சமீர் மொகந்தி
சமீர் குமார் மொகந்தி (Samir Kumar Mohanty) ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார், இவர் ஜார்க்கண்ட் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார், பஹரகோடா சட்டமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் உறுப்பினரான இவர், 2019 ஜார்க்கண்ட் தேர்தலில் 60,565 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.[1]
சமீர் மொகந்தி | |
---|---|
Member of ஜார்க்கண்டின் சட்டமன்றம் | |
பதவியில் 2019–2024 | |
முன்னையவர் | குணால் சாரங்கி |
தொகுதி | பஹராகோடா சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 21 ஏப்ரல் 1971 பென்டு,சகுலியா, சார்க்கண்டு |
அரசியல் கட்சி | ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா |
துணைவர் | சச்சாலா மொகந்தி |
பிள்ளைகள் | சாக்சி மொகந்தி (மகள்) |
வாழிடம்(s) | சகுலியா, கிழக்கு சிங்பூம் மாவட்டம், சார்க்கண்டு |
வேலை | அரசியல்வாதி |
கல்வி
தொகுசமீர் தனது தொடக்கக் கல்வியை தனது சொந்த கிராமமான சகுலியாவில் உள்ள பெண்டில் முடித்தார். இவர் தனது பதின்ம வகுப்புத் தேர்ச்சிக்காக மனோகர்லால் அரசு உயர்நிலைப் பள்ளியில் பயின்றார், பின்னர் காட்ஷிலாவின் காட்ஷிலா கல்லூரியில் பட்டம் பெற்றார்.[2]
தொழில் வாழ்க்கை
தொகுசார்க்கண்டு முக்தி மோர்ச்சா கட்சியுடன் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய மொகந்தி, 2014 தேர்தலில் ஜார்க்கண்டில் உள்ள பகரகோடா சட்டமன்றத் தொகுதியில் சார்க்கண்டு விகாசு மோர்ச்சாவினால் வழங்கப்பட்ட தொகுதியில் போட்டியிட்டார். தேர்தலுக்குப் பிறகு இவர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். 2019 ஆம் ஆண்டில், மொகந்தி தாய்க்கட்சிக்குத் திரும்பினார், "14 ஆண்டுகள் நாடுகடத்தப்பட்ட" பிறகு தான் மீண்டும் வீடு திரும்புவதாகக் குறிப்பிட்டார்.[3]
2019 ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில், சமீர் பகராகோடா சட்டமன்றத் தொகுதியிலிருந்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா வேட்பாளராகப் போட்டியிட்டார். இந்தத் தேர்தலில், இவர் மொத்தம் 106,017 வாக்குகளைப் பெற்று 5-ஆவது ஜார்க்கண்ட் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தனது நெருங்கிய போட்டியாளரான பாரதிய ஜனதா கட்சியின் குணால் சாரங்கி என்பவரை 60,565 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இவர் 2019 முதல் இந்த சட்டசபையில் பணியாற்றி வருகிறார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Jaiswal, Priya (2019-12-23). "Baharagora Constituency Result 2019: JMM's Samir Mohanty wins by 60565 votes". www.indiatvnews.com (in ஆங்கிலம்). Archived from the original on 2021-07-12. பார்க்கப்பட்ட நாள் 2021-07-12.
- ↑ "Samir Kumar Mohanty(JMM):Constituency- Baharagora (East Singhbhum) - Affidavit Information of Candidate". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2021-08-14.
- ↑ "रांची: BJP छोड JMM में शामिल हुए समीर मोहंती, कहा- 14 साल का वनवास हुआ खत्म". Zee Bihar Jharkhand (in இந்தி). 2019-11-06. பார்க்கப்பட்ட நாள் 2021-07-14.