சமவெளி (சிறுகதைத் தொகுப்பு)

சமவெளி, எழுத்தாளர் வண்ணதாசன் அவர்களின் சிறுகதைத் தொகுப்பு ஆகும். இத்தொகுப்பு முதலில் மார்ச் மாதம் 1983-ல் வெளிவந்தது. இத்தொகுப்பில் மொத்தம் 12 சிறுகதைகள் உள்ளன.இத்தொகுப்பிலுள்ள கதைகளில் ஒன்றான சமவெளி என்பதே இப்புத்தகத்தின் பெயராகவும் அமைந்துள்ளது. இப்புத்தகத்திற்கு சமவெளிச் சிகரம் எனும் தலைப்பில் வண்ணதாசன் முன்னுரை எழுதியுள்ளார். மேலும் இப்புத்தகத்தின் தொடக்கப் பக்கத்தில்

சமவெளி
நூலாசிரியர்வண்ணதாசன்
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
வகைசிறுகதைத் தொகுப்பு
வெளியீட்டாளர்சந்தியா பபிளிகேசன்
பக்கங்கள்128
ISBN978-93-81319-62-8
ஆக்கர் வாங்காத பம்பரம், மணி உதிராத வெள்ளிக் கொலுசு,
நசுங்காத பித்தளைக் குடம், கருகிக்ப் போகாத பலாக்கொட்டை,
கொறுவாய் இல்லாத தங்கச்சி ஊற்றுகிற தோசை, காயம் பட்டாத
ஆண்பிள்ளை மனது... இவையெல்லாம் நன்றாகவா இருக்கும்...
எல்லாவற்றையும் நீருக்கும், நெருப்புக்கும், காற்றுக்கும்,
வெளிச்சத்திற்கும் உண்மையாக இருக்க அனுமதியுங்கள்.
இயல்பு நம்மை வழி நடத்தும். புல்லை யாரும் நடுவதில்லை.
தானாக வளருகிறது.

என்கிறார்.

இத்தொகுப்பிலுள்ள சிறுகதைகள்

தொகு

இப்புத்தகத்தில்

  • தாகமாய் இருக்கிறவர்கள்
  • நிலை
  • பளு
  • வருகை
  • சமவெளி
  • வரும் போகும்
  • பூனைகள்
  • சில பழைய பாடல்கள்
  • கூறல்
  • விசாலம்
  • வெளியேற்றம்
  • உதிரி

ஆகிய சிறுகதைகள் உள்ளன.

பின்னட்டைக் குறிப்புகள்

தொகு

இப்புத்தகத்தில் வண்ணதாசன் எழுதிய பின்னட்டைக் குறிப்பு:

என்னதான் மாறுதல்கள் வந்துற்ற போதும், மரபுகள் மீதும் இறந்த காலங்கள் மீதும், அற்பம் எனக் காலம் ஒதுக்கிவிட்டுச் செல்கிற குன்னிமுத்துப் போன்ற 
சிறு அனுபவ உலகங்கள் மீதும் தீராத காதலும் தாகமும் இருந்து கொண்டேயிருக்கிறது. அதுவும் சின்ன வயதின் பேழையிலிருந்து அள்ள அள்ள வற்றாத,
தீர்ந்து போகாத ஞாபகங்கள் மிஞ்சிக் கொண்டேயிருக்கின்றன.

வெளி இணைப்புகள்

தொகு