சமஸ்கிருதிராணி தேசாய்

சமஸ்கிருதிராணி தேசாய் இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கவிஞராவர்.

சமஸ்கிருதிராணி தேசாய்
பிறப்பு1 அக்டோபர் 1958 (1958-10-01) (அகவை 66)
பரோடா, பம்பாய் மாகாணம் (தற்போது வடோதரா, குஜராத்), இந்தியா
தேசியம்இந்தியர்
பணிகவிஞர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்சூர்யோ ஜ சூர்யோ (1993)
பெற்றோர்சுதிர் தேசாய், தாரிணி தேசாய்
உறவினர்கள்த்வனி தேசாய், சன்ஸ்கர் தேசாய்

வாழ்க்கை

தொகு

சமஸ்கிருதிராணி, பரோடாவில் (இப்போது வதோதரா ) 1958 ம் ஆண்டு அக்டோபர் 1 அன்று குஜராத்தி எழுத்தாளர்களான சுதிர் தேசாய் மற்றும் தாரிணி தேசாய் ஆகியோருக்கு மகளாய்ப் பிறந்தவர். அவரது சகோதரி திவானி தேசாயும் குஜராத்தி மொழிக் கவிஞரும் திரைப்பட தயாரிப்பாளருமாவார். இவர் [1] புள்ளியியல், படிப்பில் இளங்கலை மற்றும் முதுகலையும், நிதியியலில் மேலாண்மை படிப்பும் மட்டுமல்லாது டிப்ளமோ மேலாண்மை படிப்பையும் பயின்றுள்ளார். பொதுத்துறை நிறுவனமொன்றின் தகவல் தொழில்நுட்பத் துறையில் பொது மேலாளராகப் பணிபுரியும் இவருக்கு குஜராத்தி, ஹிந்தி, ஆங்கிலம், மராத்தி, பெங்காலி, சமஸ்கிருதம் மற்றும் ரஷ்ய மொழிகள் போன்றவைகளில் புலமை மிக்கவர். மேலும் இவருக்கு ஓவியம், நீச்சல், நடனம் போன்ற கலைகள் மட்டுமல்லாது கராத்தே தற்காப்புகலையும் பயின்றுள்ளார்.

கலைப்படைப்புகள்

தொகு

இவரது முதல் கவிதைத் தொகுப்பான, 1993 ம் ஆண்டில் வெளியான சூர்யோ ஜா சூர்யோ, சூரியன் மற்றும் அதன் வெவ்வேறு வடிவங்களைப் பற்றிய தனித்துவமான நவீன கவிதைகளை உள்ளடக்கியது. முதல் தொகுப்பிலேயே பரவலான நேர்மறை விமரிசனத்தை எதிர்கொண்டுள்ளது. [2] [3] சப்னா வதேமார்குவோ இவரது மற்றுமொரு கவிதைத் தொகுப்பாகும். மேலும் இவர் ரஷ்ய மற்றும் ஆங்கில மொழிகளிலிருந்து குஜராத்தி மொழியில் பல்வேறு கவிதைகளை மொழிபெயர்த்துள்ளார். [1]

விருதுகள்

தொகு

இவரது முதல் தொகுப்பான சூர்யோ ஜா சூர்யோ, தக்தாசிங் பர்மர் பரிசு (1992-93) [4] மற்றும் ஃபனிஷ்வர்நாத் ரேணு சாகித்ய விருது என்பது போன்ற பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளது. குஜராத்தி சாகித்ய பரிஷத்தின் இரண்டு பரிசுகள், கிரா குர்ஜாரி விருது, தினகர் ஷா கவி 'ஜே' பரிசு ஆகிய விருதுகளையும் இவரது வெவ்வேறு புத்தகங்கள் பெற்றுள்ளது. [2] [3] [1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Kartik Chandra Dutt (1999). Who's who of Indian Writers, 1999: A-M. Sahitya Akademi. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-260-0873-5.Kartik Chandra Dutt (1999). Who's who of Indian Writers, 1999: A-M. Sahitya Akademi. p. 312. ISBN 978-81-260-0873-5.
  2. 2.0 2.1 Brahmabhatt, Prasad (2010). અર્વાચીન ગુજરાતી સાહિત્યનો ઈતિહાસ - આધુનિક અને અનુઆધુનિક યુગ (in குஜராத்தி). Ahmedabad: Parshwa Publication. pp. 144–145. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-5108-247-7.Brahmabhatt, Prasad (2010). અર્વાચીન ગુજરાતી સાહિત્યનો ઈતિહાસ - આધુનિક અને અનુઆધુનિક યુગ [History of Modern Gujarati Literature – Modern and Postmodern Era] (in Gujarati). Ahmedabad: Parshwa Publication. pp. 144–145. ISBN 978-93-5108-247-7.
  3. 3.0 3.1 Jani, Suresh B.. "સંસ્કૃતિરાણી દેસાઇ, Sanskrutirani Desai" (in gu-IN). Jani, Suresh B. (26 May 2007). "સંસ્કૃતિરાણી દેસાઇ, Sanskrutirani Desai". ગુજરાતી પ્રતિભા પરિચય (in Gujarati). Retrieved 28 February 2018.
  4. Desai, Parul. Gujarati Sahitya Parishad Prize. Ahmedabad: Gujarati Sahitya Parishad.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமஸ்கிருதிராணி_தேசாய்&oldid=3894068" இலிருந்து மீள்விக்கப்பட்டது