சபீனா ரபி (Sabeena Rafi)(6 அக்டோபர் 1918 - 22 சூன் 1990) என்பவர் இந்தியக் கட்டுரையாளரும் மலையாள இலக்கிய வரலாற்றாசிரியரும் ஆவார். இவரது படைப்புகள் தத்துவப் படைப்புகள், சுயசரிதை மற்றும் நாடகங்களாகும். இவரது சவிட்டு நாடகம் - ஒரு சரித்திர பாடனம், சவிட்டு நாடகத்தின் முதல் வரலாற்றுத் தொகுப்பு ஆகும். இந்த நாடகம் நடன வடிவத்திலானது. இவரது கணவர் பொஞ்சிக்கார ரபியுடன் இணைந்து எழுதிய கலியுகம் இவரது எழுதிய புத்தகம் ஆகும். இந்த புத்தகம் மூலம் 1972-ல் இதர படைப்புகளுக்கான கேரள சாகித்திய அகாதமி விருது இவருக்குக் கிடைத்தது.

சபீனா ரபி
Sabeena Rafi
பிறப்பு(1918-10-06)6 அக்டோபர் 1918
எர்ணாகுளம் மாவட்டம், கேரளம், இந்தியா
இறப்பு22 சூன் 1990(1990-06-22) (அகவை 65)
பணிகட்டுரையாளர், வரலாற்று ஆசிரியர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்சவிட்டு நாடகம் - ஒரு சரித்திர பாடனம்
கலியுகம்
வாழ்க்கைத்
துணை
பொஞ்சிக்கார ரபி
விருதுகள்கேரள சாகித்திய அகாதமி, இதர படைப்புகள்

வாழ்க்கை

தொகு

சபீனா 1918ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி தென்னிந்தியாவின் கேரள மாநிலத்தின் இன்றைய எர்ணாகுளம் மாவட்டத்தின் சுற்றுவட்டாரத்தில் உள்ள கோதுருத் என்ற சிறிய கிராமத்தில் ஜோசப் மற்றும் மரியம்மாளாக்கு மகளாகப் பிறந்தார்.[1] இவர் வரலாறு மற்றும் பொருளாதாரத்தில் இரண்டு முதுகலைப் பட்டங்களைப் பெற்றார். மேலும் ஆசிரியராகக் கல்விப் பணியில் சபீனா சேர்ந்தார். இவர் 1963-ல் காதலன்[2] பொஞ்சிக்கார ரபியை மணந்தார்.[3] இந்த தம்பதியருக்குக் குழந்தை இல்லை.[4] சபீனா 22 சூன் 1990 அன்று தனது 65 வயதில் இறந்தார்.[5] இவரது கணவர் ரபி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 6 செப்டம்பர் 1992-ல் இறந்தார்.[3]

வெளியீடுகளும் விருதுகளும்

தொகு

சபீனா ரபியின் படைப்புகளில் ஐந்து புனைகதை அல்லாத படைப்புகள் மற்றும் இவரது சுயசரிதையான கிருதுமாஸ் சம்மனம் ஆகியவை அடங்கும்.[6] சவிட்டு நாடகம் - ஒரு சரித்திர பாடனம், 1964ஆம் ஆண்டு எர்ணாகுளத்தில் தோன்றிய சவிட்டு நாடகத்தின் வரலாறு குறித்த இவரது வெளியீடு. இது நாடகம் குறித்த முதல் விரிவான புத்தகமாகக் கருதப்படுகிறது.[7] மார்க்சியம், ஒரு திரிஞ்சுனோட்டம், இவரது கணவருடன் இணைந்து எழுதப்பட்ட புத்தகம் ஆகும். இது மார்க்சியக் கோட்பாடு மற்றும் பண்புகளைப் பற்றிய விரிவான ஆய்வு நூல். இந்தப் புத்தகத்தில் மாக்சிம் கார்க்கியின் தாய் பற்றிய விமர்சனமும் உள்ளது.[8] கலியுகம், மீண்டும் பொஞ்சிக்கார ரபி இணைந்து எழுதப்பட்ட படைப்பாகும். இது ஆரம்பக் காலத்திலிருந்தே மனித நடத்தைகளைத் தத்துவ கண்ணோட்டத்துடன் ஆய்வு செய்கிறது.[4] இப்புத்தகம் 1972-ல் இதர படைப்புகளுக்கான கேரள சாகித்திய அகாதமி விருதைப் பெற்றது.[9]

நூல் பட்டியல்

தொகு
  • Chavittu Nadakam - Oru Charithra Padanam. 1964.
  • Christumas sammanam. 1968.[தொடர்பிழந்த இணைப்பு]
  • Kaliyugam. 1982.
  • Marxism Oru Thirinjunottam, Emmavoosilekkula Yathrayum. 1991.
  • Sukradasayude charitram. 1992.

மேற்கோள்கள்

தொகு
  1. "Biography on Kerala Sahitya Akademi portal". Biography on Kerala Sahitya Akademi portal. 2019-04-09. பார்க்கப்பட்ட நாள் 2019-04-09.
  2. ഉണ്ണികൃഷ്ണൻ, കെ. "പോഞ്ഞിക്കര റാഫിയെ മറന്നതെങ്ങനെ ?". Mathrubhumi (in ஆங்கிலம்). Archived from the original on 2019-04-10. பார்க்கப்பட்ட நாள் 2019-04-10.
  3. 3.0 3.1 "Sabeena Rafi". Kerala Sahitya Akademi. 2019-04-10. பார்க்கப்பட்ட நாள் 2019-04-10.
  4. 4.0 4.1 "Ponjikkara Rafi - Veethi profile". veethi.com. 2019-04-10. பார்க்கப்பட்ட நாள் 2019-04-10.
  5. "കേട്ടിട്ടുണ്ടോ പോഞ്ഞിക്കര റാഫിയെന്ന്?". ManoramaOnline. பார்க்கப்பட்ட நாள் 2019-04-10.
  6. "List of works". Kerala Sahitya Akademi. 2019-04-09. பார்க்கப்பட்ட நாள் 2019-04-09.
  7. "Chavittunatakam: Maritime Dance Drama of Kerala". www.sahapedia.org. பார்க்கப்பட்ட நாள் 2019-04-10.
  8. "Marxism Oru Thirinjunottam". www.indulekha.com. 2019-04-10. Archived from the original on 2019-04-10. பார்க்கப்பட்ட நாள் 2019-04-10.
  9. "Kerala Sahitya Akademi Award for Miscellaneous Works". Kerala Sahitya Akademi. 2019-04-10. பார்க்கப்பட்ட நாள் 2019-04-10.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சபீனா_ரபி&oldid=4110115" இலிருந்து மீள்விக்கப்பட்டது