வடிவமைப்புக் கொள்கை
வடிவமைப்புக் கொள்கை என்பது, கலைப் பொருள் ஒன்றின் உருவாக்கத்தில், வடிவமைப்புக் கூறுகளின் தெரிவு, அவற்றின் ஒழுங்கமைவு என்பன தொடர்பில் உள்ளார்த்தமாக அமைந்துள்ள சில பண்புகளில் ஏதாவதொன்றைக் குறிக்கும். ஓவியக்கலை, சிற்பக்கலை, கட்டிடக்கலை போன்ற கலைகளில் இக் கொள்கைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. இது தொடர்பான கட்டுரைகளிலும் நூல்களிலும் தரப்படுகின்ற இக் கொள்கைகளும் அவற்றின் எண்ணிக்கையும் ஒன்றுக்கொன்று வேறுபட்டுக் காணப்படுகின்றன. சில பொதுவான கொள்கைகள் பின்வருமாறு:[1][2][3]
- சமநிலை (Balance)
- இசைவு (Harmony)
- இயக்கம் (Movement)
- அளவு விகிதம் (Proportion)
- இசைவொழுங்கு (Rhythm)
- ஒருமைப்பாடு (Unity)
- குவியம் (Focus)
- முரண்பாடு (Discord)
- பரப்பமைவு (Texture)
- வேற்றுமை (Contrast)
- நிறம் (Colour)
ஒரு கலை ஆக்கத்தில் இவை உரிய முறையில் அமையும்போது, அப் பொருட்கள் காட்சிக்கு இனியனவாக அமைகின்றன. இவை கையாளப்படும் விதமே ஒரு கலைப்பொருளின் அழகியல் பெறுமானத்துக்குக் காலாக அமைகின்றது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Le Corbusier, Vers une architecture" (1923)
- ↑ Galle, Per (18 February 2015). "Philosophy of Design". KADK. பார்க்கப்பட்ட நாள் 31 December 2016.
- ↑ Simon (1996). The Sciences of the Artificial. MIT Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-262-69191-4.