சன்னா மரீன்
சன்னா மிரெல்லா மரீன் (Finnish pronunciation: [ˈsɑnːɑ ˈmirelːɑ ˈmɑriːn];[2] பிறப்பு 16 நவம்பர் 1985) என்பவர் ஒரு பின்னிய அரசியல்வாதியும், பின்லாந்தின் 46வதும் தற்போதைய பிரதமரும் ஆவார். 10 திசெம்பர் 2019லிருந்து இவர் பதவியிலுள்ளார். சமூக மக்களாட்சிக் கட்சியின் உறுப்பினரான இவர், 2015இலிருந்து பின்லாந்து நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளதோடு, 6 சூன் 2019இலிருந்து 10 திசெம்பர் 2019 வரையான குறுகிய காலப்பகுதியில் போக்குவரத்து மற்றும் தொடர்பாடல் அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். 2019 அஞ்சல்துறை வேலைநிறுத்தச் சிக்கலுக்குப் பின் அன்டி ரின் பதவி விலகியதையடுத்து, 8 டிசெம்பர் 2019இல் மரீன் பிரதமராகத் தெரிவுசெய்யப்பட்டார்.
சன்னா மரீன் | |
---|---|
2019ல் மரீன் | |
46வது பின்லாந்துப் பிரதமர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 10 திசெம்பர் 2019 | |
குடியரசுத் தலைவர் | சௌலி நீனிசுட்டோ |
Deputy | கட்ரி குல்முனி மத்தி வன்கானென் அன்னிகா சாரிக்கோ |
முன்னையவர் | அன்ட்டி ரின் |
சமூக மக்களாட்சிக் கட்சியின் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 23 ஆகத்து 2020 | |
முன்னையவர் | அன்ட்டி ரின் |
போக்குவரத்து மற்றும் தொடர்பாடல் அமைச்சர் | |
பதவியில் 6 சூன் 2019 – 10 திசெம்பர் 2019 | |
பிரதமர் | அன்ட்டி ரின் |
முன்னையவர் | அனு வெகுவிலைனென் |
பின்னவர் | ரிமோ அரக்கா |
பின்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 22 ஏப்ரல் 2015 | |
தொகுதி | பிர்க்கன்மா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சன்னா மிரெல்லா மரீன் 16 நவம்பர் 1985[1] எல்சிங்கி, ஊசிமா, பின்லாந்து |
அரசியல் கட்சி | சமூக மக்களாட்சிக் கட்சி |
துணைவர் | மார்க்கசு ராய்கோனென் (தி. 2020) |
பிள்ளைகள் | 1 |
கல்வி | டம்பரே பல்கலைக்கழகம் |
தனது 34வது வயதில் பதவியேற்றதைத் தொடர்ந்து, பின்லாந்து வரலாற்றில் மிக இளவயதுப் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றதோடு,[3][4] சிலியின் கபிரியேல் போரிக்குக்கு அடுத்து உலகின் இரண்டாவது இளவயது அரசுத் தலைவர் எனும் பெருமையையும் பெற்றார்.
இளமைக்காலமும் கல்வியும்
தொகுசன்னா மிரெல்லா மரீன் நவம்பர் 16, 1985ல் எல்சிங்கியில் பிறந்தார்.[5][6] இவர் எசுப்பூ மற்றும் பிர்க்கலா ஆகிய நகரங்களிலும் வசித்துள்ளதோடு, பின்னர் டம்பரே நகரில் குடியேறினார்.[5][மேம்பட்ட ஆதாரம் தேவைப்படுகிறது] இவரது இளவயதிலேயே இவரது பெற்றோர் பிரிந்து விட்டனர். மரீனின் குடும்பம் வறுமையில் வாடியதோடு, அவரது தந்தையான லோரி மரீன்,[7] குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். பெற்றோரின் பிரிவுக்குப் பின், மரீன் தனது தாய் மற்றும் தாயின் பெண் துணைவரின் பராமரிப்பில் வளர்ந்தார்.[8][9][10]
2004ம் ஆண்டில் தமது 19ம் வயதில் மரீன் பிர்க்கலா உயர்நிலைப் பள்ளியில் மேற்படிப்பை நிறைவுசெய்தார்.[11] மரீன் 2006ம் ஆண்டில் சமூக மக்களாட்சி இளையோர் அணியில் இணைந்ததோடு 2010இலிருந்து 2012 வரை அவ்வமைப்பின் முதலாவது துணைத்தலைவராகவும் பதவி வகித்தார்.[12][5] படிக்கும் காலத்தில் ஒரு வெதுப்பகத்தில் பணியாற்றியதோடு, காசாளராகவும் இவர் பணிபுரிந்துள்ளார்.[13] மரீன், டம்பரே பல்கலைக்கழகத்தில் நிர்வாக அறிவியலில் இளமாணி மற்றும் முதுமாணிப் பட்டங்களைப் பெற்றுள்ளார்.[9][13]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sanna Marin". Britannica. பார்க்கப்பட்ட நாள் November 16, 2021.
- ↑ Miten pääministerin sukunimi ääntyy? (in Finnish; "How is the prime minister's family name pronounced?") - Institute for the Languages of Finland
- ↑ "Pääministerien ikä nimitettäessä". Valtioneuvosto (in ஃபின்னிஷ்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-19.
- ↑ "Prime Minister's age on the date of appointment". Valtioneuvosto (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-07.
- ↑ 5.0 5.1 5.2 Marin, Sanna (19 December 2019). "Kuka Sanna? ja Ansioluettelo" ["Sanna who?" and "Resume"]. SannaMarin.net (self-published autobiography). Archived from the original on 19 December 2019. பார்க்கப்பட்ட நாள் 4 February 2020.
Koulutukseltani olen hallintotieteiden maisteri Tampereen yliopistosta. Ylioppilaaksi kirjoitin Pirkkalan yhteislukiosta vuonna 2004. / Asumme mieheni Markuksen ja kaksivuotiaan tyttäremme Emman kanssa Tampereella Kalevan kaupunginosassa. ... / Juureni löytyvät neljän kunnan alueelta. Olen syntynyt Helsingissä, asunut Espoossa, veittänyt kasvu- ja kouluvuoteni Pirkkalassa ja vihdoin kotiutunut Tampereelle. [I hold a Master of Administrative Sciences from the University of Tampere. I was a student and graduated from Pirkkala High School in 2004. / I live with my husband, Markus, and our two year old daughter, Emma, in the Kaleva district of Tampere. ... / My roots are in four municipalities. I was born in Helsinki, lived in Espoo, spent my years growing up and in school in Pirkkala, and finally settled in Tampere.]
{{cite web}}
: External link in
(help)|trans-title=
- ↑ Specia, Megan (10 December 2019). "Who is Sanna Marin, Finland's 34-Year-Old Prime Minister?". The New York Times. https://www.nytimes.com/2019/12/10/world/europe/finland-sanna-marin.html.
- ↑ "The father of Prime Minister Sanna Marini is dead". Teller Report. 2 July 2020. பார்க்கப்பட்ட நாள் 2 July 2020.
- ↑ Greenall, Robert (9 December 2019). "Sanna Marin: The rising star set to lead Finland's 5.5 million". https://www.bbc.com/news/world-europe-50712230.
- ↑ 9.0 9.1 Burtsov, Petri; Heikkilä, Melissa (12 December 2019). "Comrades, meet Finland's new PM". Politico. பார்க்கப்பட்ட நாள் 13 December 2019.
- ↑ Sandelius, Ninni (January 2018). "Sanna Marin: "Juurettomuus pakottaa minut katsomaan tulevaan"". Eeva. பார்க்கப்பட்ட நாள் 17 October 2020.
- ↑ Esfandiari, Sahar. "The rapid rise of Sanna Marin, the 34-year-old Finnish woman set to become the youngest serving world leader". Business Insider. பார்க்கப்பட்ட நாள் 9 December 2019.
- ↑ Hemmilä, Ilkka (18 May 2018). "SDP:n uraohjus nousi 10 vuodessa Pirkanmaan ääniharavaksi – Sanna Marin haluaa ravistella puolueita". Maaseudun Tulevaisuus (in ஃபின்னிஷ்). பார்க்கப்பட்ட நாள் 10 December 2019.
- ↑ 13.0 13.1 O'Connor, Philip (14 December 2019). "How did Finland's Sanna Marin become the world's youngest prime minister?". The Irish Times. https://www.irishtimes.com/news/world/europe/how-did-finland-s-sanna-marin-become-the-world-s-youngest-prime-minister-1.4113352.