சமத்ரா தொலைக்காட்சி கோபுரம்

சமத்ரா தொலைக்காட்சி கோபுரம் (Samatra TV tower) இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் உள்ள கட்சு மாவட்டத்தில் பூச்சு நகருக்கு மேற்கே 12 மைல் தொலைவில் சமத்ரா கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ளது. தொலைக்காட்சி மற்றும் வானொலி ஒளிபரப்புக்கு இக் கோபுரம் பயன்படுகிறது. 1999 ஆம் ஆண்டில் கோபுரத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தன. 300 மீ (984 அடி) உயரம் கொண்ட சமத்ரா தொலைக்காட்சி கோபுரம் இந்தியாவில் அமைந்துள்ள எட்டாவது உயரமான அமைப்பாகும். உலக அளவில் இக்கோபுரத்தின் உயரம் 201 ஆவது உயரமான அமைப்பாக வரிசைப்பபடுத்தப்பட்டுள்ளது.[1]

சமத்ரா தொலைக்காட்சி கோபுரம்
Samatra TV tower
Samatra TV tower
Samatra TV tower
Map
பொதுவான தகவல்கள்
வகைதொலைக்காட்சி மற்றும் வானொலி ஒலிபரப்புக் கோபுரம்
இடம்புஜ், இந்தியா
ஆள்கூற்று23°11′31″N 69°28′37″E / 23.191859°N 69.476877°E / 23.191859; 69.476877
நிறைவுற்றது1999
உயரம்
அலைக்கம்ப கோபுரம்300 m (984 அடி)

மேற்கோள்கள்

தொகு
  1. "Ten Tallest Television Tower of India". walkthroughindia.com. பார்க்கப்பட்ட நாள் 19 July 2017.