சபானா சபானா
சபானா சபானா (Sapana Sapana) ஓர் இந்திய மகளிர் நடைப்போட்டி வீரராவார். இராசத்தான் மாநிலம் செய்ப்பூரில் 1988 ஆம் ஆண்டு சனவரி மாதம் 2 ஆம் தேதி சபானா பிறந்தார். 2015 இல் சீனாவின்[1] பெய்சிங் நகரில் நடைபெற்ற உலகத் தடகளச் சாம்பியன் போட்டியில் மகளிருக்கான 20 கிலோமீட்டர் நடைப் போட்டியில் இவர் பங்கேற்றார்[2][3]. 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய விளையாட்டுப் போட்டிகளில் இவர் 20 கிலோமீட்டர் தொலைவை 1:40:35.70 நேரத்தில் நடந்து சாதனை நிகழ்த்தியிருந்தார். இதன்மூலம் பிரேசில் நாட்டின் இரியோடி செனிரோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்காக தகுதி பெற்றார்[4][5].
தனிநபர் தகவல் | |
---|---|
பிறப்பு | 2 சனவரி 1988 |
விளையாட்டு | |
நாடு | இந்தியா |
விளையாட்டு | தடகளம் |
29 ஆகத்து 2015 இற்றைப்படுத்தியது. |
இராசத்தான் மாநில காவல் துறையில் உதவி ஆய்வாளராக சபானா சபானா பணிபுரிகிறார்[2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Women's 20 kilometres walk heats results" (PDF). IAAF. பார்க்கப்பட்ட நாள் 29 August 2015.
- ↑ 2.0 2.1 Amsan, Andrew (30 December 2015). "Boosted by Rio ticket, Sapna Punia eyes better timing". India Today. http://indiatoday.intoday.in/story/boosted-by-rio-ticket-sapna-punia-eyes-better-timing/1/559230.html. பார்த்த நாள்: 26 July 2016.
- ↑ 3.0 3.1 Mukherjee, Debayan (13 May 2016). "Race walker Sapna off to Poland to train ahead of Rio Games". Times of India. http://timesofindia.indiatimes.com/sports/more-sports/athletics/Race-walker-Sapna-off-to-Poland-to-train-ahead-of-Rio-Games/articleshow/52259078.cms. பார்த்த நாள்: 26 July 2016.
- ↑ Vinod, A. (12 February 2016). "National Games: Dutee Chand sprints to glory". The Hindu. http://www.thehindu.com/sport/other-sports/national-games-dutee-chand-sprints-to-glory/article6883265.ece. பார்த்த நாள்: 26 July 2016.
- ↑ Express Web Desk (1 August 2016). "Sapna Punia Profile". The Indian Express. http://indianexpress.com/sports/rio-2016-olympics/sapna-punia-women-20km-walk-2923869. பார்த்த நாள்: 12 August 2016.
புற இணைப்புகள்
தொகு- ஐ.ஏ.ஏ.எஃபில் இடம்பெறும் சபானா சபானா-இன் குறிப்புப் பக்கம் .