சமபல பிரதிநிதித்துவம்

இலங்கையில், சமபல பிரதிநிதித்துவம் என்பது, சுதந்திர இலங்கையில் அமையவிருந்த அரசாங்க சபையில், இருக்கவேண்டிய இன அடிப்படையிலான உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பில் தமிழ்த் தலைவர்கள் சிலரால் முன்மொழியப்பட்ட ஒரு திட்டம் ஆகும். இக்கோரிக்கையைப் பொதுவாக ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கை எனக் குறிப்பிடுவது உண்டு. ஜீ. ஜீ. பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசுக் கட்சி இந்தக் கோரிக்கையை முன்வைத்திருந்தது. சிறுபான்மை இனங்கள் எல்லாவற்றினதும் உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை பெரும்பான்மை இனத்தவரின் உறுப்பினர் எண்ணிக்கைக்குச் சமமாக இருக்கவேண்டும் என்பதே இதன் அடிப்படை. இத்தகைய ஒழுங்கின் மூலம், பெரும்பான்மையினர் சிறுபான்மையினரைப் பாதிக்கக்கூடிய தீர்மானங்களை எடுக்க முடியாதிருக்கும் என்பதே இதை முன்மொழிந்த தலைவர்களின் எண்ணமாக இருந்தது. ஆனாலும், இந்தக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சமபல_பிரதிநிதித்துவம்&oldid=2096252" இலிருந்து மீள்விக்கப்பட்டது