அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ஆகஸ்ட் 29, 1944 ல், இலங்கையில் வாழும் தமிழ் பேசும் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் மூத்த தமிழ்த் தலைவரான ஜீ. ஜீ. பொன்னம்பலம் அவர்களால் தொடங்கப்பட்டது. 1945ல் பிரித்தானிய அரசினால் அமைக்கப்பட சோல்பரி ஆணைக்குழுவின் முன், இலங்கையில் சிறுபான்மையினருக்கு ஐம்பதுக்கு ஐம்பது எனப் பரவலாக அறியப்பட்ட, சமபல பிரதிநிதித்துவம் கோரி இக்கட்சி வாதாடியது. எனினும் இது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 1947ல் நடைபெற்ற இலங்கைப் பாராளுமன்றத் தேர்தலில் இக் கட்சி சில ஆசனங்களை வென்றது. எக்கட்சியும் அரசு அமைப்பதற்குரிய பெரும்பான்மையைக் கொண்டிராத நிலையில், கூடிய ஆசனங்களைக் கொண்ட தனிக்கட்சி என்ற நிலையிலிருந்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு மாற்றாக அரசாங்கமொன்றை அமைக்கும் முயற்சிகளும் தோல்வியடைந்த பின்னர், ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்க தமிழ்க் காங்கிரஸ் முடிவு செய்தது.[1][2][3]
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் | |
---|---|
Akila Ilankai Thamil Congress අකිල ඉලංකෙයි තමිල් කොංග්රස් | |
நிறுவனர் | கணபதி காங்கேசர் பொன்னம்பலம் |
Secretary | கஜேந்திரகுமார் பொன்னம்பலம் |
தொடக்கம் | ஆகத்து 29, 1944 |
தலைமையகம் | 15 Queen's Road, Colpetty, கொழும்பு 3 |
கொள்கை | தமிழ்த் தேசியம் |
தேசியக் கூட்டணி | தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி |
தேர்தல் சின்னம் | |
Bicycle | |
கட்சிக்கொடி | |
மேற்கோள்கள்
தொகு- ↑ November 1948 பரணிடப்பட்டது சனவரி 19, 2009 at the வந்தவழி இயந்திரம், Peace and Conflict Timeline
- ↑ Result of Parliamentary General Election 1947, Department of Elections
- ↑ Result of Parliamentary General Election 1952, Department of Elections