சமூக கற்றல் கொள்கை
சமூக நடத்தைக் கோட்பாடு அல்லது சமூக கற்றல் கொள்கை என்பது பிறரை உற்றுநோக்குவது மற்றும் பின்பற்றுவதன் மூலம் புதிய நடத்தைகளைப் பெற்றடையக் கூடியதை முன்மொழியக்கூடிய கருத்தியலாகும். ஆல்பர்ட் பாண்டுரா[1] என்பவர் இந்தக் கோட்பாட்டை முன்மொழிந்த, கையாண்ட முன்னோடியாவார். கற்றல் என்பது ஒரு சமூகச் சூழலில் நடைபெறும் ஒரு அறிதிறன் செயல்முறை என்றும், உடலியல் சார்ந்த மீள் உருவாக்க செய்முறை அல்லது நேரடி வலுவூட்டல் இல்லாவிட்டாலும் கூட, கண்காணிப்பு அல்லது நேரடி அறிவுறுத்தல் மூலம் இது முழுமையாக நிகழலாம் என்றும் அது கூறுகிறது.[2] நடத்தையைக் கவனிப்பதோடு மட்டுமல்லாமல், வெகுமதிகள் மற்றும் தண்டனைகளைக் கவனிப்பதன் மூலமும் கற்றல் நிகழ்கிறது. ஒரு குறிப்பிட்ட நடத்தை தொடர்ந்து வெகுமதி அளிக்கப்படும் போது, அது பெரும்பாலும் தொடரப்படுகிறது. மாறாக, ஒரு குறிப்பிட்ட நடத்தை தொடர்ந்து தண்டிக்கப்படுமானால், அது பெரும்பாலும் நிறுத்தப்பட்டுவிடும்.[3] இந்தக் கோட்பாடு பாரம்பரிய நடத்தைக் கோட்பாடுகளிலிருந்து விரிவடைந்து செல்கிறது, இதில் நடத்தை வலுவூட்டல்களால் மட்டுமே நிர்வகிக்கப்படுகிறது, கற்றல் தனிநபரின் பல்வேறு உள் செயல்முறைகளின் முக்கியப் பங்களிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.[1]
வரலாறு மற்றும் கருத்தியல் பின்புலம்
தொகு1940 களில் பி. எப். ஸ்கின்னர் என்பார் அந்த நேரத்தில் உளவியலில் இருந்ததை விட இந்தக் கருத்தியலில் மேலும் சிறந்த அனுபவ அணுகுமுறையை முன்வைத்து, மொழிவழி நடத்தை பற்றிய தொடர் விரிவுரைகளை வழங்கினார்.[4] அவற்றில், மொழிப் பயன்பாடு மற்றும் வளர்ச்சியை விவரிக்க தூண்டுதல்-துலங்கல் கோட்பாடுகளைப் பயன்படுத்துவதை இவர் முன்மொழிந்தார், மேலும் அனைத்து வாய்மொழி நடத்தைகளும் ஆக்கநிலையுறு கற்றல் மூலம் ஆதரிக்கப்படுகின்றன. இருப்பினும், சில வகையான பேச்சுகளானவை, வார்த்தைகள் மற்றும் ஒலிகளிலிருந்து பெறப்பட்டவை என்று அவர் குறிப்பிட்டார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Bandura, Albert (1971). "Social Learning Theory" (PDF). General Learning Corporation. Archived from the original (PDF) on 24 October 2013. பார்க்கப்பட்ட நாள் 25 December 2013.
- ↑ Bandura, Albert (1963). Social learning and personality development. New York: Holt, Rinehart, and Winston.
- ↑ Renzetti, Claire; Curran, Daniel; Maier, Shana (2012). Women, Men, and Society. Pearson. pp. 78–79. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0205863693.
- ↑ Skinner, B. F. (1947). "Verbal Behavior" (PDF).