் மூன்று வளைவுகளைக் குறிக்கிறது. திரிபங்கா சன்னாவின் அழகான நடனக் கலைஞர்களால் நிகழ்த்தப்படும் ஒரு நெகிழ்வான பாணியாகும்.[1]

பாரம்பரிய கண்டிய, கீழ்நாடு மற்றும் சபராகமுவா பறைகளுடன் அனைத்து வகையான இலங்கை பாரம்பரிய பறை வடிவங்களும் சன்னாவின் நிகழ்ச்சிகளில் அடங்கும்.[1]

சன்னா இளம் வயதில் இலங்கையில் கலாநிதி சித்ரசேனாவின் கீழ் இலங்கையின் பாரம்பரிய நடன வடிவங்களைக் கற்றுக்கொண்டார். பின்னர் இந்தியாவில் மற்ற நடன வடிவங்களையும் பிரான்சில் பாரம்பரிய பாலேவையும் பயின்றார்.[1]

பன்னாட்டு நிகழ்ச்சிகள்

தொகு

சன்னா-உபுலி கலைக்குழு உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. சாட்லர்சு வெல்சு அரங்கம், இங்கிலாந்தில் உள்ள குயின் எலிசபெத் அரங்கம், ஆத்திரேலியாவில் உள்ள சிட்னி ஓபரா அரங்கம் மற்றும் ரீசெண்டு அரங்கம் உட்பட பல பிரபலமான திரையரங்குகளில் நிகழ்ச்சி நடத்தும் வாய்ப்பை சன்னா-உபுலி கலைக்குழு பெற்றுள்ளது.[1]

இலங்கை தனது 50 ஆவது ஆண்டு சுதந்திரத்தை கொண்டாடும் போது சனாதிபதி மாளிகையில் வேல்சு இளவரசர் சார்லசு முன்னிலையில் 1998 ஆம் ஆண்டில் சன்னா மற்றும் குழுவினர் நிகழ்ச்சிகளை நடத்தினர்.[1]

2003 ஆம் ஆண்டு டென்வரில் நடைபெற்ற பன்னாட்டு அரிமாசங்க மாநாட்டில் பங்கேற்ற 178 நாடுகளில் இந்த நடனக் குழு முதல் இடத்தைப் பெற்று இலங்கைக்கு பெருமை சேர்த்தது.

2004 ஆங்காங்கு, 2007 சிகாகோ, 2008 தாய்லாந்து நாடுகளில் பன்னாட்டு அரிமாசங்க மாநாடுகளிலும் இக்குழுவினர் கலந்து கொண்டனர்.[1]

விருதுகள்

தொகு

சன்னாவும் உபுலியும் அவர்களின் நடன சாதனைகளுக்காக உள்நாட்டிலும் பன்னாட்டு அளவிலும் பல விருதுகளை வென்றுள்ளனர்.

சப்பானிய அரசாங்கம் சன்னாவிற்கு "நிகத்துக் கலை"க்கான கௌரவ விருதை வழங்கியது. 2005 ஆம் ஆண்டில் இலங்கை சனாதிபதி சன்னாவிற்கு "கலா சூரி" என்ற உயரிய விருதை வழங்கி சிறப்பித்தார்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 "The Channa-Upuli Performing Arts Foundation". John F. Kennedy Center for the Performing Arts. பார்க்கப்பட்ட நாள் August 19, 2020.
  2. "Rejuvenation". Daily News (Sri Lanka). June 10, 2008. பார்க்கப்பட்ட நாள் August 19, 2020.
  3. "Changing the face of dance". Daily News (Sri Lanka). April 18, 2012. பார்க்கப்பட்ட நாள் August 19, 2020.
  4. "Reaching for the stars". Sunday Observer (Sri Lanka). February 24, 2019. பார்க்கப்பட்ட நாள் August 19, 2020.
  5. "Amman SL Embassy organises road-show to promote Sri Lanka tourism". Daily FT. February 22, 2018. பார்க்கப்பட்ட நாள் August 19, 2020.
  6. ""Thala" Dances Of Sri Lanka By Channa Upuli Performing Arts Foundation". Time Out Group. பார்க்கப்பட்ட நாள் August 19, 2020.
  7. "Channa-Upuli troupe earn accolades". Thuppahi. May 31, 2012. பார்க்கப்பட்ட நாள் August 19, 2020.
  8. "Cultural Hall First Show:" Channa Upuli", in cooperation with the Embassy of Sri Lanka". The Bahrain Authority for Culture and Antiquities. February 26, 2020. பார்க்கப்பட்ட நாள் August 19, 2020.
  9. "Sri Lanka's Independence Day celebrations held grandly in Chennai". Asia Tribune. February 7, 2008. பார்க்கப்பட்ட நாள் August 19, 2020.
  10. "AMBASSADORS OF WORLD PEACE". Mirror Arts. Archived from the original on அக்டோபர் 13, 2017. பார்க்கப்பட்ட நாள் August 19, 2020.