சன் பெங் தமிழ்ப் பள்ளி
சன் பெங் தமிழ்ப் பள்ளி (San Peng Tamil School) மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் அமைந்துள்ளது. இப்பள்ளி கோலாலம்பூர் வாழ் இந்தியர்களின் வரலாற்றோடும் வளர்ச்சியோடும் பிணைந்தது. ஒரு காலத்தில் லொக்யூ வீதி அரசினர் தமிழ்ப் பள்ளி என்று பெயர் பெற்ற இப்பள்ளி பின்னர் சாலையின் பெயர் மாற்றத்தால் சன் பெங் வீதி தேசிய மாதிரி ஆரம்பத் தமிழ்ப்பள்ளி என்று வழங்கப்படுகிறது.
சன் பெங் வீதி தேசிய வகை தமிழ்ப்பள்ளி SJK (Tamil) Jalan San Peng | |
---|---|
அமைவிடம் | |
மலேசியா ஜாலான் சன் பெங், கோலாலம்பூர் | |
தகவல் | |
வகை | ஆண்/பெண் இரு பாலர் பள்ளி |
தொடக்கம் | 1926 |
நிறுவனர் | திரு. கருப்பண்ணன் |
பள்ளி மாவட்டம் | புடு |
பள்ளி இலக்கம் | WBD0174 |
தலைமை ஆசிரியர் | திரு. சு. ஜெயபாலன் |
தரங்கள் | 1 முதல் 6 வகுப்பு வரை |
கல்வி முறை | மலேசியக் கல்வித்திட்டம் |
பள்ளி வரலாறு
தொகுஇருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தலைநகரில் லொக் யூ சாலைக்கு உட்புறத்தில் தொழிலாளர் குடியிருப்புப் பகுதியில், கருப்பண்ணன் எனும் ஆசிரியரால் திண்ணைப்பள்ளியாக, இப்பள்ளி தொடங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் அப்பள்ளி அத்தாப்பு ஓலைக் கட்டிடத்திற்கு மாற்றப்பட்டு சிறப்பாக இயங்கி வந்திருக்கிறது. அந்நாளில், அவ்வட்டாரத்தில் வாழ்ந்த நகராண்மைக்கழகம், பொதுப்பணித் துறை, தொலைபேசித் துறை, அஞ்சலகத் துறை ஆகியவற்றின் ஊழியர்களின் குழந்தைகள், அப்பள்ளியில் கல்வி பெற்று வந்தனர். அக்காலகட்டத்தில் தலைநகரில் தமிழர்கள் அதிகம் வாழ்ந்த பகுதியும் இதுவாகும்.
பிள்ளைகளின் எண்ணிக்கையும் தேவையும் அதிகரிக்கவே அன்றைய சிலாங்கூர் அரசாங்கம் 15.10.1926இல் வெளியிட்ட மாநில அரச அறிக்கையில் லொக் யூ சாலைக்கு அருகில் மூன்றே கால் ஏக்கர் பரப்புள்ள நிலப்பரப்பைத் தமிழ்ப் பள்ளிக்கு ஒதுக்கித் தந்தது. அவ்விடத்தில் 1927க்கும் 1930க்கும் இடையில் எட்டு வகுப்பறைகளைக் கொண்ட இரு மாடி பலகைக் கட்டிடம் கட்டப்பட்டது. அதுவே லொக் யூ சாலை அரசினர் பள்ளி எனும் பெயரில் இயங்கியது. எட்டு வகுப்பறைகளைக் கொண்ட அப்பள்ளியில், காலை மாலை என இரண்டு வேளைகளிலும் வகுப்புகள் நடைபெற்றிருக்கின்றன. அப்போது உயர்திரு குப்புசாமி, உயர்திரு செபஸ்தியன் போன்றோர் தலைமையாசிரியர்களாகப் பணியாற்றியிருக்கின்றனர்.1939க்கும் 1941க்கும் இடையில் உயர்திரு அகஸ்டின் தலைமையாசிரியராகப் பணியாற்றியிருக்கின்றார்.
1942இல் இரண்டாம் உலகப் போர் மூண்ட போது, மோசமாகப் பாதிப்படைந்த பள்ளிகளில் இப்பள்ளியும் அடங்கும். 1942ஆம் ஆண்டு முதல் 1945ஆம் ஆண்டு வரை நடைபெற்ற சப்பானியர் ஆட்சி காலத்தில் பள்ளி மூடப்பட்டுக் கிடந்தது. இடையில் சப்பான் மொழி போதிக்கும் பள்ளியாகவும் மாறியிருந்திருக்கிறது. இப்பள்ளியின் ஆசிரியர்கள் சிலர் சப்பான் மொழி பயிற்றுவிக்கும் ஆசிரியர்களாகவும் மாறி பணியாற்றியிருக்கின்றனர். இப்போரினால் பள்ளியின் நாற்பதாண்டு பதிவேடுகளும் குறிப்புகளும் அழிந்தன. முதியோர்களின் செவி வழி செய்தியாகப் பெறப்பட்ட குறிப்புகள்தாம் போருக்கு முந்தய வரலாறாகப் பதிவுசெய்யப்பட்டன என்று 1984இல் வெளியிடப்பட்ட சிறப்பு மலரில் தலைமையாசிரியர் உயர்திரு பொன். காளியண்ணன் குறிப்பிட்டுள்ளார்.
பள்ளித் தலைமையாசிரியர்கள்
தொகுஇரண்டாம் உலகப் போருக்கு முன் (சரியான சான்றுகள் கிடைக்கவில்லை)
எண். | தலைமையாசிரியர் | பொறுப்பேற்ற காலம் |
---|---|---|
1 | திரு. கருப்பண்ணன் | - |
2 | திரு. குப்புசாமி | 1928 -1930 |
3 | திரு. செபஸ்தியான் | 1931 -1936 |
4 | திரு. அகஸ்டின் | 1937 - 1941 |
இரண்டாம் உலகப் போர்க் காலம் (1942-1945):
2ம் உலகப் போருக்குப் பின்:
எண். | தலைமையாசிரியர் | பொறுப்பேற்ற காலம் |
---|---|---|
5 | திரு. யோ. ஞா. மாணிக்கம் | 1945 -1946 |
6 | திரு. அடைக்கலசாமி | 1946 - 1948 |
7 | திரு. பஞ்சாட்சரம் | 1949 -1962 |
8 | திரு. வி. எஸ். மணியம் (இடைக்காலத் தலைமையாசிரியர்) | 1963 |
9 | திரு. மு. துரைசாமி | 1964 - 31.1.1978 |
10 | திரு. க. குஞ்சன் | 1.2.1978 - 25.7.1981 |
11 | திரு. பொன். காளியண்ணன் PPN, PJK | 26.7.1981 - 16.11.1997 |
12 | திருமதி மு. சிவகாமி(இடைக்காலத் தலைமையாசிரியர்) | 17.11.1997 - 29.2.1998 |
13 | திரு. எம். நடராஜா | 1.3.1998 - 29.5.2000 |
14 | திருமதி ந. காவேரியம்மாள் | 30.5.2000 - 12.10.2004 |
15 | திருமதி ஆர். இரத்தினம்மாள் | 13.10.2004 - 30.6.2006 |
16 | திருமதி ச. அஞ்சலைதேவி | 1.7.2006 - 1.7.2013 |
17 | திருமதி லட்சுமி (இடைக்காலத் தலைமையாசிரியர்) | 1.7.2013 - 14.11.2013 |
18 | திரு. சு. ஜெயபாலன் | 15.11.2013 - இன்று வரை |
1970களில் இப்பள்ளியில் போதித்த ஆசிரியர்கள்
தொகு- திரு. மு. துரைசாமி
- திரு. நாராயணசாமி
- திரு. சோமசுந்தரம்
- திரு. பொன். காளியண்ணன்
- டத்தோ. கை. அன்பழகன்
- திரு. சூல்கிஃப்லி (En. Zulkifli)
- திருமதி சரஸ்வதி புலோகசிங்கம்
- திருமதி து. மீனாட்சி
- திருமதி மா. கமலம்
- திருமதி அ.உ. நாதன் (Mrs. Nathan)
1980களில் இப்பள்ளியில் போதித்த ஆசிரியர்கள்
தொகு- திரு. பொன். காளியண்ணன்
- டத்தோ கை. அன்பழகன்
- திரு. சூல்கிஃப்லி
- திரு. சி. சிவபிரகாசம்
- திரு. ஆ. திருவேங்கடம்
- திரு. சி. பிரான்சிஸ்
- திருமதி து. மீனாட்சி
- திருமதி மா. கமலம்
- திருமதி அ. உ. நாதன் (Mrs. Nathan)
- திருமதி ப. நல்லம்மாள்
- திருமதி ந. காவேரியம்மாள்
- திருமதி மு. சிவகாமி
- திருமதி கனகேஸ்வரி
- திருமதி கலைச்செல்வி
இங்குப் படித்த முக்கிய நபர்கள்
தொகு- எம். ஜி. பண்டிதன், மலேசிய அரசியல்வாதி
சான்றுகள்
தொகு- பள்ளியின் புதிய கட்டிடத் திறப்பு விழா சிறப்பு மலர் (1984)
- வெற்றிச்சுடர் 1 (2011)