சப்தகிரி சங்கர் உலகா

சப்தகிரி சங்கர் உலகா (Saptagiri Sankar Ulaka) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2019 இந்திய பொதுத் தேர்தலில் இந்தியத் தேசிய காங்கிரசின் வேட்பாளராக ஒடிசாவின் கோராபுட் நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் அவையான மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

சப்தகிரி சங்கர் உலகா
ସପ୍ତଗିରି ଶଙ୍କର ଉଲ୍ଲାକା
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
17 சூன் 2019
முன்னவர் ஜின்னா கிக்கா
தொகுதி கோராபுட்
தனிநபர் தகவல்
பிறப்பு 1 சனவரி 1979 (1979-01-01) (அகவை 44)
ராயகடா, ஒடிசா
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
வாழ்க்கை துணைவர்(கள்) பூஜா உலகா
இருப்பிடம் ராயகடா
As of 13 மே, 2019
Source: [1]

ஆரம்ப வாழ்க்கை & கல்வி தொகு

சப்தகிரியின் தந்தை ராமச்சந்திர உலகா[2] கோராபுட்டில் இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், ஏழு முறை ராயகடாவிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர் ஆவார். சப்தகிரியின் தாயார் இரத்னமணி அனைத்திந்திய இந்திய காங்கிரசு குழுவின் உறுப்பினரும், மகளிர் காங்கிரசின் ஒடிசா மாநில துணைத் தலைவருமாவார். சப்தகிரி, மென்பொருள் பொறியாளர் ஆவார். இவர் அமெரிக்காவில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தின் மூத்த திட்ட மேலாளராக இருந்தார். ரான்பாக்சி, எச். சி. எல். டெக்னாலஜிஸ் போன்ற முன்னணி நிறுவனங்களிலும் பணிபுரிந்துள்ளார். கோராபுட்டின் நலன் மற்றும் மேம்பாட்டிற்குப் பிரச்சனைகளில் முக்கிய பங்காற்றியுள்ளார்.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சப்தகிரி_சங்கர்_உலகா&oldid=3708864" இருந்து மீள்விக்கப்பட்டது