ஆல்பர்ட் பாண்டுரா

கனடிய மற்றும் அமெரிக்க உளவியலாளர்

ஆல்பர்ட் பாண்டுரா (Albert Bandura) OC (/bænˈdʊərə//bænˈdʊərə/; பிறப்பு டிசம்பர் 4, 1925) ஒரு உளவியலாளரும், இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் சமூக அறிவியல் புலத்தில் உளவியல் பேராசிரியரும் ஆவார்.

ஆல்பர்ட் பாண்டுரா OC

பிறப்பு திசம்பர் 4, 1925 (1925-12-04) (அகவை 98)
முண்டாரே, ஆல்பர்ட்டா, கனடா
தேசியம்கனடியர்கள்/அமெரிக்கர்
துறைஉளவியல், செயல்பாட்டின் மெய்யியல்
Alma materபிரித்தானிய கொலம்பியா பல்கலைக்கழகம்
லோவா பல்கலைக்கழகம்
அறியப்பட்டதுசமூக அறிவுப்புலக் கோட்பாடு
சுய திறம்
சமூக கற்றல் கோட்பாடு
போபோ பொம்மை பரிசோதனை
மனித முகமை
தலைகீழ் முடிவுக்கொள்கை

கிட்டத்தட்ட ஆறு பத்தாண்டுகளாக, சமூக அறிவுப்புலக் கோட்பாடு, சிகிச்சை, மற்றும் ஆளுமை உளவியல் உட்பட, கல்வி துறையில் மற்றும் உளவியல் பல துறைகள் பங்களிப்புகளுக்கான பொறுப்பாளியாகவும், மற்றும் நடத்தையியல் மற்றும் அறிவாற்றல் உளவியல் இடையிலான பரிமாற்றம் குறித்த தளத்தில் செல்வாக்கு மிக்கவராகவும் உள்ளார். அவர் சமூக கற்றல் கோட்பாட்டின் (சமூக அறிவாற்றல் கோட்பாடு என மறுபெயரிடப்பட்டது) மற்றும் தன்னிறைவுத்தன்மையின் கோட்பாட்டு கட்டமைப்பை உருவாக்கியவராகவும் அறியப்படுகிறார். மேலும், செல்வாக்குமிக்க 1961 போபோ பொம்மை பரிசோதனையின் பொறுப்பாளராகவும் இருக்கிறார். இந்த போபோ பொம்மை பரிசோதனையானது, உற்றுநோக்கிக் கற்றல் என்ற கருத்தியலை விளக்கியது.

சமூக அறிவாற்றல் கோட்பாடு என்பது மற்றவர்களை உற்றுநோக்குவதன் மூலம் மக்கள் எவ்வாறு கற்றுக்கொள்கின்றனர் என்பதைக் குறித்ததாகும். சமூக அறிவாற்றல் கோட்பாட்டின் ஒரு எடுத்துக்காட்டானது, ஆசிரியரைப் பின்பற்றும் மாணவர்களாவர். சுய திறன் என்பது "எதிர்கால சூழ்நிலைகளை நிர்வகிக்கத் தேவையான நடவடிக்கைகளை ஒழுங்கமைத்து செயல்படுத்துவதற்கான தனது திறனின் மீதான நம்பிக்கையாகும்."தெளிவுரை வழங்கினோமென்றால், சுய திறனானது, நீங்கள் நடவடிக்கை எடுக்க உங்களை நம்புகிறது. போபோ பொம்மை பரிசோதனையானது, ஆல்பர்ட் பாண்டுரா குழந்தைகளிடம், தன் முனைப்பு நடத்தை மற்றும் தன் முனைப்பற்ற நடத்தைகள் குறித்து எவ்வாறு ஆய்ந்தறிந்தார் என்பதைக் குறிப்பதாகும்.

2002 இல் நடந்த ஓர் ஆய்வானது பி. எப். ஸ்கின்னர், சிக்மண்ட் பிராய்ட் மற்றும் ஜீன் பியாஜே ஆகியோருக்கு அடுத்தபடியாக அதிகமாகக் குறிப்பிடப்பட்ட நான்காவது உளவியலாளராகவும், மிகவும் அதிகமாகக் குறிப்பிடப்பட்ட வாழும் உளவியலாளராகவும் ஆல்பர்ட் பாண்டுராவைக் குறிப்பிடுகிறது.[1] பாண்டுரா பரவலாக மிகப் பெரிய வாழும் உளவியலாளர் என்று குறிப்பிடப்படுகிறார்.[2][3][4][5] மேலும் அனைத்துக் காலங்களிலும் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய உளவியலாளர்களில் ஒருவா் எனவும் அவர் குறிப்பிபடப்படுகிறார்.[6][7]

அமெரிக்க உளவியலாளர்கள் சங்கத்தின் எண்பத்து இரண்டாவது குடியரசுத் தலைவராக 1974 ஆம் ஆண்டு பாண்டுரா தேர்ந்தெடுக்கப்பட்டார். இச்சங்கத்தின் வரலாற்றில் 48 வயதில் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைய தலைவர்களில் ஒருவராக அவர் விளங்குகிறார். 1968 முதல் 1970 வரையான அமெரிக்க உளவியலாளர்கள் சங்க அறிவியல் விவகார வாரிய உறுப்பினராக பணியாற்றினார். மேலும், ஆளுமை இதழ் மற்றும் சமூக உளவியல் இதழ் உள்ளிட்ட ஒன்பது உளவியல் பத்திரிக்கைகளின் தொகுப்புக் குழுவின் உறுப்பினராக 1963 முதல் 1972 ஆம் ஆண்டு வரையிலும் பணியாற்றினார்.[8] 82 வயதில் பண்டுராவுக்கு உளவியலுக்கான கிரேமேயர் விருது வழங்கப்பட்டது.

தொடக்க கால வாழ்க்கை

தொகு

பாண்டுரா, ஆல்பர்ட்டா நகரில், முண்டாரே என்ற இடத்தில், கிட்டத்தட்ட நான்கு நூறு மக்களைக் கொண்ட ஒரு திறந்த நகரில், ஆறு பேர் கொண்ட குடும்பத்தில் இளைய மகனாகப் பிறந்தார். இது போன்ற ஒரு தொலைதூர நகரத்தில் கல்வி கிடைப்பதில் உள்ள வரம்புகள், பாண்டுரா சுய சார்புடையவராகவும், சுய ஊக்கம் கொண்டவராகவும் வாழக் கற்றுக் கொடுத்தது. இந்த முதன்மையான வளர்ந்த குணங்கள் அவருடைய நீண்டகால வாழ்க்கையில் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.[9]

குறிப்புகள்

தொகு
  1. Haggbloom S.J. (2002). The 100 most eminent psychologists of the 20th century, Review of General Psychology, 6 (2). 139–152.
  2. "Showcasing The Very Best Online Psychology Videos". All-about-psychology.com. Archived from the original on 27 December 2010. பார்க்கப்பட்ட நாள் December 30, 2010.
  3. Foster, Christine (July 2, 2003). "STANFORD Magazine: September/October 2006 > Features > Albert Bandura". Stanfordalumni.org. Archived from the original on செப்டம்பர் 27, 2011. பார்க்கப்பட்ட நாள் December 30, 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. Vancouver, The (December 6, 2007). "Canadian-born psychology legend wins $200,000 prize". Canada.com. Archived from the original on September 3, 2011. பார்க்கப்பட்ட நாள் December 30, 2010.
  5. [1]
  6. "10 Most Influential Psychologists". Psychology.about.com. September 24, 2010. Archived from the original on ஜனவரி 21, 2016. பார்க்கப்பட்ட நாள் December 30, 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. C. George Boeree (December 4, 1925). "Albert Bandura". Webspace.ship.edu. பார்க்கப்பட்ட நாள் December 30, 2010.
  8. https://search.proquest.com/docview/614419572
  9. "Bandura, Albert." Psychologists and Their Theories for Students. Ed. Kristine Krapp. Vol. 1. Detroit: Gale, 2005. 39–66. Gale Virtual Reference Library. Web. 3 Apr. 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆல்பர்ட்_பாண்டுரா&oldid=3730473" இலிருந்து மீள்விக்கப்பட்டது