சப்பிரகமுவா மாகாண சபையின் கொடி

சப்பிரகமுவா மாகாண சபையின் கொடி என்பது, இலங்கையின் ஒன்பது மாகாண சபைகளுள் ஒன்றான சப்பிரகமுவா மாகாண சபைக்கான கொடி ஆகும். இது 1987ம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.


சப்பிரகமுவா மாகாண சபையின் கொடி
பயன்பாட்டு முறை Civil and state கொடி Small vexillological symbol or pictogram in black and white showing the different uses of the flag
அளவு 2:3
ஏற்கப்பட்டது 1987
வடிவம் மஞ்சள் நிறக் கரையுடன் கூடிய கடும் சிவப்புக் கொடி. நான்கு மூலைகளிலும் அரசிலைகள். நடுவில் சவுக்கு ஏந்திய சிங்கமும் அதன் இருபுறமும் சூரியனும், சந்திரனும்.

வரலாறு

தொகு

1987 ஆம் ஆண்டில் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தச் சட்டம், மாகாண சபைகள் சட்டம் இல. 42, 1987 ஆகியவற்றின் கீழ் சப்பிரகமுவா மாகாண சபை உருவாக்கப்பட்ட போது அதற்கான கொடியொன்று வடிவமைக்கப்பட்டது.

அமைப்பு

தொகு

சப்பிரகமுவா மாகாண சபையின் கொடி மஞ்சள் நிறக் கரையுடன் கூடிய கடுஞ் சிவப்பு நிறம் கொண்டது. இலங்கையின் தேசியக் கொடியில் உள்ளதுபோல் கொடியின் நான்கு மூலைகளிலும் அரசிலைகள் காணப்படுகின்றன. நடுவில் சவுக்கு போன்ற ஒரு பொருளை ஏந்திய மஞ்சள் நிறச் சிங்கம் உள்ளது. சிங்கத்தின் இரு புறமும் மேற்பகுதியை அண்டி சூரிய சந்திரர்களைக் குறிக்கும் சின்னங்கள் உள்ளன.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. "சப்பிரகமுவா மாகாண சபைக் கொடி". Archived from the original on 2010-11-24. பார்க்கப்பட்ட நாள் 2015-09-19.