ஜூடித் பட்லர்
ஜூடித் பட்லர் (Judith Butler, பெப்ரவரி 24, 1956) அமெரிக்க ஐரோப்பிய மெய்யியலாளரும் பாலினக் கோட்பாட்டாளரும் ஆவார். இவரது ஆய்வுகள் அரசியல் தத்துவம், நன்னெறி, பெண்ணியக் கூறுகள், கோணல் கோட்பாடு[2] மற்றும் இலக்கியக் கோட்பாடுகளில் தாக்கமேற்படுத்தி உள்ளன.[3] தமது துணைவர் வெண்டி பிரவுனுடன் 1993 முதல் கலிபோர்னியா பல்கலைகழகத்தில் பேராசிரியையாக இருந்து வருகிறார்.
ஜூடித் பட்லர் | |
---|---|
மார்ச்சு 2012இல் பட்லர் | |
பிறப்பு | பெப்ரவரி 24, 1956 கிளீவ்லன்ட், ஐக்கிய அமெரிக்கா |
காலம் | 20வது / 21வது-நூற்றாண்டு மெய்யியல் |
பகுதி | மேற்குலக மெய்யியல் |
பள்ளி |
|
முக்கிய ஆர்வங்கள் | |
குறிப்பிடத்தக்க எண்ணக்கருக்கள் | |
ஜூடித் ஒகையோவில் பிறந்தவர். 1984இல் யேல் பல்கலைக்கழகத்திலிருந்து மெய்யியல் முனைவர் பட்டம் பெற்றார்.[4] 1990இல் ரூட்லெட்சு பதிப்பித்த ஜெண்டர் டிரபிள் பெண்ணிய இரண்டாம் அலைக்குக் காரணமாக அமைந்தது. இந்நூலில் பால் ஈருருமையே பாலினம் எனக் குறிப்பிட்டுள்ளார்; பாலின நிகழ்த்துகைசொல் கோட்பாடு குறித்து விவரித்துள்ளார்.
இந்தக் கோட்பாடு பெண்ணியம் மற்றும் உறவுகள் கல்வியில் முதன்மை இடம் பெறுகிறது.[5] ஜூடித் நங்கை, நம்பி, ஈரர், திருனர் சமூக இயக்கங்களில் துடிப்பான செயற்பாட்டாளராக விளங்குகிறார். பல தற்கால அரசியல் நிகழ்வுகளைக் குறித்து வெளிப்படையாக பேசி வருபவர்.[6] குறிப்பாக, இசுரேலின் அரசியல் குறித்து வலுவாக எதிர்த்து வருகிறார்.[7] இசுரேல்-பாலத்தீனப் பிணக்கிற்கு இசுரேலின் அரசியலே காரணம் என்றும் அனைத்து யூதர்களையும் அல்லது யூதர்களின் கருத்துகளுக்கும் சார்பாளராக இசுரேல் இருக்க முடியாது என்றும் கூறி வருகிறார்.[8]
மேற்சான்றுகள்
தொகு- ↑ Ryzik, Melena (22 August 2012). "Pussy Riot Was Carefully Calibrated for Protest". த நியூயார்க் டைம்ஸ். http://www.nytimes.com/2012/08/26/arts/music/pussy-riot-was-carefully-calibrated-for-protest.html?nl=todaysheadlines&emc=tha28_20120823. பார்த்த நாள்: 23 August 2012.
- ↑ Halberstam, Jack. "An audio overview of queer theory in English and Turkish by Jack Halberstam". பார்க்கப்பட்ட நாள் 29 May 2014.
- ↑ Kearns, Gerry (2013). "The Butler affair and the geopolitics of identity". Environment and Planning D: Society and Space 31: 191–207. doi:10.1068/d1713.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-09-30. பார்க்கப்பட்ட நாள் 2014-10-29.
- ↑ Thulin, Lesley (19 April 2012). "Feminist theorist Judith Butler rethinks kinship". Columbia Spectator. http://www.columbiaspectator.com/2012/04/19/feminist-theorist-judith-butler-rethinks-kinship. பார்த்த நாள்: 9 October 2013.
- ↑ "Judith Butler". McGill Reporter. McGill. Archived from the original on 25 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 9 October 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Gans, Chaim (December 13, 2013). "Review of Judith Butler's "Parting Ways: Jewishness and the Critique of Zionism"". Notre Dame Philosophical Reviews. http://ndpr.nd.edu/news/36335-parting-ways-jewishness-and-the-critique-of-zionism/. பார்த்த நாள்: September 23, 2013.
- ↑ "US-Philosophin Butler: Israel vertritt mich nicht". Der Standard. 15 September 2012. http://derstandard.at/1347492636246/US-Philosophin-Butler-Israel-vertritt-mich-nicht. பார்த்த நாள்: 15 September 2012.
வெளி இணைப்புகள்
தொகு- வாழ்க்கை சரிதம் பரணிடப்பட்டது 2014-06-20 at the வந்தவழி இயந்திரம் – கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்லி
- வாழ்க்கை வரலாறு பரணிடப்பட்டது 2012-09-30 at the வந்தவழி இயந்திரம் – ஐரோப்பியன் கிராஜுவேட் இசுக்கூல்
- ஜூடித் பட்லர் இன் அல்லது அவரைப் பற்றிய ஆக்கங்கள் நூலகங்களில் (WorldCat catalog)
- அவைடல் ரொனல், ஜூடித் பட்லர், எலன் சிக்சியசு "சீரழிக்கும் உறவுகள்" உரையாடலில் பாசம் குறித்த பார்வைகளை அலசுகின்றனர்.
- ஜூடித் பட்லரின் புதிய புத்தகம் பரணிடப்பட்டது 2015-01-27 at the வந்தவழி இயந்திரம் "பிரேம்சு ஆப் வார்" குறித்த நேர்காணல்
- ஜூடித் பட்லருடன் நேர்காணல்: “ஜெண்டர் இசு எக்ஸ்ட்ராமாரல்” பரணிடப்பட்டது 2012-03-08 at the வந்தவழி இயந்திரம், பார்செலோனா மெட்ரோபாலிசு, கோடை 2008. (ஆங்கில மொழியில்)
- ஜூடித் பட்லருடன் அரசியல், பொருளியல், கட்டுடை சமூகங்கள், பாலினம் மற்றும் அடையாளம் குறித்து நேர்காணல் (2011)