சமூக தணிக்கை

அரசும், மக்களும் இணைந்து வளர்ச்சி திட்டங்களுக்கென வழங்கப்பட்டுள்ள நிதியானது முறையாக மக்களுக்கு சென்றடைந்து உள்ளதா என்று சரிபார்த்து மக்களிடமே அறிக்கையினை சமர்பித்தல் சமூகத் தணிக்கையாகும். [1] மேலும் மக்களுக்கு சென்றடைய வேண்டிய திட்டத்தின் பயன்கள் அனைத்தும் முறையாக சென்றடைந்ததை கண்காணிப்பதற்கும், மக்களுக்கும் திட்டத்தினை செயல்படுத்துபவர்களுக்கும் இடையே உள்ள இடைவெளியை குறைப்பதற்கும் அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட செலவினத் தொகைக்கும் வேறுபாட்டினைக் காண்பதற்கும் நேர்மையான, தூய்மையான மற்றும் முறைகேடற்ற நிர்வாகத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சமூகத் தணிக்கை கொண்டு வரப்பட்டது.

சமூக தணிக்கை செயல்முறைகள்

தமிழ்நாட்டில் சமூக தணிக்கைத் திட்டத்தின் கீழ் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் குறைகள் மற்றும் புகார்கள் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் பயனர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.[2]

இவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமூக_தணிக்கை&oldid=3697356" இலிருந்து மீள்விக்கப்பட்டது