சமதொடுகோட்டு வட்டம்

சமதொடுகோட்டு வட்டம் (Radical circle) என்பது, பொதுமைய வட்டங்களல்லாத மூன்று வட்டங்களை செங்குத்தாக வெட்டும் வட்டமாகும். இந்த வட்டத்தின் மையம் சமதொடுகோட்டச்சுச் சந்தி எனப்படுகிறது. மூன்று வட்டங்களை இரண்டிரண்டாக எடுத்துக்கொண்டு மூன்று சமதொடுகோட்டு அச்சுகள் வரைந்தால் அவை மூன்றும் சந்திக்கும் புள்ளியே சமதொடுகோட்டச்சுச் சந்தி. எனவே இப்புள்ளியின் படி மூன்று வட்டங்களுக்கும் சமம். இந்தப் படியின் வர்க்கமூலத்தை ஆரமாகவும் சமதொடுகோட்டச்சுச் சந்தியை மையமாகவும் கொண்டு வரையப்படும் சமதொடுகோட்டு வட்டமானது மூன்று வட்டங்களையும் செங்குத்தாக வெட்டும். அதாவது எடுத்துக்கொள்ளப்பட்ட மூன்று வட்டங்கள் ஒவ்வொன்றும், சமதொடுகோட்டு வட்டத்தை வெட்டும் புள்ளியில் அவற்றின் தொடுகோடுகளுக்கு இடையேயுள்ள கோணம் செங்கோணமாக இருக்கும்

தரப்பட்ட மூன்று வட்டங்களின் (கருப்பு) சமதொடுகோட்டு வட்டம் (ஆரஞ்சு); சமதொடுகோட்டச்சுச் சந்தி (ஆரஞ்சு).

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சமதொடுகோட்டு_வட்டம்&oldid=3421009" இலிருந்து மீள்விக்கப்பட்டது