சப்னம் கனி லோன்

இந்திய அரசியல்வாதி


சப்னம் கனி லோன் (Shabnam Gani Lone) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். காசுமிரி பெண் ஆய்வாளராகவும் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் இவர் அறியப்படுகிறார். 2002 ஆம் ஆண்டு சிறீநகரில் நடந்த பேரணியில் கொல்லப்பட்ட பிரிவினைவாத தலைவரான அப்துல் கனி லோன் இவரது தந்தையாவார்.[1]

சப்னம் கனி லோன்
Shabnam Gani Lone
கல்விகாசுமீர் பல்கலைக்கழகம்
அலிகர் முசுலிம் பல்கலைக்கழகம்
பணிவழக்கறிஞர், அரசியல்வாதி, பெண் ஆய்வாளர்
உறவினர்கள்சாச்சித்து கனி லோன்(சகோதரர்)

கல்வி மற்றும் தொழில் தொகு

காசுமீர் பல்கலைக்கழகத்தில் சப்னம் கனி லோன் ஆங்கிலத்தில் பட்டப்படிப்பை முடித்தார், பின்னர் அலிகார் முசுலிம் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பைத் தொடர்ந்தார். தில்லிக்கு செல்வதற்கு முன்னர் சம்மு மற்றும் காசுமீர் வழக்கறிஞர் சங்கத்தில் மூன்று வருடங்கள் வழக்கறிஞர் பயிற்சி பெற்றார். இவருடைய தந்தையின் படுகொலைக்குப் பிறகு. 2007 ஆம் ஆண்டில் அரசியலில் சேர்ந்தார். பொதுத் தேர்தலில், 2008 ஆம் ஆண்டு இவர் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டார். ஆனால் இத்தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

ஒரு செயல்பாட்டளராக இருந்ததால், சப்னம் சிறீநகரில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் ஒரு பிணைக் கைதியாக வைக்கப்பட்டார், மேலும் சம்மு மற்றும் காசுமீர் அரசாங்கத்தால் தடாவின் கீழும் பதிவு செய்யப்பட்டார்.

இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்த சப்னம் லோன், சம்மு காசுமீர் அமைச்சராக இருந்த சச்சத்து கனி லோனின் மூத்த சகோதரியும் ஆவார். [2] [3] [4]

விருதுகள் தொகு

  • சப்னம் கனி லோன், அமெரிக்க நூலகவியல் நிறுவனத்தால் ' வழங்கப்படும் மில்லினியத்தின் சிறந்த பெண்மணி' எனற விருது பெற்றுள்ளார். [5]

மேற்கோள்கள் தொகு

  1. Thakur, Sankarshan (12 May 2009). "Off boycott coldstore, on steep uphill". The Telegraph. Archived from the original on 13 September 2012. பார்க்கப்பட்ட நாள் 3 June 2009.
  2. "Sibling rivalry: Farooq, Lone face stiff opposition from sisters".
  3. "Shabnam Lone". பார்க்கப்பட்ட நாள் 27 March 2019.
  4. "The Tribune, Chandigarh, India – Main News". பார்க்கப்பட்ட நாள் 27 March 2019.
  5. Urvashi Butalia. Speaking Peace: Women's Voices from Kashmir. Kali for Women. https://books.google.com/books?id=s0anDAAAQBAJ&q=Shabnam+lone+TADA&pg=PT268. Urvashi Butalia (2008). Speaking Peace: Women's Voices from Kashmir. Kali for Women. ISBN 978-8186706572.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சப்னம்_கனி_லோன்&oldid=3838574" இலிருந்து மீள்விக்கப்பட்டது