தாரிணி தேசாய்
தாரிணி தேசாய் | |
---|---|
பிறப்பு | 22 திசம்பர் 1935 பரோடா, பம்பாய் மாகாணம் (தற்போது வடோதரா, குஜராத்), இந்தியா |
தேசியம் | இந்தியர் |
கல்வி | முதுகலை |
பணி | சிறுகதை எழுத்தாளர் |
அறியப்படுவது | குசராத்தி மொழி சிறுகதைக்காக |
வாழ்க்கைத் துணை | சுதிர் தேசாய் |
பிள்ளைகள் | திவானி தேசாய், சமஸ்கிருதிராணி தேசாய், சன்ஸ்கர் |
தாரிணி தேசாய், ( குசராத்தி: તારિણી દેસાઈ) இந்தியாவின் குசராத்தைச் சேர்ந்த சிறுகதை எழுத்தாளர் ஆவார்.
வாழ்க்கை
தொகுபரோடாவில் (தற்போதைய வதோதரா) 22 டிசம்பர் 1935 அன்று சுதாபென் மற்றும் ருத்ரபிரதாப் முன்ஷிக்கு மகளாகப் பிறந்த தாரிணியிம் குடும்பம் குசராத் மாநிலத்தின் ஆனந்து மாவட்டத்தில் உள்ள பெட்லாட் என்பதைச் சேர்ந்ததாகும். தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை பரோடாவிலேயே முடித்துள்ள இவர் 1957 ஆம் ஆண்டில் மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தில்[1] தத்துவம் மற்றும் உளவியலில் இளங்கலையும் பம்பாய் வில்சன் கல்லூரியில் தத்துவத்தில் முதுகலை படித்து முடித்துள்ளார். தொடர்ந்து 1956 ஆம் ஆண்டில் இந்திய பாரம்பரிய இசையில் [2] பட்டயம் பெற்ற இவர், கியாரெக் என்ற இலக்கிய இதழில் ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.
1955 ஆம் ஆண்டில் குஜராத்தி கவிஞரும் விமர்சகருமான சுதிர் தேசாய் என்பவரை மணந்துள்ளார். இத்தம்பதியருக்கு சன்ஸ்கர் தேசாய் என்ற மகனும், சமஸ்கிருதிராணி தேசாய் மற்றும் திவானி தேசாய் என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். இவரது மகன் மூத்த ஆவணப்பட இயக்குனராகவும், மகள்கள் இருவரும் கவிஞர்களாகவும் உள்ளார்கள்.
தொடக்கம்
தொகுஇவரது கல்லூரி வாழ்க்கையிலேயே எழுதத் தொடங்கியுள்ள தாரணியின் முதல் வானொலி நிகழ்ச்சியான நவராத்திரி 1951 ஆம் ஆண்டில் அனைத்திந்திய வானொலியின் பரோடா மையத்திலிருந்து ஒளிபரப்பப்பட்டுள்ளது. 1962 ஆம் ஆண்டில் இவரது மற்றொரு வானொலி நிகழ்ச்சி அனைத்திந்திய வானொலியின் பம்பாய் மையத்திலிருந்து ஒளிபரப்பப்பட்டுள்ளது. 1966 ஆம் ஆண்டில் சாந்தனி இதழில் இவரது முதல் கதையான சந்திப்பு என்பது வெளியாகியுள்ளது. இவரது சிறுகதை கபரோ பான் சாலி ஷேக் சே என்பது ராதேஷ்யம் ஷர்மாவால் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
1984 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட பாக் போல்டா லேஜ் சே என்பது இவரது பதினைந்து சிறுகதைகளின் முதல் தொகுப்பாகும்.
மற்றொரு சிறுகதைத் தொகுப்பான ராஜா மகாராஜா ஜெ என்பது "மாயை" என்ற விஷயத்தை மையமாகக் கொண்ட பதினான்கு சிறுகதைகளைக் கொண்டு 1992 ஆம் ஆண்டில் வெளியாகியுள்ளது.
2003 ஆம் ஆண்டில் அவரது மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு பல்வேறு சோதனைக் கதைகளைத் தொகுத்து வெளியிடப்பட்ட மெரூன் ஜம்லி குலாபி (2003) என்பதாகும். 2008 ஆம் ஆண்டில் இவரது நான்காவது சிறுகதைத் தொகுப்பான கோமல் பஞ்சம் ஜா (2008) என்பது வெளியாகியுள்ளது.
சிம்புதாடா மற்றும் கஞ்சி காஞ்சி அனே வஞ்சி ஆகிய குழந்தைகளுக்கான கதைகளையும் தாரணி எழுதியுள்ளார். தாரினிபஹென் தேசாய் நி ஷ்ரேஷ்டா வர்தாவோ என்பது இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளின் தொகுப்பாகும். அவரது கதைகள்தாரினிபஹேன் தேசாய் நி வர்தாவோ: அஸ்வத் மற்றும் அவ்போத் என்ற தலைப்பில் பகுப்பாய்வு செய்யப்பட்டு அதில் பல அறிஞர்கள் இவரது கதைகளை பகுப்பாய்வு செய்து எழுதியுள்ளனர். சாத் தாலி ராமதாதி க்ஷனோ என்பது இவரது பேனா ஓவியங்களின் தொகுப்பாகும். [2]
பிரேரணா என்ற தொலைக்காட்சி தொடரில் சிறிய வேடத்தில் நடித்துள்ளார். [3]
விருதுகள்
தொகு2004 இல், தாரணிக்கு தூம்கேது விருது வழங்கப்பட்டுள்ளது. இவரது கதைத் தொகுப்புகள் குஜராத் சாகித்ய அகாடமி மற்றும் குஜராத்தி சாகித்ய பரிஷத் ஆகியவற்றால் பரிசளிக்கப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "பரோடா மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தின் 50 குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்".
{{cite web}}
: line feed character in|title=
at position 46 (help) - ↑ 2.0 2.1 Brahmabhatt, Prasad (2010). અર્વાચીન ગુજરાતી સાહિત્યનો ઈતિહાસ - આધુનિક અને અનુઆધુનિક યુગ (History of Modern Gujarati Literature – Modern and Postmodern Era) (in குஜராத்தி). Ahmedabad: Parshwa Publication. pp. 260–262. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-5108-247-7.
- ↑ Jani, Suresh B. (2007-03-20). "તારિણીબેન દેસાઇ, Tariniben Desai (સાક્ષરનો સાક્ષાત્કાર – રાધેશ્યામ શર્મા, રન્નાદે પ્રકાશન)". ગુજરાતી પ્રતિભા પરિચય (in Gujarati). பார்க்கப்பட்ட நாள் 2017-01-29.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)