சமூகம் உருவாக்கும் பாலின வேறுபாடு

பாலின வேறுபாட்டை சமூகம் உருவாக்குகின்றது என்ற கருத்து பாலினம் குறித்த பல மெய்யியல் மற்றும் சமூகவியல் கோட்பாடுகளில் இடம் பெறுகின்றது. இக்கருத்தியலின்படி, சமூகமும் பண்பாடும் பாலினச் செய்கைகளை உருவாக்குகின்றன; சமூகமும் பண்பாடும் ஒரு குறிப்பிட்ட பாலருக்கு பொருத்தமான அல்லது ஆதர்ச செயற்பாடுகளை வரையறுக்கின்றன என்பதாகும். இதில் தீவிரக் கருத்துக் கொண்டவர்கள் ஆடவருக்கும் பெண்களுக்கும் உள்ள வேறுபாடுகள் முழுமையாக சமூக பழக்கங்களால் ஆனவையே என்று வாதிடுகின்றனர்; மற்றவர்கள் உயிரிக் கூறுகள் வரையறுக்கும் சில நடத்தைகளைத் தவிர பிற செயற்பாடுகளை சமூகம் கட்டமைக்கின்றது என்கின்றனர். வேறு சிலர் பொதுவாக கருத்தில் கொள்ளபடும் ஆண்,பெண் பாகுபாடன்றி இடைப்பட்ட பல பாலினங்கள் உள்ளதாக கருதுகின்றனர்.

கட்டமைப்பிற்கு பிந்தைய பெண்ணிய மெய்யியலாளர் ஜூடித் பட்லர் தமது 1990இல் வெளியான ஜென்டர் டிரபிள் என்ற நூலில் ஜென்டர் பெர்பார்மடிவிடி (பாலின நிகழ்த்துகைச்சொல்) என்ற கலைச்சொல்லை இதற்கென பயன்படுத்தியுள்ளார். இந்தச் சொல் பின்னர் பல கல்வித்தளங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

அடிப்படைக் கருத்துக்கள் தொகு

பாலியல் வேறுபாடு பள்ளி