சன்னி சிங் (எழுத்தாளர்)
சன்னி சிங் (Sunny Singh), (பிறப்பு: மே 20, 1969) ஒரு இந்திய எழுத்தாளர் ஆவார்.
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
தொகுசன்னி சிங் இந்தியாவின் வாரணாசியில் பிறந்தார். அரசாங்கப் பணியில் இவரது தந்தை இருந்ததால், குறிப்பிட்ட இடைவெளியில், குடும்பம் தவறாமல் நகர்ந்தது. டெஹ்ராடூன், திப்ருகார், அலோங் மற்றும் தேஜு உள்ளிட்ட பல்வேறு இராணுவப் பாசறைகள் மற்றும் புறக்காவல் நிலையங்களில் வசித்து வந்தது. மேலும், இவரது தந்தையின் பணிகளுக்காக, வெளிநாடுகளான, பாகிஸ்தான், அமெரிக்கா மற்றும் நமீபியாவிலும் இந்த குடும்பம் வசித்து வந்தது.
இவர் பிராண்டீஸ் பல்கலைக்கழகத்தில் பயின்றார், அங்கு இவர் ஆங்கிலம் மற்றும் அமெரிக்க இலக்கியங்களில் தேர்ச்சி பெற்றார். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஸ்பானிஷ் மொழி, இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தில் முதுகலை பட்டமும், ஸ்பெயினின் பார்சிலோனா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். [1]
தொழில்
தொகுஇவர் மெக்ஸிகோ, சிலி மற்றும் தென்னாப்பிரிக்காவில் ஒரு பத்திரிகையாளர் மற்றும் மேலாண்மை நிர்வாகியாக பணியாற்றினார். இவர் புது தில்லியில் 2002 வரை ஒரு ஃப்ரீலான்ஸ் எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளராக பணியாற்றினார், அந்தக் காலகட்டத்தில் தனது முதல் இரண்டு புத்தகங்களை வெளியிட்டார். இவர் தனது முனைவர் படிப்பிற்காக, வேலை செய்ய 2002 இல் பார்சிலோனாவுக்குச் சென்று 2006 இல் தனது இரண்டாவது நாவலை வெளியிட்டார்.
சிங் தற்போது லண்டன் பெருநகர பல்கலைக்கழகத்தில் படைப்பாக்க எழுத்தின் மூத்த விரிவுரையாளர் மற்றும் பாடநெறித் தலைவராக உள்ளார். [2]
இலக்கியப் படைப்புகள்
தொகுசிங் மூன்று நாவல்கள், இரண்டு புனைகதை அல்லாத புத்தகங்கள் மற்றும் ஏராளமான சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.
2003 ஆம் ஆண்டில், இவரது முதல் நாவலான நானியின் தற்கொலை புத்தகம் ஸ்பெயினில் மார் டி லெட்ராஸ் பரிசை வென்றது. [3] இவரது சமீபத்திய நாவலான ஹோட்டல் ஆர்காடியா குவார்டெட் புக்ஸ் வெளியிட்டது.
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுசிங் லண்டனில் வசிக்கிறார். சிங் ஆசிரியர்கள் கிளப்பின் தற்போதைய தலைவராக உள்ளார். 2016 ஆம் ஆண்டில், சிங் ஒரு வண்ண எழுத்தாளரால் இந்த ஆண்டின் புத்தகத்திற்கான ஜலக் பரிசை நிறுவினார்.
குறிப்புகள்
தொகு- ↑ "Sunny Singh". thesusijanagency.com. http://www.thesusijnagency.com/SunnySingh.htm.
- ↑ "London Metrolpolitan University – Sunny Singh". londonmet.ac.uk. http://www.londonmet.ac.uk/faculties/faculty-of-social-sciences-and-humanities/people/surnames-n-to-s/sunny-singh.
- ↑ "La India eterna es presentada por la mirada de Singh en reciente novela". abc.es (in Spanish). http://www.abc.es/hemeroteca/historico-28-06-2005/abc/Catalunya/la-india-eterna-es-presentada-por-la-mirada-de-singh-en-reciente-novela_203434115488.html.