சமநிலை (வடிவமைப்பு)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வடிவமைப்பு தொடர்பில், சமநிலை என்பது, கலை ஆக்கங்களின் பகுதிகளின் கூட்டமைவில், ஒரு பகுதி இன்னொரு பகுதியை அமுக்கி விடாதபடி இருக்கும் நிலையைக் குறிக்கும். இது வடிவமைப்புக் கொள்கைகளில் ஒன்று. சமநிலையைச் சமச்சீர் ஒழுங்கமைவு மூலம் அல்லது சமச்சீரற்ற ஒழுங்கமைவு மூலம் அடையமுடியும். உண்மையில் சமநிலை என்பது குறிப்பிட்ட ஆக்கத்தின் கூட்டமைவில் காணப்படும் உறுதி நிலை குறித்த உணர்வு ஆகும்.
ஒவியக்கலை, நிழற்படக்கலை, கட்டிடக்கலை போன்றவை தொடர்பான வடிவமைப்புக்களின் போது சமநிலை முக்கிய அம்சங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.
அருகில் உள்ளது, 17 ஆம் நூற்றாண்டில் ஜொஹான்னஸ் வேர்மீர் என்னும் ஒல்லாந்த ஓவியர் ஒருவரால் தீட்டப்பட்ட ஓவியமாகும். இது சிறப்பான இதன் சமநிலைக்குப் பெயர் பெற்றது.