சபீதா சௌத்ரி

சபீதா சௌத்ரி (Sabita Chowdhury-1944 அல்லது 1945 – 29 சூன் 2017) ஓர் இந்தியப் பாடகர் ஆவார்.

சபீதா சௌத்ரி
பிறப்பு1944/1945
இறப்பு (அகவை 72)
கொல்கத்தா, இந்தியா
பணிபாடகி
வாழ்க்கைத்
துணை
சலீல் சௌத்ரி
பிள்ளைகள்4 (அந்தாரா சௌத்ரி)

சபிதா சவுத்ரி 1944-இல் பிறந்தார். சலீல் சவுத்ரியை மணந்த இவருக்கு இரண்டு மகள்களும் (அந்தரா மற்றும் சஞ்சரி) இரண்டு மகன்களும் (சஞ்சாய் மற்றும் பாபி) உள்ளனர். சபீதா சவுத்ரி நுரையீரல் புற்றுநோயால் கொல்கத்தா 29 சூன் 2017 அன்று தனது 72 வயதில் இறந்தார்.[1] இவரது உடல் இரவீந்திர சதனில் நல்லடக்கம் செய்யப்பட்டது.[2]

பெங்காலி மற்றும் இந்தி மொழிகளில் பாடிய சவுத்ரி, திரைப்படங்களுக்கும் பின்னணி பாடகராக பணியாற்றினார். இவரது மிகவும் பிரபலமான பாடல்களில் சில "து சோகே ஆசார் நதி சலாச்சல்", "ஜாரே ஜா ஜா மோனோ பாகி", மற்றும் "ஓய் ஜில்மில் ஜௌர் போனி" ஆகும்.[2]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சபீதா_சௌத்ரி&oldid=3920479" இலிருந்து மீள்விக்கப்பட்டது