சமுதாய சேவை பதிவேடு
சமுதாய சேவை பதிவேடு (Community Service Register - CSR) இந்தியக் காவல் நிலையங்களில் தெளிகுற்றங்கள் அல்லாத[1] (Non-cognizable offence) குற்றங்கள் தொடர்பாக பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்களை, காவல் நிலைய அதிகாரிகள் பெற்றமை குறித்து வழங்கப்படும் ஒப்புதல் சீட்டு (ரசீது) ஆகும்.[2] இப்புகார் மனு மீது காவல் அதிகாரிகள் விசாரணை நடத்தி குற்றம் நடந்ததற்கான அடிப்படை முகாந்திரம் இருப்பின் காவல் நிலைய அதிகாரி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வர். சமுதாய சேவை பதிவேட்டை, தினசரி நாட்குறிப்பு அறிக்கை அல்லது நாட்குறிப்பு அறிக்கை என்றும் அழைப்பர்.