சப்பானில் தாவோயியம்

தாவோயியம் சப்பானிய கலாச்சாரத்தின் ஆன்மீக கருத்துக்களின் உள்ளுறை துாண்டுதலாக இருப்பதாக நம்பப்படுகிறது. இம்மதம் சீனாவின் பூர்வீகக் குடிமக்களின் மரபுவழி மதமான  சிந்தோவுடன்  ஒத்ததாக இருந்தாலும்,  அது இன்னும் இறுக்கமானதாகவும், அசாதாரணமானதாகவும் உள்ளது. தாவோயியத்தின் செல்வாக்கை சப்பானிய கலாச்சாரம் முழுவதிலும் காண முடியும் எனினும் கன்பூசியத்தோடு ஒப்பிடும் போது இதன் தாக்கம் குறைவான அளவு தான் காணப்படுகிறது என்பதையும் அறியலாம்.

செய்டென்க்யு, சைதாமாவில் சகாடோவில் உள்ள தாவோயிய ஆலயம்

சப்பானிய தாவோயியத்தில் மூடநம்பிக்கைகள் அல்லது சோதிடத்தில் தனது மூலத்தைக் கொண்டவையாக இருக்கலாம். பேய்கள் மற்றும் ஆவிகள் பற்றிய கருத்துக்களில் தாவோயியத்தின் ஓனிமோகோ மற்றும் சூசென்டோ போன்றவற்றில் தனது வேர்களைக் கொண்டிருக்கின்றன. பரவலாக பயன்படுத்தப்படும் பேய்களை விரட்டும் உச்சாடனர்கள் பயன்படுத்தும் செட்சுபன் (節 分) சடங்கு மற்றும் மந்திரமான ”பேய்கள் வெளியேறட்டும், யோகம் உள்வரட்டும்” என்ற மந்திரத் தொடரும் தாவோயியத்தில் தனது அடிப்படையைக் கொண்டுள்ளது.'ஒகமியாசான்' என்றழைக்கப்படும் கலந்துரையாடல் கலாச்சாரங்கள் குறித்த பகிர்வின் போது வீடுகள் கட்டுமானம் போன்ற நிகழ்வுகளின் போது நிழ்த்தப்படும் தாவோயியம் சார்ந்த உள்ளுணர்வு குறித்து கருத்துக்கள் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.தாவோயியம் ஒரு நிகழ்விற்கு சிறப்பளிக்கும் வகையில் சிறந்த நாள், பொழுது, நேரம் போன்றவற்றைக் காட்டும் நாட்காட்டி ஒன்றைக் கொண்டிருந்தது. (டென்கென்ஜுட்சு (யோகம் கூறுதல்)).[1]

சொற்பிறப்பியல் தொகு

சப்பானிய எழுத்து வடிவத்தில் தாவோயியத்திற்கான முத்திரை எழுத்தான கன்சி என்பது (டோ-க்யோ) 道教 (Dô-kyô) என்பதாக குறிக்கப்படுகிறது. இந்த முத்திரை எழுத்தின் மூலமானது 道 (மிச்சி, வழி, பாதை) + 教 (க்யோ, நெறிமுறைகள், போதனைகள், கல்வி) என்பதாக இருக்கிறது. டோ என்பது தாவோ எனப்படும் சீன எழுத்து (道) கொண்டுள்ள அதே ”வழி” என்ற பொருளைக் கொண்டுள்ளது. [2]

சப்பானில் தாவோயியம் தொகு

நிகோன் சோகி யின் கதைகளில் காணப்படும் ஒரு கதையின் படி, தஜீமா மோரி என்ற ஒரு மனிதன், மரணமில்லாத நிலையான வாழ்விற்கான, அமுதத்தைக் கண்டெடுக்க அழிவின்மைக்கான நிலத்தை அடைந்ததாகவும், அங்கு அவர் "நறுமணப் பழம்" ஒன்றை தனது ஆட்சியாளரிடம் வழங்குவதற்காக கொண்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. கண்டுள்ளனர். முன்னதாக அரசர் இறந்து விட்டபடியால், தாஜிமா மோரி மீது வழக்கு தொடரப்பட்டது. கல்வியாளர்கள் அழியாத்தன்மைக்கான இடம் என்பது பெங்லாய் எனப்படும் தீவுக்கூட்டம் என்பதையும், மணமுள்ள பழமானது மாண்டரின் ஆரஞ்சைப் போன்ற பழம் என்பதையும் அடையாளம் கண்டனர்.[3]

சீனாவின் அரசியலமைப்புச் சட்டமானது 7 ஆம் மற்றும் 8 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், குறிப்பாக யிங் மற்றும் யாங் , ஒம்யோகன் பேழையிலிருந்தே எடுக்கப்பட்டது எனலாம். நேரம் தவறாமை, கனவு விளக்கம் மற்றும் நாட்காட்டி கணக்கீடு ஆகியவை யிங்-யங் மற்றும் ஐந்து நிலைகள் கோட்பாடு, அண்டவியல் ஆகிய அடிப்படைகளை வைத்து உருவாக்கப்பட்டவையாகும். 10 ஆம் நுாற்றாண்டு காலகட்டத்தில் 10 ஆம் நூற்றாண்டில், யோகமற்றவற்றை விலக்கி வைக்க உதவும் மதச்சடங்குகள் உருவாக்கப்பட்டன. இது சப்பானில் "இன்யோடோ" அல்லது யின்-யங் என்ற பெயரிடப்பட்ட மத நடைமுறையாக அறியப்பட்டது.

சப்பானின் சாமானிச மற்றும் மலை வழிபாடு, சுகென்டோ ஆகியவற்றிலும், தாவோயியம் தாக்கத்தை ஏற்படுத்தியது. இது 7 ஆம் நூற்றாண்டில் இணைந்த புத்தமதத்தில், யிங்-யங் கணிப்பு, சின்டோ மற்றும் தாவோயிச கூறுபாடுகள் என அனைத்தையும் உள்ளடக்கியவையாகத் தொடங்கியது. ஒரு காலகட்டத்தில் படைவீரர்கள் புனித மலையினுள் நுழையும் முன் பயன்படுத்தப்பட்ட "கீழே இறங்கி வாருங்கள், படைவீரர்களே, என்முன்னே வரிசையில் நில்லுங்கள்” என்ற வாசகம் தாவோயிய தாக்கத்தால் விளைந்தவையாகும். தாவோயியத்தின் தாக்கத்தின் விளைவாக மற்றொரு சடங்கு சூத்திரமான "விரைவாக, விரைவாக, சட்டங்களுக்கும் விதிமுறைகளுக்கும் இணங்குங்கள்!" என்ற வாசகம் இன்றும் கூட சப்பானில் பதாகைகளிலும், தாயத்துகளிலும், கூரை ஓடுகளிலும் காணப்படுவதிலிருந்து அறியப்படலாம்.

மேற்கோள்கள் தொகு

  1. Hendry, Joy (2003). Understanding Japanese Society. Britain: Routledge. https://archive.org/details/understandingjap0000hend. 
  2. Kodansha's furigana Japanese Dictionary. Japan: Kodansha Inc.. 1999. 
  3. https://books.google.com/books?id=EXVk1tr6lEYC&pg=PP1&lpg=PP1&dq=daoism+handbook&source=bl&ots=iHzJAScmVd&sig=4oG8mud2A65TDaZdpwhF1IYlIAI&hl=en&sa=X&ei=0HsGUIfBB4qsrAfUpIC-Bg&redir_esc=y#v=onepage&q=daoism%20handbook&f=false
"https://ta.wikipedia.org/w/index.php?title=சப்பானில்_தாவோயியம்&oldid=3581992" இலிருந்து மீள்விக்கப்பட்டது