சமூகவியல் திறனாய்வு
சமூகவியல் திறனாய்வு என்பது, இலக்கியத்தைப் பரந்த சமுதாயப் பின்னணியில் வைத்து நோக்கும் ஒரு இலக்கியத் திறனாய்வு வகை. இது, சமுதாயத்தைப் பிரதிபலிப்பதற்குப் பயன்படும் இலக்கிய உத்திகளைச் சமூகவியல் முறைகளைப் பயன்படுத்தி ஆய்வு செய்கின்றது. இலக்கியத்திக் எவ்வாறு சமூகச் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன என்பதையும், இலக்கியம் எவ்வாறு சமூகத்தில் செயற்படுகிறது என்பதையும் சமூகவியல் திறனாய்வு, பகுப்பாய்வு செய்கிறது. இலக்கியத்தின் உருவாக்கத்திலும், அதன் பொருள் அமைவுகளிலும், மக்கள் மத்தியில் அதன் நடமாட்டத்திலும், சமுதாயத்துக்கு முக்கியமான இடம் உண்டு என்ற கருதுகோளை அடிப்படையாகக் கொண்டே சமூகவியல் திறனாய்வின் அணுகுமுறை அமைகின்றது.[1]
குறிப்புக்கள்
தொகு- ↑ நடராசன், தி. சு., 2009. பக். 53.
உசாத்துணைகள்
தொகு- பஞ்சாங்கம், க., இலக்கியமும் திறனாய்வுக் கோட்பாடுகளும், அன்னம், தஞ்சாவூர், 2011.
- நடராசன், தி. சு., திறனாய்வுக் கலை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, 2009 (ஏழாம் பதிப்பு).