சன் சிங்கர்

சன் சிங்கர் என்பது சன் தொலைக்காட்சியில் சனவரி 27, 2013 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகும் உண்மைநிலை பாட்டு போட்டி நிகழ்ச்சி ஆகும். இது தமிழ்நாட்டில் 6 முதல் 13 வயது வரையிலான குழந்தைகளுக்கான பாடும் திறமைக்கான வேட்டையாகும்.[1][2] இந்த நிகழ்ச்சி வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பானது.

சன் சிங்கர்
வகைஉண்மைநிலை
பாட்டு போட்டி
நிகழ்ச்சி
வழங்கல்மானசி (1)
வாரியஸ் (2)
ஐஸ்வர்யா பிரபாகர் (3)
நட்சத்திரம் & முத்து (4)
நாடுஇந்தியா
மொழிதமிழ்
தயாரிப்பு
படப்பிடிப்பு தளங்கள்தமிழ்நாடு
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 45–55 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைசன் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்27 சனவரி 2013 (2013-01-27) –
22 மார்ச்சு 2020 (2020-03-22)

பருவம் 1

தொகு

இந்த நிகழ்ச்சியின் முதல் பருவத்தை "கேட்பரி ஓரியோ" நிதியுதவி செய்தது. மேலும் விகேர், ஜிஆர்பி உதயம் நெய் மற்றும் பிரீமியர் குக்வேர் & அப்ளையன்ஸ் இணைந்து வழங்கினார். இதனை பாடகர் மானசி தொகுத்து வழங்கினார். பாடகர்கள் அனுராதா ஸ்ரீராம் மற்றும் புஷ்பவனம் குப்புசாமி ஆகியோர் இந்நிகழ்ச்சிக்கான நிரந்தர நடுவர்களாக தோன்றினர். பாடலாசிரியரும் இசை இயக்குநருமான கங்கை அமரன் நிகழ்ச்சியின் நிரந்தர குரல் பயிற்சியாளராக தோன்றினார்.

பருவம் 2

தொகு

இந்த நிகழ்ச்சியின் இரண்டாம் பருவத்தை "புதிய கேட்பரி ஓரியோ ஸ்ட்ராபெரி கிரீம்" வழங்கியது. மேலும் வி.கேர், ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் பிரீமியர் குக்வேர் & அப்ளையன்ஸ் இணைந்து வழங்கியது. பருவம் இரண்டின் ஒவ்வொரு பகுதியும் நடிகை நிஷா கிருஷ்ணன், தொடங்கி, பி ஒய் தொலைக்காட்சி தொகுப்பாளரான ரேஷ்மா பசுபுலேட்டயைத் தொடர்ந்து, பாடலாசிரியரும் இசை இயக்குநருமான கங்கை அமரனும், கடைசியாக பாடகர் கமலஜா ராஜகோபாலும் தொடர்ந்தனர். பின்னணிப் பாடகர்கள் அனுராதா ஸ்ரீராம் மற்றும் புஷ்பவனம் குப்புசாமி ஆகியோர் இந்த பருவத்திற்கான நிரந்தர நடுவர்களாக திரும்பினர். கங்கை அமரன் நிகழ்ச்சியின் நிரந்தர குரல் பயிற்சியாளராக திரும்பினார்.

பருவம் 3

தொகு

இந்த நிகழ்ச்சியின் மூன்றாம் பருவத்தை "புதிய கேட்பரி ஓரியோ ஸ்ட்ராபெரி கிரீம்" வழங்கியது. மேலும் விகேர், ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் பிரீமியர் குக்வேர் & அப்ளையன்ஸ் இணைந்து வழங்கியது. பருவத்தின் இரண்டாம் பாதியை ஐஸ்வர்யா பிரபாகர் தொகுத்து வழங்கினார். அதே நேரத்தில் அனுராதா ஸ்ரீராம், புஷ்பவனம் குப்புசாமி, கங்கை அமரன் ஆகியோர் நிரந்தர நடுவர்களாக திரும்பினர்.

இந்த பருவத்தின் வெற்றியாளர் நிகழ்ச்சியின் புரவலர்களிடமிருந்து தொடர்ச்சியான பரிசுகளை பெற்வார் என் அறிவிக்கப்பட்டது. மேலும் இறுதி வெற்றியாளராக ஒரு கோப்பையும் பெறுவார் எனவும் தெரிவிக்கப்பட்டது. இறுதிப் போட்டிகளில் ஒன்பது பேர் தேர்வு செய்யப்பட்டனர், இது 1 டிசம்பர் 28, 2014 அன்று ஒளிபரப்பப்பட்டது. போட்டியின் முடிவுகள் இரண்டாம் பகுதி ஒளிபரப்பில் 4 ஜனவரி 2015 அன்று தலைமை விருந்தினரான இசை இயக்குநர் ஜி.வி.பிரகாஷ்குமாரால் அறிவிக்கப்பட்டது. 4 ஜனவரி 2015 அன்று போட்டியில் ஸ்ரேயா ஜெய்தீப் மூன்றாம் பருவத்தின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். போட்டியில் சாண்ட்ரா ரன்னர்-அப் ஆக முடிசூட்டப்பட்டார். மேலும் ஸ்வேதா ஸ்ரீ என்ற போட்டியாளர் சிறப்பு விருது வழங்கப்பட்டது..

பருவம் 4

தொகு

இந்த நிகழ்ச்சியின் நான்காம் பருவம் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11:00 மணிக்கு ஒளிபரப்பானது. இதை நட்சத்திரா மற்றும் முத்து தொகுத்து வழங்குகினார்கள். நிகழ்ச்சியின் பருவத்தை கேட்பரி ஓரியோ நிதியுதவி செய்தது. மேலும் விகேர், ஜிஆர்பி உதயம் நெய், மற்றும் வசந்த் அண்ட் கோ ஆகிய நிறுவனங்களும் நிதியுதவி செய்தது.

மேற்கோள்கள்

தொகு
  1. SunNetwork - Program Detail
  2. "Sun Singer". Archived from the original on 2018-09-28. பார்க்கப்பட்ட நாள் 2019-10-31.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சன்_சிங்கர்&oldid=4169834" இலிருந்து மீள்விக்கப்பட்டது