சமவுயரக் கோட்டு வரைபு

புவியியலில் தரைத்தோற்ற அமிசங்களைக் காட்டக்கூடியதாக நிலவமைப்பின் சமமான உயரங்களை ஒன்றிணைத்து வரையப்பப்படும் வரைபுகள் சமவுயரக் கோட்டு வரைபுகள் எனப்படும்.[1] ஆயினும் பொதுப்பயன்பாட்டில் இரு மாறிகளின் இணைவால் பெறப்படும் மாறாத விளைவு ஒன்றைக்காட்டும் வளையிக்கான கணிதத் தொடர்பு.[2]

வேர்மன்டிலுள்ள ஸ்டோவ் பகுதியின் இடவியல் வரைபு. கபில நிறக் கோடுகள் உயரத்தைக் குறிக்கும் கோடுகள். இங்கு சமவுயரக் கோட்டு இடைவெளி 20 அடிகள் ஆகும்
வளையி ஒன்றுக்கு சமவுயரக் கோடு வரைதல் முறை.

சில நிலத்தோற்றங்களுக்கான சமவுயரக் கோடுகள்

தொகு
 
சமவெளியைக் குறிக்கும் சமவுயரக் கோட்டுப் படம்

1. சமவெளி: இது குறைவான தரைத்தோற்ற வேறுபாடுகளைக் கொண்ட சமதரை ஆகும். இடையிடையே மேட்டுநிலம் காணப்படலாம்.

 
பள்ளத்தாக்கைக் குறிக்கும் சமவுயரக் கோட்டுப் படம்

2. பள்ளத்தாக்கு: சமவுயரக்கோடுகள் உயரம் கூடிய பக்கத்தை நோக்கி நீண்டிருக்கும் நிலத்தோற்றம் பள்ளத்தாக்கு ஆகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. [1]contour line
  2. Courant, Richard, Herbert Robbins, and Ian Stewart. What Is Mathematics?: An Elementary Approach to Ideas and Methods. New York: Oxford University Press, 1996. p. 344.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமவுயரக்_கோட்டு_வரைபு&oldid=2745045" இலிருந்து மீள்விக்கப்பட்டது