சமளங்குளம்

சமளங்குளம் (Samalankulam) என்பது இலங்கையின் வடமாகாணத்தில், வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் ஊர்.

சமளங்குளம்

சமளங்குளம்
மாகாணம்
 - மாவட்டம்
வட மாகாணம்
 - வவுனியா
அமைவிடம் 8°43′02″N 80°30′48″E / 8.717111°N 80.513306°E / 8.717111; 80.513306
கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)

அடங்­காப்­பற்­று-­வன்னிப் பிர­தே­சத்தின் மத்­திய பகு­தி­களில் உற்­பத்­தி­யாகி கிழக்கு, மேற்கு, மற்றும் வடக்குத் திசைகள் நோக்கிப் பாயும் பல ஆறு­களை மறித்து குளங்கள் கட்­டப்­பட்­டுள்­ளன. இவை தேக்கம் என்ற தமிழ்ப் பெயர்­களால் அழைக்­கப்­பட்­டுள்­ளன. கல்­லாற்றை மறித்து பாவற்­குளம், அதனைத் தொடர்ந்து மூன்று ஆறுகள் சந்­திக்கும் மூன்று முறிப்பில் மற்றும் ஓர் அணைக்­கட்டு கட்டி நீர்த்­தேக்கம், நாயாற்றை மறித்து தண்ணி முறிப்புக் குளம், பாலி­யாற்றை மறித்து பாலிக்­குளம், பேராற்றை மறித்து மண்­ம­லைக்­குளம் (முத்­தை­யன்­கட்டு) அதற்கு அடுத்து கருங்கல் தூண்­களை அடுக்கி அடுக்­குக்­கல்லு அணைக்­கட்டு கட்­டப்­பட்டு மற்றும் ஒரு நீர்த்­தேக்கம் ஆகி­யன உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன. இவற்றில் சில­வற்றை ஆங­கி­லேய வரை­ப­டங்­களில் நீர்த்­தேக்கம் என்­ப­தற்குப் பதி­லாக தேக்கம் என்று மட்டும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

வன்னிப் பிர­தே­சத்­தி­லுள்ள குளங்­களை ஆய்வு செய்த திரு. பார்க்கர் இங்­கி­ருந்த நீர்ப்­பா­சன முறையை பாராட்­டி­யுள்ளார். இந்தக் குளங்கள் ஆறு­களை மறித்துக் கட்­டப்­பட்­டுள்ள முறையும், அவற்­றி­லி­ருந்து நீர் பாய்­வ­தற்கு உப­யோ­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள துரு­சு­களும் மிகவும் புரா­த­ன­மா­னது எனவும், சிறந்த முறையில் திட்­ட­மிட்டு இவை கட்­டப்­பட்­டுள்­ள­தா­கவும்,

உலகின் வேறெந்தப் பகு­தி­யிலும் இது­போன்ற நீர்ப்­பா­ச­ன­முறை இல்­லை­யெ­னவும் புகழ்ந்­துள்ளார். கி.பி.1880 ஆண்­டிற்குப் பின்னர் ஆங்­கி­லே­ய­ரு­டைய நிர்­வாக காலத்தில் அநே­க­மான குளங்­களில் இருந்த துரு­சு­களை மாற்றி, புதிய வகை துரு­சுகள் கட்­டப்­பட்டு நீர்ப்­பா­சன முறைகள் அபி­வி­ருத்தி செய்­யப்­பட்­டுள்­ளன. இரா­வண மகா­ராசா காலத்தில் ஆற்­றங்­க­ரை­களில் விவ­சாயச் செய்­கையில் ஈடு­பட்­டி­ருந்த இயக்­கர்கள் சிவ­லிங்க வழி­பாட்டில் தலை­சி­றந்­த­வர்­க­ளாக இருந்­துள்­ளனர். இந்தப் பிர­தே­சத்தில் உள்ள குளங்கள் அனைத்தும் கிறிஸ்­து­விற்கு முற்­பட்ட காலத்தில் நாகர்கள் கட்­டி­ய­தாக வர­லாற்றுக் குறிப்­புகள் கூறு­கின்­றன. நாகர்கள் குளங்­களைக் கட்டி தமது வழி­பாட்­டுக்­காக ஐந்து தலை நாக சிலை­களை அமைத்­தனர். இந்த இரண்டு வழி­பா­டு­க­ளிலும் ஈடு­பட்­டி­ருந்­த­வர்கள் தமது வழி­பாட்­டி­டங்­களை தியானம் செய்யும் இடங்­க­ளாக மாற்­றி­யி­ருந்­தமை தெளிவா­கி­றது. சிவ­லிங்க வழி­பாடு மற்றும் நாக வழி­பாடு செய்­த­வர்­க­ளுக்கும் இடையில் எந்த வித வேறு­பா­டு­களும் இருக்­க­வில்லை. அவர்­க­ளு­டைய வழி­பாட்­டி­டங்கள் அரு­க­ருகே அமைந்­துள்­ளமை இதனை உறுதி செய்­கி­றது.

இதற்கு அடங்­காப்­பற்­று-­வன்னிப் பிர­தே­சத்தின் பல மலைக்­குன்­று­களில் அமைந்­துள்ள தலங்கள் ஆதா­ர­மாக உள்­ளன. இந்த இடங்­க­ளுக்கு அடுத்­தி­ருந்த பிர­தே­சங்­களில் வேடர்கள் வாழ்ந்­த­தா­கவும் வர­லாற்றுக் குறிப்­புகள் தெரிவிக்­கின்­றன. பின்னர் வேடர்கள் இடம் பெயர்ந்து தென்­திசை நோக்கி நகர்ந்­தார்கள் என வர­லாற்றுக் குறிப்­புகள் தெரிவிக்­கின்­றன.

வவு­னி­யா-­ ஹொர­வப்­பொத்­தான வீதி வழி­யாக திரு­கோ­ண­ம­லைக்கு செல்லும் வீதியில் மடுக்­கந்த என்ற கிராமம் இருக்­கின்­றது. மலைக்­குன்று அல்­லது மலைக்­க­ருகில் உள்ள நீர்­நிலை (மடு) என்ற பொருள்­பட சிங்­களப் பெயர் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளமை தெளி­வா­கி­றது. மடுக்­கந்த என்ற பெயர் வரு­வ­தற்கு முன்னர் இதன் தமிழ்ப்­பெயர் மண்­டுக்­கோட்டை என்­ப­தாகும். நீண்ட ஆய்­வுக்­கு­ரி­யது. சிவ­லிங்கம், நாக வழி­பாடு ஆகி­யன இடம்­பெற்ற காலத்தில் பௌத்த சமயப் பரம்­பலின் பின்னர், பௌத்த சின்­னங்­களும் நாகர்­குல தமிழ்ப் பௌத்­தர்­களால் பிர­திஷ்டை செய்­யப்­பட்­டுள்­ளமை தெளி­வா­கி­றது. இந்த

ப் பிர­தே­சத்தின் மலைக்­குன்­று­களில் தட்­ட­ய­மலை, மன்­னா­கண்டல் மலை, வாவெட்டி மலை, குருந்­தனூர் மலை, கும்­ப­கர்ணன் மலை, முத­லி­யா­கல்லு மலை, போன்ற பல இடங்­க­ளி­லுள்ள தொல்­லியல் சின்­னங்கள் சமய வர­லா­று­களின் அடை­யா­ளங்­க­ளாக இருக்­கின்­றன. அடங்­காப்­பற்று வன்னிப் பிர­தே­சத்தில் சம­ளங்­குளம் என்ற காரணப் பெயரில் குளங்­களும் கிரா­மங்­களும் இருந்­துள்­ளன. மேல்­பற்று வடக்கில் காத­லியார் சம­ளங்­குளம், உடையார் சம­ளங்­குளம் போன்ற பெயர்­களில் குளங்கள் இருப்­ப­தாக 1895ஆம் ஆண்டு அறிக்­கைகள் தெரி­விக்­கின்­றன. வவு­னியா சம­ளங்­குளம் : ஹொர­வப்­பொத்­தான பிர­தான வீதியில் சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்தில் கோவில்­குளம் என்ற கிராமம் இருக்­கின்­றது. இந்தக் கிரா­மத்­தி­னூ­டாகச் செல்லும் வீதியில் சின்ன மயி­லங்­குளம் மகா­ம­யி­லங்­குளம், ச­ம­ளங்கும், (எல்­லப்பர்) மரு­தங்­குளம் போன்ற பெயர்­களில் குளங்கள் இருக்­கின்­றன. இவற்றில் சின்ன மயி­லங்­குளம் மகா­ம­யி­லங்­கு­ளம் ஆகிய குளங்­களில் இருந்து வடிந்து பாயும் நீர் சம­ளங்­கு­ளத்­திற்கு வடிந்து வரு­வ­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. கோவில் குளம் ஊடாக எல்­லப்பர் மரு­தங்­கு­ளத்­திற்கு வீதி அமைப்­ப­தற்கு முன்னர் இந்தக் கிரா­மங்­க­ளுக்கு வவு­னியா – கண்டி வீதி­யி­லுள்ள ஈரப்­பெ­ரி­ய­குளம் என்ற கிரா­மத்தின் ஊடாக செல்­வ­தற்கு வீதி இருந்­த­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. சம­ளங்­குளம் என்ற பிர­தேசம் மக்கள் குடியேற முதலே காணப்பட்டதாகவும், அந்தக் குளத்தின் கீழ் மக்

கள் குடி­யேற்­றப்­பட்­ட­தா­கவும் வயதில் மூத்­த­வர்கள் தெரி­வித்­துள்­ளனர். இந்தக் கிரா­மங்­களின் பெயர்கள் ஆய்­வுக்கு உரி­ய­வை­யாகும். சம­ளங்­குளம் : சம­ளங்­கு­ளத்­தி­லி­ருந்து வடிந்து பாயும் நீர், குளக்­கட்­டிற்கு அண்­மையில் உள்ள மலைக்­குன்று ஒன்றைச் சுற்றி ஈரப்­பெ­ரி­ய­கு­ளத்­திற்குச் செல்­கி­றது. சம­ளங்­கு­ளத்­தி­லி­லுள்ள இந்த மலைக்­குன்றில் புரா­தன தியான நிலையம் இருந்­த­தற்­கான அடை­யா­ளங்கள் இருக்­கின்­றன. மக்கள் குடி­யேற்­றத்தின் பின்னர் இந்த மலைக் குன்றில் பிள்­ளை

யார் கோயில் கட்­டப்­பட்­டுள்­ளது. சம­ளங்­குளம் பிள்­ளையார் கோயில் பிள்­ளையார் கோயில் அமைந்­துள்ள மலைக்­குன்றின் பின்­ப­கு­தியில் சம­ளங்­கு­ளத்­தி­லி­ருந்து வடிந்து பாயும் நீர் செல்லும் பகு­தியில் வயல் வெளி அமைந்­துள்­ளது. ஆல­யத்தின் பின்­ப­குதி வயல் வெளியை ஒட்­டி­ய­தாக மலைக்­குன்று அமைந்­துள்­ளது. இதில் சிதைந்­துள்ள பல வடி­வங்கள் உள்­ளன அவை ஆய்­வுக்­கு­ரி­ய­ன­வாகும். மலைக்­குன்று. மலைக் குன்றின் உச்­சியில் புதி­தாகக் கட்­டப்­பட்­டுள்ள பிள்­ளையார் கோயிலின் இரண்டு பக்­கத்­திலும் புரா­தன வழி­பாட்­டி­டங்கள் இருந்­த­மைக்­கான அடை­யா­ளங்கள்

உள்­ளன. ஆல­யத்தின் வலது பக்­கத்தில் உள்ள கட்­ட­டத்தின் முன்­ப­கு­திக்­கான சுவர் நாற்­ச­துர வடிவில் செங்­கற்­களால் கட்­டப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. நாற்­ச­துர மண்­டப செங்கல் சுவர் இந்த நாற்­ச­துர மன்­மண்­ட­பத்தில் உள்ள செங்கல் கட்­டடப் பகுதி ஊடாகச் சென்று, உள்­ளே­யுள்ள அடுத்த பகு­திக்குச் செல்­வ­தற்­கான வாசல் பகுதி உய­ர­மாகக் கட்­டப்­பட்­டுள்­ளது. வாசல் பகுதி இந்த வாசல் பகுதி கருங்கல் பொளி­வு­களை அடுக்கிக் கட்­டப்­பட்­ட­தற்­கான அடை­யா­ளங்கள் இருக்­கின்­றன. ஆரம்ப காலத்தில் கட்­டப்­பட்­ட­தற்கு அடை­யா­ள­மாக பொளி­யப்­பட்ட தூண் வடிவக் கருங்­கற்கள் அடுக்கி கட்­டப்­பட்­டுள்­ளமை தெரிகி­றது. பொளி­யப்­பட்ட தூண் வடிவக் கருங்­கற்கள் கட்­ட­டத்தின் பக்கச் சுவர்­களும் பின்­பக்கச் சுவர்­களும் கருங்­கற்­களை அடுக்கி கட்­டப்­பட்­டுள்­ளன. கருங்கல் சுவர்ப்­ப­கு­தியின் மேலே செங்­கற்கள் அடுக்கிக் கட்­டப்­பட்­டுள்­ளன.

கருங்கல் சுவர்மேல் செங்கல் கட்­டடம் கட்­ட­டத்தின் வாசல்­ப­டியில் வைக்­கப்­பட்­டுள்ள கருங்கல் படிகள் ஆய்­வுக்­கு­ரி­ய­ன­வாகும். இவை தூண்கள் வடிவில் அமைந்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. இந்தக் கருங்கல் பொளி­வுகள் கட்­ட­டத்தின் புரா­த­னத்­திற்­கு­ரிய அடை­யா­ளங்­க­ளாகும். கருங்கல் படிகள். கட்­ட­டத்தின் உட்­ப­கு­தியில் அக­ல­மான கருங்கற் பொளி­வுகள் இரண்டு அடுக்­கப்­பட்­டுள்­ளன. ஒன்று பெரிதா­கவும் மற்­றை­யது சிறி­ய­தா­கவும் இந்தக் கருங்கற் பொளி­வுகள் இருக்­கின்­றன. இவை பீடங்­ க­ளாக உப­யோ­க­ப­டுத்­தப்­பட்­டுள்­ளமை தெளிவா­கி­றது. பீட வடிவில் கருங்கல் பொளி­வுகள் நான்கு பக்­கங்­க­ளாகக் கட்­டப்­பட்­டுள்ள தியானத் தலத்தின் உட்­ப­கு­தியின் ஒரு மூலையில் சிதைந்த நிலையில் கருங்கல் தூண்

ஒன்று உள்­ளன. இவை போன்ற தூண்­களின் அடிப்­பா­கங்கள் இங்­கி­ருப்­ப­தனால் கட்­ட­டத்தின் உட்­ப­கு­தியில் கருங்கல் தூண்கள் நிறுத்­தப்­பட்­டி­ருந்­த­மைக்கு ஆதா­ர­மாக உள்­ளன. சிதைந்த நிலையில் கருங்கல் தூண் இந்த இடத்தில் 1980களுக்கு முன்னர் தொல்­லியல் ஆய்­வுகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. அப்­போது கருங்­கல்லால் கட்­டப்­பட்ட கட்­ட­டத்தின் முன்­ப­கு­தியில் இருந்த மண்­ட­பத்தின் செங்­கற்கள் அகற்­றப்­பட்­ட­தா­கவும், பின்னர் அவை இருந்த நிலை­யி­லேயே திரும்ப கட்­டப்­பட்­ட­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. நாற்­ச­து­ர­மான மண்­ட­பத்தின் மூலைப்­ப­கு­திகள் மிகவும் செம்­மை­யாகக் கட்­டப்­பட்­டுள்­ளன. செங்­கல்­கட்டு மூலைப்­ப­குதி இந்த மண்­ட­பத்தை கட்­டு­வ­தற்கு பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்ள செ

ங்­கற்கள் ஆய்­வுக்­கு­ரி­ய­ன­வாகும். ஏனைய இடங்­களில் இருப்­பது போன்று, இவற்றின் அள­வுகள் ஆய்­வுக்­கு­ரி­ய­ன­வாகும். இவை அக­ல­மா­ன­வை­யா­கவும் மிகவும் பல­முள்­ள­வை­யா­கவும் காணப்­ப­டு­கின்­றன. சிதைந்த செங்கல் இந்தக் கட்­டடத்தின் பின்­ப­கு­தியில் கீழி­றங்கிச் செல்­வ­தற்கு படிக்­கட்­டுகள் இருந்­த­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. நீரோ­டைக்குச் செல்­வ­தற்கு இந்­தப்­ப­டிகள் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. பிள்­ளையார் கோயிலின் இடது பக்­கத்தில், வழக்­க­மாக வைர­வர்­சாமி அமைக்கும் இடத்தில் கல்­லொன்று பிர­திஷ்டை செய்­யப்­பட்­டுள்­ளது. பிர­திஷ்டை செய்­யப்­பட்­டுள்ள கல் குளங்களைக் கட்டிய நாகர்கள் ஐந்து தலை நாகத்தை வழிபட்டார்கள் என்பது வரலாறு. எமது ஆய்வின்போது, இந்தப் பிரதேசத்தில் ஐந்து தலை நாகத்தின் வடிவச் சிலைகள் பல கிடைத்துள்ளன. இந்தக் கல்லிலும் ஐந்துதலை நாகத்தின் உருவம் சிதைந்த நிலையில் இருப்பது வரலாற்றிற்குத் தேவையான முக்கிய அம்சமாகும். சிதைந்துள்ள ஐந்துதலை நாக சிலை.

(-வரலாறும் ஆய்வும் தொடரும்)

கோவில்கள் தொகு

பாடசாலைகள் தொகு

  • சமளங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை

சமூக அமைப்புகள் தொகு

  • சமளங்குளம் யுரேனஸ் இளைஞர் கழகம்
  • சமளங்குளம் யுரேனஸ் விளையாட்டு கழகம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமளங்குளம்&oldid=3293640" இலிருந்து மீள்விக்கப்பட்டது